By 30 July 2020 0 Comments

தீண்டும் இன்பம் !! (அவ்வப்போது கிளாமர்)

திலீப்… சென்னையில் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் தலைமைப் பொறியாளர். ஒருநாள் புனே கிளைக்கு மாற்றப்பட்டான். குடும்பத்தையும் நண்பர் களையும் பிரிய மனம் வரவில்லை. ஒரு முடிவுக்கு வந்தவனாக, தலைமை செயல் அதிகாரியிடம் ராஜினாமா கடிதம் கொடுத்தான். அதை ஏற்க மறுத்தார். ‘புனே கிளை பலவீனமான நிலையில் உள்ளது. உன்னைப் போன்ற திறமையும் அனுபவமும் உள்ளவனால்தான் மேம்படுத்த முடியும். நிலைமை சீரானதும் சென்னைக்குத் திரும்பி விடலாம்’ என்று சமாதானப்படுத்தினார். திலீப் புனேவுக்கு கிளம்பினான்.

புனேயில் எப்போதும் எதையோ பறி கொடுத்தவன் போன்ற முகத்துடன் இருந்தான் திலீப். அவனுடைய மேலதிகாரி அனுஜா இதை கவனித்தாள். ஒருநாள் அவனை வலுக்கட்டாயமாக சாப்பிட வெளியே அழைத்துச் சென்றாள். அவள், திலீப்பை விட 10 வயது மூத்தவள்… கேரளப் பெண்… நன்றாகத் தமிழ் பேசுவாள். அப்பாவும் அம்மாவும் கொச்சினில் இருந்தார்கள். தங்கைகளுக்குத் திருமணம் செய்து கொடுத்து விட்டு, புனேயில் தனியாக வாழ்ந்து வந்தாள். திலீப்பின் வருகை அவளுக்கு ஆறு தலாக இருந்தது. உறவு வளர்ந்தது. ஒரே வீட்டில் தங்கும் அளவுக்கு நெருக்கமானார்கள்.

நெருக்கம் காதலானது. அலுவலகத்தில் எல்லோரும் இவர்கள் உறவை கேலி செய்து, காதுபட பேச ஆரம்பித்த போதுதான் திலீப், அனுஜாவை திருமணம் செய்ய முடிவெடுத்தான். வீட்டில் அப்பா, ‘அனுஜா, அவனை மயக்கி கைக்குள் போட்டுக் கொண்டாள்’ எனக் கத்தினார், திட்டினார். பெற்றோர் எதிர்ப்பையும் மீறி, அனுஜாவை திருமணம் செய்து கொண்டான் திலீப். இன்று இருவரும் சந்தோஷமாகத்தான் வாழ்கிறார்கள்.

ஆண், தன்னைவிட வயதில் மூத்த பெண்ணை திருமணம் செய்வது இன்றும் தவறான கண்ணோட்டத்தோடு தான் பார்க்கப்படுகிறது. உண்மையில் இது இயற்கையான விஷயமே. ஆண், 10 வயது குறைவான பெண்ணை திருமணம் செய்தால் ‘அவன் கில்லாடிப்பா… சின்னப் பொண்ணை வளைச்சுட்டான் பாரு’ என்று பாராட்டுவார்கள். பெண், தன்னைவிட வயதில் குறைந்த ஆணை திருமணம் செய்தால் ‘இத்தனை வயசாகியும் ஆசை அடங்கல பாரு’ என்பார்கள். ஆணுக்கு மட்டும் எந்த வயதிலும் ஆசை வரலாம். பெண் மட்டும் குறிப்பிட்ட வயதுக்குள் திருமணம் செய்து தன் ஆசைகளையும் நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்பதை கட்டாய ஒழுக்கமாக வைத்திருக்கிறது நம் சமூகம்.

இந்த உறவை ‘May December Relationship’ என்கிறார்கள். வயதில் மூத்த பெண்ணுக்கு மனமுதிர்ச்சி அதிகமாக இருக்கும். எனவே, பார்ட்னருக்கு எல்லாவற்றையும் சொல்லிக் கொடுத்து, தகுந்த துணையாக மாற்றுவதும் எளிது. துணை இளமையாக இருப்பதால் விறைப்புத்தன்மை வெகுநேரம் நீடித்து இருக்கும்… ஒன்றுக்கு மேற்பட்ட முறைகளும் உறவில் ஈடுபடலாம்… அதிக சுகம் பெறலாம். ஆணால் வயதில் மூத்த பெண்ணை எளிதாக திருப்திப்படுத்தவும் முடியும்.

45 வயதுக்கு மேல் பெண்களுக்கு உடலுறவின் போது குறியில் நீர் சுரப்பது குறைந்து வலியும் எரிச்சலும் ஏற்படும். லூப்ரிகேஷன்களை பயன்படுத்தி சரி செய்யலாம். உணர்ச்சிகளைத் தூண்ட அதிக நேரம் ஃபோர் ப்ளே தேவைப்படும். வயதாகும் பொழுது ஏற்படும் பிரச்னைகளை மருத்துவ சிகிச்சையின் மூலம் சரி செய்து கொள்ள வேண்டும்.

அமெரிக்க பெண் மருத்துவர் ஐரா ரீஸ், ‘செக்ஸ் சார்ந்து மட்டும் இதுபோன்ற உறவுகள் ஏற்படுவதில்லை. அது இரண்டாம் பட்சமே. நடைமுறை சார்ந்த உறவாலும் சரியான பகிர்தலுக்காகவுமே ஏற்படுகிறது’ என்கிறார். இந்த உறவை ‘Intergenerational Relationship’ என்றும் சொல்கிறார்கள். வயதில் வித்தியாசம் இருந்தாலும், இருவரும் திறந்த மனதுடன் இருந்தால் உறவு என்றென்றும் இனிக்கும்.Post a Comment

Protected by WP Anti Spam