இருமலை போக்கும் மருத்துவம்!! (மருத்துவம்)

Read Time:4 Minute, 47 Second

நமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில் இருமலை போக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். ஆடாதோடை, நாய்துளசி, மிளகு, ஓமம் ஆகியவை இருமலுக்கு மருந்தாகிறது. பனிக்காலத்தில் தொண்டைகட்டு, காய்ச்சல், இருமல், சளி போன்றவை எளிதில் வரும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும்போது சளி பிடிக்கும். நாய் துளசி இருமல், சளியை இல்லாமல் செய்யும் அற்புதமான மருந்தாகிறது. ஆடாதோடை, மிளகு ஆகியவை தொண்டைகட்டுவை சரிசெய்யும்.

இருமலை போக்கும். ஆடாதோடை இலையை பயன்படுத்தி சளியுடன் கூடிய இருமலை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: ஆடாதோடை, கண்டங்கத்திரி, திப்லி, தேன். செய்முறை: ஆடாதோடை இலைகளை சுத்தப்படுத்தி துண்டுகளாக்கி பாத்திரத்தில் போடவும். இதனுடன் கண்டங்கத்திரி வேர், 5 திப்லி சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்கவும். வடிக்கட்டி சிறிது தேன் சேர்க்கவும். இதை காலை, மாலை வேளைகளில் குடித்துவர இருமல், சளி, நுரையீரல்தொற்று குணமாகும். சளியை வெளித்தள்ளும். இருமல், வறட்டு இருமல், குத்து இருமல், கக்குவான் இருமல் போன்ற எந்தவகையான இருமலாக இருந்தாலும் ஆடாதோடை இலை தேனீர் மருந்தாகிறது.

சளி கரைந்து வெளியேறும். உள் உறுப்புகளில் ஏற்படும் எரிச்சலை போக்கும். நாய் துளசியை பயன்படுத்தி இருமலுக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: நாய் துளசி, மிளகு, தேன். செய்முறை: நாய் துளசி இலைகளை ஒருபிடி அளவுக்கு எடுக்கவும். இதனுடன் 10 மிளகு சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். வடிகட்டி சிறிது தேன் சேர்த்து குடித்துவர வறட்டு இருமல் சரியாகும். தொண்டையில் புண் ஆறும். இதமான சுவாசத்தை கொடுக்கும். நாய் துளசியின் இலைகள் மிகவும் பாதுகாப்பானது. சளியை கரைத்து வெளித்தள்ளும் தன்மை கொண்டது.

வறட்டு இருமலை போக்கும் மருந்து தயாரிக்கலாம். மிளகு, திப்லி, சித்தரத்தை, ஓமம், கடுக்காய் ஆகியவற்றை சம அளவு எடுத்து பொடிக்கவும். இதிலிருந்து அரை ஸ்பூன் அளவுக்கு எடுக்கவும். இதில், ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இந்த தேனீரை வடிகட்டி தேன் சேர்த்து காலை, மாலை வேளைகளில் உணவுக்கு பின் குடித்துவர சளியுடன் கூடிய இருமல், வறட்டு இருமல் போன்றவை சரியாகும். தொண்டையில் ஏற்படும் புண் குணமாகும். ஓமம் உஷ்ணத்தை தரக்கூடியது. இது, சளியை உடைக்கும் தன்மை கொண்டது.

உடல் வலியை போக்கும். நுரையீரல் தொற்றை சரிசெய்யும். சித்தரத்தை மிகுந்த காரத்தன்மை உடையது. சளியை வெளியேற்றும் தன்மை கொண்டது. இருமலை போக்கும். மிளகு நச்சுக்களை வெளித்தள்ளும். விஷத்தை முறிக்கும். இருமல், சளி இருக்கும்போது குளிர்பானங்கள் மற்றும் பீர்க்கங்காய், புடலங்காய், பூசணி போன்ற நீர்காய்களை தவிர்க்க வேண்டும். குதிக்கால் வலிக்கான மருத்துவம் குறித்து பார்க்கலாம். இப்பிரச்னைக்கு சாலையோரங்களில் உள்ள மந்தாரை இலை மருந்தாகிறது. மந்தாரை இலையுடன் விளக்கெண்ணெய் சேர்த்து வதக்கி சில நாட்கள் கட்டி வைப்பதால், குதிகால் வலி குணமாகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திரைப்பட உலகில் பெண் இயக்குநர்கள்!! (மகளிர் பக்கம்)
Next post டேய் தம்பி வாடகை வசூல் பண்ணனும் சீக்கிரம் வாடா!! (வீடியோ)