மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றியே தீருவோம்!! (கட்டுரை)

Read Time:11 Minute, 48 Second

நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் குருணாகல் மாவட்டத்தில் அதிக அளவிலான விருப்பு வாக்குகளை பெற்று சரித்திரம் படைத்த பிரதமர் மஹிந்த ராஜபக்சவை எமது சகோதர பத்திரிகையான தினமின அண்மையில் பேட்டிகண்டது. அப்பேட்டியில் அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அவற்றுக்கு அவர் வழங்கிய பதில்களும் வருமாறு:

கேள்வி: அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு கிடைத்த அமோக வெற்றியைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.

பதில்: பொதுத் தேர்தலுக்கான பிரகாரம் ஆரம்பிக்கப்பட்டபோதே வெற்றி கிடைக்கும் என்பது நாம் எதிர்பார்த்திருந்த ஒன்றுதான் ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதல் காரணமாக மக்கள் நிர்க்கதியான நிலையில் இருந்தனர். முன்னய அரசாங்கம் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தவறிவிட்டது. அதேபோல் 30 வருடகால பயங்கரவாத யுத்தத்தின் போதும் நாங்கள் தான் நாட்டை மீட்டெடுத்தோம். எமது தாய்நாட்டை மீட்டெடுத்ததற்குக் கூட எதிர்ப்பு தெரிவித்த எதிர்க் கட்சியினர் இருந்த நாட்டிலேயே அதனை நாம் செய்தோம் நல்லாட்சி அரசாங்கத்தால் எந்தவொரு அபிவிருத்தியும் செய்யப்படவில்லை.

ஜனதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் ஏற்பட்டிருந்த இழுபறி காரணமாக நாட்டின் எதிர்காலம் சிக்கலில் இருந்தது.

நாட்டில் இரண்டு வரை அரசியல் குழுக்கள் இருந்ததாக நான் நம்புகிறேன். அதில் ஒன்று நாட்டை நேசித்தது. மற்றையது நாட்டை அழித்தது. இந்த இரு குழுக்களுக்கு இடையில் தான் தேர்தல் நடந்தது. இதில் முன்னால் கொல்லப்பட்ட நாட்டை நேசிக்கும் குழுவினரையே மக்கள் தெரிசெய்துள்ளனர்.

கேள்வி: 2/3 பெரும்பான்மை பெறுவதை விடுத்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு தேர்தலில் வெற்றிபெற 113 ஆசனங்களைக் கூட பெற்றுக்கொள்ள முடியாது என்று ஐக்கிய மக்கள் சக்தி தொடர்ந்து கூறி வந்தது. இந்த நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 2/3 பெரும்பான்மையை பெற்றுள்ளது. இந்த வெற்றியின் ரகசியம் என்ன?

பதில்: இதில் எந்த ரசியமும் இல்லை. நாங்கள் எப்போது மக்கள் மீதான அக்கறையை மனதில் வைத்தே தீர்மானங்களை எடுத்தோம். நல்லாட்சி அரசாங்கத்தை தெரிவு செய்த தவறுக்காக மக்கள் இன்னும் கவலைப்படுகின்றனர். நாம் அந்த தவறை செய்யவில்லை. கடந்த ஐந்து வருடங்களில் நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியில் நாடு பின்னோக்கிச் சென்றது. கொரோனா வைரஸை ஒரு உதாரணமாகக் கொள்வோம். இந்த நேரத்தில் நாம் அதிகாரத்தில் இல்லாதிருந்தால் பலர் இந்நேரம் புதை குழிக்குள் இருப்பார்கள். ஜனாதிபதி கோட்டாபய முப்படையினர், பொலிஸ் மற்றும் சுகாதார துரையினரை கூட்டிணைத்து நாட்டை காப்பாற்றினார். கொரோனா சமயத்தில் நாம் மக்களுக்கு நிதியுதவி வழங்கியதுடன் எந்த குறைப்பாடும் இல்லாது உணவுப் பொருட்களையும் விநியோகித்தோம்.

கேள்வி: எதற்காக நீங்கள் 2/3 பெரும்பான்மையை கேட்டீர்கள்? அது தேவையானதா?

பதில்: ஆம். கண்டிப்பாக 2/3 பெரும்பான்மை எமக்கு தேவைபடுகிறது. அரசியலமைப்பு மூலம் நல்லாடசி அரசாங்கம் நாட்டில் ஒரு குழப்ப நிலையை ஏற்படுத்தியது 19 ஆம் திருத்த சட்டம் ஒரு முட்டுக்கட்டை இதை நாம் கடந்த ஐந்து வருடங்களில் அனுபவித்திருக்கிறோம். நாட்டின் எதிர்கால முன்னேற்றத்துக்கு அது ஒரு தடையாகும். நல்லாட்சி அரசாங்கம் ஒரே ஒரு குடும்பத்தை மையப்படுத்தி அரசியலமைப்பை வகுத்தது. இதுபோன்று நாட்டின் அரசியல் சரித்திரத்தில் ஒருபோதும் இவ்வாறு நடந்ததில்லை..

நாங்கள் எப்போதுமே நாட்டையும் மக்களையும் பற்றி சிந்தித்தே தீர்மானங்களை எடுத்தோம். அதனைத் தொடர்வதற்கு எமக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கம் ஆகியவே நெருங்கிப் பணிபுரிவதை உறுதிப்படுத்தும் அரசியலமைப்பொன்று தேவை. அவ்வாறான ஒரு முறைமைக்கு நடைமுறை சாத்தியம் வழங்கவே புதிய அரசியலமைப்பு தேவைப்படுகிறது.

கேள்வி: எதிர்க் கட்சியினரும் அதனுடன் தொடர்புடையவர்களும் நீங்கள் சர்வாதிகார பாதையில் செல்வதாக குற்றம்சாட்டுகின்றனரே. அதில் ஏதும் உண்மை இருக்கிறதா?

பதில்: அது ஒரு அப்பட்டமான பொய். நாங்கள் நாட்டை ஆட்சி செய்தபோது மக்கள் சுதந்திரமாக இருந்தார்களா இல்லையா என்று அவர்களையே கேழுங்கள். அவர்களின் பதில் என்னவாக இருக்கும் என்று எனக்குத் தெரியும் சர்வாதிகாரம் பற்றி பேசுவோருக்கு உண்மையிலேயே அது என்னவென்று தெரியாது. நாம் எப்போதும் சர்வாதிகாரத்தை பின்பற்றியதில்லை. கடந்த ஆட்சியில் சர்வாதிகார அபிவிருத்தி இருந்தது. எம்மீது குற்றச் சாட்டுகளை சுமத்தாமலே எம்மை கைது செய்தார்கள். வேண்டுமென்றே சுமத்திய குற்றச்சாட்டுகளை வைத்துக்கொண்டு யுத்த ஹீரோக்களையும் உள்ளே தள்ளினார்கள்.

அவர்களது அக்கதைக்கேற்ப சட்டங்களை நிறைவேற்றிக்கொண்டு மக்கள் அபிப்பிராயத்துக்கு மாறாக தீய செயல்களில் ஈடுபட்டனர். அதேநேரம் நாம் பொதுமக்களின் கருத்துகளுக்கும் பிரச்சினைகளுக்கு ஏற்றவாறு செயற்பட்டோம்.

கேள்வி: இம்முறை அமைச்சரவை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் உள்ளது. எதிர்காலத்தில் இது பிரச்சினைகளை ஏற்படுத்தாதோ?

பதில்: இல்லை. ஒருபோதும் இல்லை. அமைச்சரவை சிறிய அளவில் இருந்தாலும் அது முறையாக அமைந்துள்ளது. உலகப் பொருளாதாரமே இப்போது பல காரணங்களால் சீர்குலைந்துள்ளது. சமூக மற்றும் கலாசார சீரழிவும் உள்ளது. அரசியல் தலைவர்களுக்கும் நாட்டின் தலைமைகளுக்கும் பிரச்சினைகளைத் தீர்க்கும் சுமை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மத அரசியல் பேதமின்றி நாட்டின் எதிர்காலத்தை கட்டியெழுப்ப வருமாறு நாம் அழைப்பு விடுக்கிறேன்.

கேள்வி: ஸ்ரீலங்கா பொதுபெரமுனவின் தேசிய பட்டியல் உறுப்பினர்கள் தொடர்பாக திருப்தியடைகிறீர்களா?

பதில்: நிச்சயமாக வேறு ஒரு தடவையிலும் இல்லாதவாறு இம்முறை எமது தேசிய பட்டியலில் படித்த அறிவுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்ய முடிந்துள்ளது. அதில் கலாநிதிகள், ஆசிரியர்மார், சட்டத்தரணிகள், சமூக சேவகர்கள் மற்றும் டாக்டர்கள் என சகல தரப்பினரும் இடம்பெற்றுள்ளனர். அவர்களது அறிவைக் கொண்டு நாட்டின் அபிவிருத்தியை ஏற்படுத்த முடியும்.

கேள்வி: லட்சக்கணக்கான பட்டதாரிகளுக்கும் க.பொ. த சாதாரண தரத்தில் சித்தியடைந்தோருக்கும் தொழில் வாய்ப்புகளை வழங்கப்போவதாக அரசியல் மேடைகளில் கூறினீர்களே இது சாத்தியமாகுமா?

பதில்: ஆம். மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு நாம் முழு மூச்சுடன் செயற்படுவோம். நிதி நிலைமை சீராக இல்லாத நிலையிலும் நாம் எந்த வாக்குறுதிகளையும் வழங்கினால் அதனை நிச்சயமாக நிறைவேற்றுவோம். புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடனேயே பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கினோம். ஆனால் தேர்தல் காரணமாக அந்த நியமனங்கள் தற்காலிகமாக பின்போடப்பட்டுள்ளன.

கேள்வி: குருணாகல் மாவட்டத்தில் போட்டியிட்ட நீங்கள் இலங்கை தேர்தல் சரித்திரத்தில் உள்ளாதவாறு அதிகளவிலான விருப்பு வாக்குகளை பெற்றுள்ளதையிட்டு என்ன நினைக்கிறீர்கள்?

பதில்: என்மீது நம்பிக்கை வைத்துள்ள குருணாகல் மாவட்ட வாக்காளர்களுக்கு நான் முழு மனதுடன் நன்றி தெரிவிக்கிறேன். இந்தமுறை தேர்தல் பெறுபேறுகள் நான் மட்டுமன்றி எமது மொத்த அணியும் மக்களுடனேயே இருக்கிறோம் என்பதை காட்டியுள்ளது.

கேள்வி: உங்களது அமோக வெற்றியின் பின்னால் உள்ள சக்தி எது?

பதில்: நாம் நாட்டுக்கு ஆற்றியுள்ள சேவைகளுக்கு மக்கள் எம்மீது நம்பிக்கை வைத்துள்ளனர். பசில் ராஜபக்சவும் பலம் மிக்க ஒரு அணியும் இந்த பாரிய செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தனர். தேர்தலுக்கு நாம் நேரகாலத்துடன் தயாராகினோம்.

இம்முறை நாம் பதாதைகள் மற்றும் கட்அவுட் கலாசாரத்துக்கு முடிவு கட்டிவிட்டோம். இதனால் பல்வேறு அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்களுக்கிடையே மோதல்கள் தவிர்க்கப்பட்டன. இதனால் தேர்தல் அமைதியாக நடந்தது. இதற்கான அனைத்து பெருமையும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கே செல்லவேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜெய் வேட்டையாடிய 5 தமிழ் நடிகைகள்!! (வீடியோ)
Next post முத்த மழைக்குக் குளிர்ந்து போகும் பெண்கள்!! (அவ்வப்போது கிளாமர்)