இலங்கையின் மனித உரிமை நிலவரம் குறித்து ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் கவலை!!! (கட்டுரை)

Read Time:3 Minute, 13 Second

இலங்கையின் மனித உரிமை நிலவரம் குறி;த்து ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகம் கவலை வெளியிட்டுள்ளார்.
ஜெனீவாவில் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவைக்கு சமர்ப்பித்துள்ள அறிக்கையொன்றில் அவர் தனது கவலைகைளை வெளியிட்டுள்ளார்.ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையிடம் இன்று கையளிக்கப்படவுள்ள அறிக்கையிலேயே ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகத்தின் கரிசனைகள் இடம்பெற்றுள்ளன.

இலங்கையிலும் ஜெனீவாவிலும் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் மனித உரிமை ஆர்வலர்கள் ஏனையவர்கள் கண்காணிக்கப்படுவது குறித்த தனது கவலையை ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகம் தனதுஅறிக்கையி;ல் பதிவு செய்துள்ளார்.

மனித உரிமை பேரவையின் 43 வது அமர்வில் கலந்துகொள்வதற்காக இலங்கையிலிருந்து பயணித்தவர்களும் கலந்துகொண்டுவிட்டு இலங்கை திரும்பியவர்களும் விசாரணை செய்யப்பட்டனர் என்ற குற்றச்சாட்டு மனித உரிமை ஆணையாளரின் அலுவலகத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
மார்ச்சில் இடம்பெற்ற மனித உரிமை பேரவை அமர்வின் போது தாங்கள் கண்காணி;க்கப்பட்டதாக பல அமைப்புகள் தெரிவித்தன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

2019 டிசம்பரில் மனித உரிமை விவகாரங்களுக்கான உதவி செயலாளர் நாயகம்இந்த வகையான அச்சுறுத்தல்கள் பழிவாங்குதல்கள் குறித்து அரசாங்கத்தின் கவனத்திற்கு எழுத்துவடிவில் கொண்டுவந்துள்ளார் என ஐக்கியநாடுகள் செயலாளர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சிவில் சமூக அமைப்புகள் மனிதஉரிமை செயற்பாட்டாளர்கள் மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தவர்கள் தொடர்ந்தும் கண்காணிக்கப்படுகின்றனர் என்ற தொடர்ச்சியான குற்றச்சாட்டுகள் ஐக்கிய நாடுகள் மனிதஉரிமைகள் ஆணையாளர் அலுவலகத்துக்கு கிடைத்துள்ளது என செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
பொலிஸார் தொடர்ந்தும் விஜயம் மேற்கொள்வது புலனாய்வு பிரிவை சேர்ந்தவர்கள் அமைப்புகளிடம் அவர்களின் செயற்பாடுகள் ஐநாவுடனான தொடர்பு பணியாளர்களின் விபரங்கள் குறித்து விசாரணை செய்வது போன்றவை இடம்பெறுகின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யோகா டீச்சர்!! (மகளிர் பக்கம்)
Next post ஆண்டவா… வட்டிக்கு பணம் வாங்கி இந்த வீடியோ டி.வி டெக் கடை!! (வீடியோ)