சர்க்கரைநோய்க்கு மருந்தாகும் பாகற்காய்!! (மருத்துவம்)

Read Time:4 Minute, 57 Second

நாட்டு மருத்துவத்தில் நலம் தரும் மருந்துகள் குறித்து அறிந்து வருகிறோம். பாதுகாப்பான, பணச்செலவில்லாத வகையில் கோடைகாலத்தில் தாராளமாக கிடைக்கும் பொருட்களை மருந்தாக்கி பயன்பெற்று வருகிறோம். அந்த வகையில் எளிதாக கிடைக்கும் பாகற்காயின் நன்மைகள் குறித்து பார்க்கலாம். பாகற்காயின் கசப்பு தன்மைக்காகவே இதனை பயன்படுத்த தயங்குவோர் ஏராளம். ஆனால் இதன் இலை, காய், பழம், வேர் என அனைத்துமே மிகுந்த மருத்துவப் பயன்களை உள்ளடக்கியது. பல்வேறு நோய்களை போக்கும் நோய் நீக்கியாக விளங்குகிறது. குறிப்பாக பெண் மலட்டுத்தன்மைக்கு கைகண்ட மருந்தாகிறது. சர்க்கரைநோய்க்கு மிகச்சிறந்த மருந்தாகும் பாகற்காய் நாள்பட்ட கழிச்சலை கட்டுப்படுத்துகிறது. செரிமானத்தை சீராக்கும்.

பித்த மேலீட்டாலும், சர்க்கரை நோயாலும் தோலில் ஏற்படும் எரிச்சல், அரிப்புக்கு கைமேல் பலன் தருகிறது. தோல் நோய்களை விரட்டி ேதாலுக்கு வலுவூட்டி பளபளப்பாக்குகிறது. இத்தனை பயன்களை தன்னுள்ளே அடக்கியிருக்கும் பாகற்காயை பயன்படுத்தி மருத்துவம் செய்யும் முறைகள் குறித்து அறிந்து கொள்வோம்.

தோல் நோய்களை போக்கி, உள்ளங்ைக, பாதத்தில் ஏற்படும் எரிச்சலை போக்கும் பாகற் இலை தேனீர் தயாரிக்கலாம். இதற்கு தேவையானது பாகல் இலை ஒரு கைப்பிடி அளவு. செய்முறை: பாகல் இலையை பறித்து கழுவி சுத்தம் செய்து அதனை தண்ணீர் விடாமல் அரைத்து அதன் சாற்றை பிழிந்து எடுத்து மேல் தோல், மற்றும் எரிச்சல் அரிப்பு உள்ள இடங்களில் மேல்பூச்சாக தடவி வர பிரச்னை தீரும்.

இதனை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி தேனீராகவும் குடிக்கலாம். தொடர்ந்து பாகல்சாறு குடித்துவர பல்வேறு நோய்களுக்கு தீர்வு கிடைக்கும். கழிச்சலுக்கு பாகற் இலையை பயன்படுத்தி மருந்து தயாரிக்கும் முறையை பார்க்கலாம்.
தேவையாக பொருட்கள்: பாகல் இலைசாறு, சீரகம், நெய். செய்முறை: ஒரு வாணலியில் கால் தேக்கரண்டி நெய்விட்டு சூடானதும் அதில் சீரகப்பொடி கால் தேக்கரண்டி சேர்த்து வறுத்து அதில் கால் டம்ளர் அளவு பாகல் இலை சாறு சேர்த்து கொதிக்கவிட்டு ஆறவைத்து தொடர்ந்து இரண்டு மூன்று நாட்கள் குடித்து வர கழிச்சல் கட்டுப்படும்.

பாகற் இலையை பயன்படுத்தி சர்க்கரை நோயை தணிக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். இதற்கு தேவையானவை: பாகற் இலை சாறு, வெந்தயப்பொடி, பெருங்காயத்தூள், மஞ்சள்பொடி. செய்முறை: 100மில்லி அளவு பாகற்இலை சாறு எடுத்து அதில் அரை தேக்கரண்டி மஞ்சள்பொடி, பெருங்காயதூள், வெந்தயப்பொடி சேர்த்து கலக்கி தினமும் காலையில் குடித்துவர படிப்படியாக சர்க்கரை நோய் குறையத்துவங்கும்.

மலச்சிக்கல், மூலம் மற்றும் வயிற்று புழுக்களை போக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். இதற்கு தேவையான பொருட்கள்: பாகற்காய் சாறு, கடுக்காய் பொடி, சமையல் உப்பு. செய்முறை: பாகற்காய் சாறில் இரண்டு சிட்டிகை சமையல் உப்பு, அரை தேக்கரண்டி கடுக்காய் பொடி சேர்த்து கலக்கி தினமும் படுக்கப்போகும் முன்பு தொடர்ந்து இதனை குடித்துவர மேற்சொன்ன பிரச்னைகளுக்கு எளிய தீர்வு கிடைக்கும். பல்வலியை போக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். பல்கூச்சம் மற்றும் வலியை போக்க மிளகுப்பொடி மற்றும் உப்பு கலந்து பற்றுப்போட பல் பிரச்னைகள் தீரும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பசியை தூண்டும் நார்த்தங்காய்!! (மருத்துவம்)
Next post திருமணத்திற்கு முன்னால் ஒரு டூயட்… !! (மகளிர் பக்கம்)