இந்தியாவின் 38,000 சதுர கி.மீ நிலத்தை கபளீகரம் செய்த சீனா!! (கட்டுரை)

Read Time:5 Minute, 2 Second

இந்திய_ சீன எல்லையில் உள்ள லடாக்கில் இந்தியாவுக்குச் சொந்தமான 38,000 சதுர கிலோ மீற்றர் நிலத்தை சட்டத்திற்கு விரோதமாக சீனா ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது. இத்துடன் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் 5,180 சதுர கி. மீ பரப்பளவு கொண்ட நிலத்தை பாகிஸ்தான் ஆக்கிரமித்து சீனாவுக்கு கொடுத்துள்ளது என்று நேற்று லோக் சபாவில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.

லோக் சபாவில் பேசிய ராஜ்நாத் சிங் “சீனா_ இந்தியா இடையே எல்லைப் பிரச்சினை இன்னும் தீரவில்லை. பாரம்பரிய முறையில் எல்லைகளை வரையறுப்பதை சீனா ஏற்க மறுத்து வருகிறது. லடாக்கில் இந்தியாவுக்குச் சொந்தமான 38,000 சதுர கி. மீ நிலத்தை சட்டத்திற்கு விரோதமாக சீனா ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது. 1963இல் சீனா_ பாகிஸ்தான் எல்லை ஒப்பந்தம் ஏற்பட்டது. இதன் கீழ், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் 5,180 சதுர கி. மீ பரப்பளவை பாகிஸ்தான் ஆக்கிரமித்து சீனாவுக்கு கொடுத்துள்ளது. நாட்டின் இறையாண்மையை, பாதுகாப்பை உறுதி செய்வதற்கு இந்திய பாதுகாப்புப் படை எந்த விலை கொடுப்பதற்கும் தயாராக இருக்கிறது. வலுக்கட்டாயமாக எல்லையில் ஆக்கிரமிப்பு செய்வது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்று சீனாவிடம் இந்தியா தெரிவித்துள்ளது”என்றார்.

இதுதொடர்பாக கேள்விகளை கேட்பதற்கு காங்கிரஸ் கோரிக்கை வைத்தது. ஆனால், சபாநாயகர் ஓம் பிர்லா ஏற்றுக் கொள்ளவில்லை இதையடுத்து, காங்கிரஸ் உறுப்பினர்கள் லோக் சபாவில் இருந்து வெளியேறினர்.

இந்திய_ – சீன எல்லையில் கடந்த மே மாதத்தில் இருந்து பதற்றம் நீடித்து வருகிறது. கடந்த ஜூன் 15ஆம் திகதி கிழக்கு லடாக்கில் கல்வான் பளளத்தாக்கில் 20 இந்திய இராணுவ வீரர்களை சீன இராணுவம் கொடூரமாக தாக்குதல் நடத்தி கொன்று இருந்தது.

இதே தருணத்தில் சீனா தரப்பிலும் 60 வீரர்கள் கொல்லப்பட்டு இருந்ததாக இந்திய தரப்பில் செய்தி வெளியானது. ஆனால், இதை இதுவரை சீனா ஏற்றுக் கொள்ளவில்லை.

இந்த நிலையில், இருதரப்புக்கும் இடையே ​ெமாஸ்கோவில் கடந்த வாரங்களில் அமதிக்கான பேச்சுவார்த்தை நடத்தது. இதில் 5 அம்சக் கொள்கைகளை ஏற்றுக் கொள்வதாக இரண்டு தரப்பிலும் கையெழுத்தானது. அதில், முக்கியமாக இருதரப்பிலும் எல்லையில் படைகளை வாபஸ் பெறுவது, பதற்றத்தைத் தணிப்பது என்பவை இருந்தன. ஆனால், அதற்கான அறிகுறிகள் இல்லை என்றே செய்திகள் வெளியாகி இருந்தன.

இதை உறுதி செய்யும் வகையில் நேற்று லோக்சபாவில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் பேசியுள்ளார்.கால்வன் பள்ளத்தாக்கில் இந்திய இராணுவ வீரர்கள் அளவு கடந்த பொறுமையை காட்டியிருந்தனர். எல்லை வரையறைகளை சீனா ஒப்புக் கொள்ள மறுக்கிறது

எல்லை கட்டுப்பாட்டுக் கோடு தொடர்பாக இருநாடுகளிடையே கருத்து வேறுபாடு இருக்கிறது. இதனால் இருநாடுகளிடையேயான எல்லை பிரச்சனைக்கு எந்த தீர்வும் காணப்படவில்லை. இருதரப்பும் ஒப்புக் கொள்ளக் கூடிய ஒரு தீர்வு எட்டப்படவில்லை. எல்லைப் பகுதிகளிலும் சீனாவின் கட்டுப்பாட்டு பகுதிகளிலும் இராணுவ பட்டாலியன்களை பெருமளவில் குவித்து வைத்திருக்கிறது சீனா. எல்லைப் பகுதிகளில் சீனாவின் நடவடிக்கைகளுக்கு இந்திய தரப்பில் பதிலடி தரப்பட்டு வருகிறது. இவ்வாறு ராஜ்நாத்சிங் கூறினார்.

Email Facebook Twitter

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கலையால் எங்களை வெளிப்படுத்துகிறோம்!! (மகளிர் பக்கம்)
Next post வீடியோ ஆதாரத்துடன் நடந்த மர்மம்!! (வீடியோ)