திருகோணமலை புல்மோட்டையில் தொழில்பேட்டை அமைக்கும் பாரிய திட்டம் இன்று அமைச்சில் ஆராய்வு

Read Time:1 Minute, 49 Second

ANI.smileys_wichtig.gifபுல்மோட்டை பிரதேசத்தின் உட்கட்டiமைப்பு வசதிகளைத் துரிதமாக மேம்படுத்தி கைத்தொழில் பேட்டை அமைப்பது தொடர்பாக ஆராய்வதற்கான உயர்மட்டக் கூட்டம் இன்று 10ம் திகதி கொழும்பில் நடைபெறவிருக்கிறது. கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் குமார வெல்கம தலைமையில் பாதுகாப்பு அமைச்சின் கேட்போh கூடத்தில் இக்கூட்டம் நடைபெறவிருக்கிறது. இல்மனைட் கனிய வளத்தை அடிப்படையாகக் கொண்ட கைத்தொழில் பேட்டை அமைப்பதை நோக்கமாகக் கொண்டு கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

இத்திட்டத்தின் கீழ் புல்மோட்டைப் பிரதேசத்தின் போக்குவரத்து நெடுஞ்சாலைகள், தொலைபேசி, குடிநீர் வசதிகள் மேம்படுத்தப்படவிருக்கின்றன இக்கூட்டத்திற்கு உட்கட்டமைப்பு அபிவிருத்தி நடவடிக்கைகளோடு தொடர்புபடும் அமைச்சுக்களின் உயரதிகாரிகள் அழைக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஆலோசனையின் பேரில் மேற்கொள்ளப்படும் இந்நடவடிக்கையின் மூலம் பிரதேசத்திலுள்ள .இளைஞர், யுவதிகளுக்கு வேலை வாய்ப்பு வசதி கிடைக்கும். பிரதேச மக்களின் வாழ்க்கைத் தரமும் மேம்படும் என அமைச்சின் அதிகாரியொருவர் கூறினார்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ஈராக்கில் உணவில் விஷம் :7 போலீசார் பலி
Next post உப்புல் தாரங்கா சதம்! சிறிலங்கா 285 ரன்கள் குவித்தது!