சிறுநீர்தாரை எரிச்சலை போக்கும் மருத்துவம்!! (மருத்துவம்)

Read Time:5 Minute, 31 Second

நமக்கு அருகில், எளிதில் கிடைக்க மூலிகைகள், உணவுக்காக பயன்படுத்த கூடிய பொருட்களை பயன்படுத்தி பயனுள்ள மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், சிறுநீர்தாரை எரிச்சல், கடுப்பு, அடைப்பு போன்ற பிரச்னைக்களுக்கான மருத்துவத்தை பார்க்கலாம். நீர்சத்து குறைந்து சிறுநீர் வெளியே செல்லாத நிலை, தொற்றுகள் ஏற்பட்டு சிறுநீரோடு சேர்ந்து ரத்தம் வெளியேறுதல், உடலில் நீர் குறைந்த நிலை, சிறுநீர் பையில் கற்கள், தொற்று ஏற்படுவது போன்ற காரணங்களால் சிறுநீர் தாரையில் எரிச்சல் ஏற்படும்.

இப்பிரச்னைகளுக்கு சிறுநெறிஞ்சில், ஆவாரை, சோம்பு, சந்தனப்பொடி ஆகியவை மருந்துகளாக விளங்குகிறது. சிறுநெறிஞ்சிலை பயன்படுத்தி சிறுநீர்தாரையில் ஏற்படும் எரிச்சலை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: சிறுநெறிஞ்சில், சந்தனப்பொடி, பனங்கற்கண்டு. செய்முறை: சிறுநெறிஞ்சில் ஒருகைபிடி அளவுக்கு எடுக்கவும். இதனுடன் சிறிது சந்தனப்பொடி, பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துவர சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சல் குணமாகும். சிறுநெறிஞ்சில் மஞ்சள் நிற பூக்களை கொண்டது.

கூர்மையான முட்களை உடைய இது அற்புதமான மருத்துவ குணத்தை பெற்றுள்ளது. ஈரலில் ஏற்படும் தொற்றுகளை போக்கும். மஞ்சள் காமாலையை குணப்படுத்த கூடியது. வெள்ளைப்போக்கு பிரச்னையை தீர்க்கும் தன்மை கொண்டது. வீக்கத்தை கரைக்க கூடியது. சிறுநெறிஞ்சில் இலை, விதை, பூ என அனைத்து பாகங்களும் மருந்தாகிறது. புளிச்சை கீரை பூக்களை பயன்படுத்தி சிறுநீர்தாரை எரிச்சலுக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: புளிச்சை கீரை பூக்கள், சோம்பு, பனங்கற்கண்டு. செய்முறை: அரை ஸ்பூன் சோம்பு எடுக்கவும்.

இதனுடன் 5 புளிச்சைக்கீரை பூக்கள், சிறிது பனங்கற்கண்டு சேர்க்கவும். இதனுடன் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி குடித்துவர சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சல் சரியாகும். புளிப்பு சுவை உடைய புளிச்சை கீரை பல்வேறு நன்மைகளை கொண்டது. வெள்ளைபோக்கு பிரச்னையை தீர்க்கவல்லது. பூஞ்சை காளான்களை அழிக்க கூடியது. அற்புதமான மருந்தான சோம்பு சிறுநீரை வெளித்தள்ளும் தன்மை கொண்டது. ஆவாரம் பூவை பயன்படுத்தி மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: ஆவாரம்பூ, நன்னாரி பொடி, பனங்கற்கண்டு.

செய்முறை: ஆவாரம் பூ பசை ஒரு ஸ்பூன் எடுக்கவும். இதனுடன் கால் ஸ்பூன் நன்னாரி பொடி, சிறிது பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் அளவுக்கு நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிக்கட்டி காலை, மாலை குடித்துவர சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சல், தொற்று சரியாகும். ஆவாரைக்கு மருத்துவத்தில் தனி இடம் உண்டு. பல்வேறு நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டது. சாலை ஓரங்களில் மஞ்சள் நிற பூக்களுடன் காணப்படும் இது சர்க்கரை, ஈரல் நோய்களை போக்குகிறது. எலும்புகளுக்கு பலம் கொடுக்கிறது. நன்னாரி நல்ல மணத்தை கொண்டது.

சிறுநீர் தாரையில் ஏற்படும் புண்களை ஆற்றக்கூடியது. எரிச்சலை போக்க கூடியது. சிறுநீர் பெருக்கியாக விளங்குகிறது. வெள்ளைபோக்கு பிரச்னைக்கு மருந்தாகிறது. சில நோய்களுக்கு மருந்து எடுக்கும்போது வாய்ப்புண், வயிற்றுப்புண் ஏற்படுகிறது. இதை குணப்படுத்தும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். திரிபலா சூரணத்தை கால் ஸ்பூன் அளவுக்கு காலை, மாலை சாப்பிட்டு வர வாய்ப்புண், வயிற்றுப்புண் ஆறும். கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் சேர்ந்தது திரிபலா சூரணம். இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முதுமையிலும் தாம்பத்யம்!! (அவ்வப்போது கிளாமர்)
Next post வாழ்வென்பது பெருங்கனவு!! (மகளிர் பக்கம்)