தீபாவளி விருந்தாக 7 புதிய படங்கள்

Read Time:5 Minute, 56 Second

Talaimagan.jpgதீபாவளி விருந்தாக 7 புதிய படங்கள் திரைக்கு வருகின்றன. அந்த படங்கள் வருமாறு:-
1. தர்மபுரி:- விஜயகாந்த் கதாநாயகனாக நடித்து, பேரரசு டைரக்டு செய்த படம். கதாநாயகி, லட்சுமிராய். இந்த படத்தில் விஜயகாந்த் திருமண மண்டபங்களுக்கு நாற்காலி-மேஜைகளை வாடகைக்கு விடுபவராக வருகிறார். மணிவண்ணன், பிரகாஷ்ரெட்டி (தெலுங்கு), ராஜ்கபூர், பாபி ஆகிய 4 பேரும் வில்லன்களாக வருகிறார்கள். கெட்டது பண்ணப்போனால் 40 பேர் கூட வருவார்கள். நல்லது பண்ணப்போகும்போது 4 பேர் எதிரியாக வருவார்கள். அவர்களை மீறி, கதாநாயகன் எப்படி ஜனங்களுக்கு நன்மை செய்கிறார் என்பதே கதை.

2. தலைமகன்:- சரத்குமார் கதாநாயகனாக நடித்து, டைரக்டு செய்த படம். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து இருக்கிறார். தண்ணீர் பிரச்சினைதான் இந்த படத்தின் மைய கரு.

படத்தில், சரத்குமார் பத்திரிகை ஆசிரியராக வருகிறார். நேர்மையாகவும், துணிச்சலாகவும் பத்திரிகை நடத்தும் அவரையும், பத்திரிகையையும் அழிப்பதற்கு ஒரு கும்பல் முயற்சிக்கிறது. அந்த கும்பலின் சதித்திட்டங்களை, சரத்குமார் எப்படி முறியடிக்கிறார்? என்பது கதை.

3. வரலாறு:- அஜீத்குமார் நடித்த `காட்பாதர்’ படம்தான், `வரலாறு’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த படத்தில் அஜீத் 3 வேடங்களில் நடித்து இருக்கிறார். கே.எஸ்.ரவிகுமார் டைரக்டு செய்து இருக்கிறார்.

அஜீத், ஒரு பரதநாட்டிய கலைஞர். நடனம் ஆடி ஆடி, அவருடைய தோற்றத்தில் பெண்மைத்தனமும், நளினமும் வந்து விடுகிறது. அவருக்கு, கனிகாவை பெண் கேட்கிறார்கள். “பார்ப்பதற்கு பொம்பளை மாதிரி இருக்கும் இவருக்கு நான் எப்படி மனைவியாகி, குழந்தை பெறுவது?” என்று கனிகா அவமரியாதை செய்து விடுகிறார். அவரை, அஜீத் கடத்திப்போய் கற்பழித்து விடுகிறார். கனிகாவுக்கு பிரசவத்தில் இரண்டு ஆண் குழந்தைகள் பிறக்கின்றன. அதில் ஒருவன் தாதாவாகவும், இன்னொருவன் அந்த தாதாவை எதிர்த்து நிற்கும் நல்லவனாகவும் வளர்கிறார்கள். இப்படி போகிறது, `வரலாறு’ படத்தின் கதை.

4. வல்லவன்:- சிலம்பரசன் கதாநாயகனாக நடித்து, டைரக்டு செய்த படம். அவருக்கு ஜோடியாக நயன்தாரா, ரீமாசென், சந்தியா ஆகிய 3 கதாநாயகிகள் நடித்து இருக்கிறார்கள்.

ஒரு கல்லூரி பின்னணியில் அமைந்த கதை. சிலம்பரசன் கல்லூரி மாணவராக வருகிறார். கதைப்படி, ரீமாசென் ஏறக்குறைய வில்லி. `படையப்பா’ படத்தில் ரஜினிகாந்தும், ரம்யாகிருஷ்ணனும் அடிக்கடி மோதிக்கொள்வது போல், இந்த படத்தில் சிலம்பரசனும், ரீமாசென்னும் மோதிக்கொள்கிறார்கள். இந்த மோதலில், யார் ஜெயிக்கிறார்கள்? என்பதே கதை.

5. வாத்தியார்:- அர்ஜ×ன் நடித்த படம். அவருக்கு ஜோடி, புதுமுகம் சுஜா. இந்த படத்தை ஏ.வெங்கடேஷ் டைரக்டு செய்து இருக்கிறார்.

ஒரு மோசமான அரசியல்வாதி தனது சுயநலத்துக்காக, ஒரு பள்ளிக்கூடத்துக்கு தீ வைக்கிறான். அந்த விபத்தில் அப்பாவி மாணவ-மாணவிகள் கருகி பலியாகிறார்கள். இதை நேரில் பார்க்கும் பள்ளிக்கூட ஆசிரியர் அர்ஜ×ன், அந்த அரசியல்வாதியை பழிவாங்குவதற்காக தாதாவாக மாறுகிறார். அந்த அரசியல்வாதி, முதல்-அமைச்சர் ஆவதற்காக கனவு காண்கிறான். அவனுடைய ஒவ்வொரு முயற்சிகளையும் முறியடித்துக் காட்டுகிறார், அர்ஜ×ன்.

6. வட்டாரம்:- ஆர்யா நடித்து, சரண் டைரக்டு செய்த படம். இந்த படத்தில் அர்ஜ×ன் ஜோடியாக புதுமுகங்கள் கீரத் பட்டேல், அதிசயா ஆகிய இருவரும் நடித்து இருக்கிறார்கள்.

அவன் பெயர், `பர்மா.’ வெளிநாட்டில் இருந்து துப்பாக்கிகளை வரவழைத்து விற்பனை செய்வது இவன் தொழில். இவனுடைய வாழ்க்கையில் மூன்று எதிரிகள் குறுக்கிடுகிறார்கள். அவர்களை, பர்மா எப்படி எதிர்கொண்டு வெற்றி பெறுகிறான்? என்பது கதை.

7.:- ஜீவா கதாநாயகனாக நடித்த படம். கதாநாயகி, நயன்தாரா. `இயற்கை’ படத்தை இயக்கிய ஜனநாதன் டைரக்டு செய்து இருக்கிறார்.

மாநகராட்சியில், கொசுக்களை ஒழிக்க மருந்து அடிக்கும் அடிமட்ட தொழிலாளி அவன். அப்பாவியான அவன், அரிவாள் தூக்கவேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. அது ஏன்? என்பதை `சஸ்பென்சாக’ வைத்து இருக்கிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்: இலங்கை வெற்றி
Next post பிரான்சு நாட்டில் பொது இடங்களில் புகைபிடிக்கத்தடை அடுத்த ஆண்டு நடைமுறைக்கு வருகிறது