தேமலுக்கு மருந்தாகும் திப்பிலி!! (மருத்துவம்)

Read Time:5 Minute, 2 Second

நமக்கு அருகில், எளிதில் கிடைக்கும் மூலிகைகள், கடைச்சரக்குகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், வயிற்று கோளாறுகளை போக்க கூடியதும், சர்க்கரை நோய்க்கு மருந்தாக அமைவதும், தேமலை குணப்படுத்தவல்லதும், உள் உறுப்புகளை தூண்ட கூடியதுமான திப்பிலியின் நன்மைகள் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் காணலாம். திப்பிலி அற்புதமான மருந்தாகி நெஞ்சக கோளாறுகளை போக்குகிறது.

வயிற்று வலி, வாயு பிரச்னை, வயிற்று போக்கு பிரச்னைகளை சரிசெய்யும் தன்மை கொண்டது. மூச்சு முட்டலை சரிசெய்கிறது. சர்க்கரை நோய்க்கு மருந்தாகிறது. திப்பிலியை பயன்படுத்தி சளி, இருமலை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: அரிசி திப்பிலி, பனங்கற்கண்டு, மஞ்சள், இஞ்சி, பால். செய்முறை: ஒரு பாத்திரத்தில் நீர்விடவும். இதில், கால் ஸ்பூன் அரிசி திப்பிலி பொடி, பனங்கற்கண்டு, சிறிது மஞ்சள், இஞ்சி சேர்த்து கொதிக்க வைக்கவும்.

இதனுடன் காய்ச்சிய பால் சேர்த்து வடிகட்டவும். இதை குடித்துவர மூச்சிரைப்பு பிரச்னை மாறும். சுவாச பாதையை சீர் செய்யும். சளி, இருமலை போக்கும். பல்வேறு நன்மைகளை கொண்ட திப்பிலி, உயிரணுக்களை கெட்டிப்படுத்தும் தன்மை உடையது. நெஞ்சக, வயிற்று கோளாறுகளை சரிசெய்யும். வயிற்றில் உள்ள வாயுவை அகற்றும். திப்பிலியை பயன்படுத்தி ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: திப்பிலி, மஞ்சள், கறிவேப்பிலை.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் நீர்விடவும். இதனுடன் அரைத்து வைத்திருக்கும் திப்பிலி, மஞ்சள், கறிவேப்பிலை சேர்ந்த பொடி ஒரு ஸ்பூன் அளவுக்கு போடவும். இதை வடிகட்டி குடித்துவர ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும். சர்க்கரை நோயை தணிக்கும். நரம்புகளுக்கு பலம் தருகிறது. பதட்டத்தை போக்கும். ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. செயலற்ற உள் உறுப்புகளை தூண்டும் தன்மை திப்பிலிக்கு உண்டு. திப்பிலியை கொண்டு தேமலை போக்கும் மருந்து தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்: திப்பிலி, தேன். செய்முறை: கால் ஸ்பூன் அளவுக்கு திப்பிலி எடுக்கவும். இதனுடன் தேன் சேர்த்து கலந்து, 48 நாட்கள் வரை சாப்பிட்டுவர தோலில் உண்டாகும் தேமல் குணமாகும். தோல் அழகு மற்றும் பொலிவு பெறும். திப்பிலியை பயன்படுத்தி உள் உறுப்புகளை பலப்படுத்தும் திரிகடுக சூரணம் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: சுக்கு, மிளகு, திப்பிலி, தேன். செய்முறை: சுக்கு, மிளகு, திப்பிலி ஆகியவற்றின் பொடியை சம அளவு எடுத்து கலந்து வைத்து கொள்ளவும். இதில், கால் ஸ்பூன் அளவுக்கு எடுத்து தினமும் தேனில் கலந்து வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர உள் உறுப்புகள் பலப்படும்.

திப்பிலி பல்வேறு நோய்களுக்கு மருந்தாகி உடலுக்கு நன்மைகள் தருகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் கட்டிகளை குணப்படுத்தும் எளிய மருத்துவம் குறித்து பார்க்கலாம். தேவையான பொருட்கள்: ஆல மரத்து இலை, விளக்கெண்ணெய். சர்க்கரை நோயாளிகளுக்கு கட்டி வரும்போது, அது நீண்ட நாட்களாக ஆறாமல் இருக்கும். ஆல மரத்து இலைகளை விளக்கெண்ணெயில் வதக்கி கட்டியின் வைத்து கட்டினால், அது விரைவில் பழுத்து உடையும். கட்டிகள் மறையும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வயிற்று கோளாறுகளை போக்கும் மருத்துவம்!! (மருத்துவம்)
Next post பள்ளியில் தினமும் தோப்புக்கரணம் போடணும்! (மகளிர் பக்கம்)