கொரோனா காலத்திலும் கருத்தரிக்கலாம்! (மகளிர் பக்கம்)

Read Time:9 Minute, 22 Second

“கொரோனா தொற்று சார்ஸ் கோவி 2 என்ற வைரஸ் கிருமியால் ஏற்படுகிறது. இந்த வைரஸ் ஒரு அணுக்களை தாக்கும் போது, அதனை ஏற்றுக் கொள்ளக்கூடிய தன்மை அந்த அணுக்களில் இருந்தால் தான் அந்த வைரசால் பாதிப்பு ஏற்படும். அதை மருத்துவ துறையில் ACE2 receptor என்று சொல்வோம். இந்த ரிசப்டார் சில திசுக்களில் மட்டுமே உள்ளது.

நுரை யீரல் திசுக்களில் அதிக அளவு காணப் படும். அதனால் தான் இந்த வைரஸ் நேரடியாக நுரையீரலை தாக்குகிறது. விளைவு மூச்சுத் திணறல் பிரச்னை. சில சமயம் இந்த வைரஸ் குடலை தாக்குவதால் ஒரு சிலருக்கு வயிற்றுபோக்கும் உண்டாகும். சிறுநீரக பாதிப்பும் ஏற்பட வாய்ப்புள்ளது. காரணம் அந்த வைரசை உள்வாங்கும் ACE 2 receptor சிறுநீரகம், குடல் பகுதியிலும் உள்ளது. மேலும் இந்த ரிசப்டாருடன் TNPRSS 2 புரதமும் அந்த அணுக்களில் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் கொரோனா வைரசின் பாதிப்பு ஏற்படும். ஆனால் இந்த வைரஸ் இனப்பெருக்க உறுப்பினை பாதிக்காது’’ என்கிறார் கருத்தரிப்பு நிபுணர் டாக்டர் வாணி சுந்தரபாண்டியன்.

‘‘பொதுவாக எந்த ஒரு வைரசும் அணுக்களுடன் இணையும் போது பல மடங்காக பெருகும். கொரோனாவும் அப்படிப்பட்ட வைரஸ் கிருமி தான். நல்ல விஷயம் என்னவென்றால், இந்த வைரஸ் இனப்பெருக்கும் பாதையினை பாதிக்காது என்பது தான். அதாவது பெண்களின் கர்ப்பப்பை, வெஜைன்னா, பெலோப்பியன் குழாய் போன்ற உறுப்புகளை பாதிக்காது. காரணம் இந்த உறுப்புகளில் வைரசினை ஏற்றுக் கொள்ளும் ரிசப்டார் மற்றும் புரதம் இரண்டுமே இல்லை.

தற்போது நிலவி வரும் ஊரடங்கு காரணமாக வருகிற ஆண்டில் அதிக அளவு குழந்தை பிறக்க வாய்ப்புள்ளது. மேலும் சிகிச்சைக்காக காத்திருந்த பல தம்பதி யினர் செயற்கை முறை இல்லாமல் இயற்கையாக கருத்தரித்துள்ளனர். மன அழுத்தம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லை என்பது தான் முக்கிய காரணம். அதிக வேலையால், மன உளைச்சல் மற்றும் இல்லற வாழ்க்கையில் ஈடுபாடு இல்லாமல் வாழ்ந்து வந்த பல தம்பதியினர் ஊரடங்கு காரணமாக வீட்டில் இருந்தபடியே தங்களின் வேலையினை தொடர்ந்து வருவதால் குடும்பத்துடன் அதிக நேரம் செலவு செய்ய முடிகிறது. அதுவே இனிமையான இல்லற வாழ்க்கைக்கு வழி வகுத்துள்ளது.

உடலுறவு மூலம் இந்த வைரஸ் தொற்று ஏற்படாது என்பது தான் காரணம்’’ என்றவர் ெகாரோனா வைரஸ் கருத்தரிப்பு சிகிச்சையில் எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார். ‘‘கருத்தரிப்பு சிகிச்சையை பொறுத்தவரை இந்த வைரசின் தாக்கம் பெண்களின் கருமுட்டையினை பாதிக்காது. ஆனால் ஆண்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருந்தால், முழுமையாக குணமாகும் வரை அவர்களின் உயிரணுக்களில் இந்த வைரசின் பாதிப்பு இருப்பதாக மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.

அதே போல் தொற்று ஏற்பட்டவர்களுக்கு தற்போது கருத்தரிப்பு சிகிச்சை மேற்கொள்ளக்கூடாது. பொதுவாகவே ஒருவருக்கு சிகிச்சை அளிக்கும் முன் தம்பதியர் இருவருக்கும் முழு மருத்துவ பரிசோதனை மேற்ெகாள்ளப்படும். எந்த பிரச்னையும் இல்லாத பட்சத்தில் தான் ஒருவருக்கு கருத்தரிப்பு சிகிச்சை மேற்கொள்வோம். தற்போது கொரோனா ஆய்வும் சேர்ந்துள்ளது’’ என்றவர் கொரோனா தொற்றால் கர்ப்பிணிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று எச்சரித்தார்.

‘‘கொரோனா வைரஸ் கர்ப்பிணி பெண்களை பாதிக்காது என்று சொல்ல முடியாது. அவர்களுக்கும் பாதிப்பு ஏற்படும். அதே சமயம் இந்த தொற்று கருவில் இருக்கும் குழந்தையினை பாதிக்காது. பொதுவாக ஏழு மாத கருவினை சுமப்பவர்கள் மற்றும் 35 வயதிற்கு மேல் கருத்தரிப்பவர்கள் மிகவும் கவனமாக இருப்பது அவசியம். கருத்தரிக்கும் பெண்களுக்கு நீரிழிவு மற்றும் ரத்த அழுத்தம் போன்ற பிரச்னை ஏற்படுவதால், தொற்று எளிதாக இவர்களை தாக்க வாய்ப்புள்ளது. தொற்று பாதிப்பு இருக்கும் போது குழந்தை பிறந்து, அம்மாவுடன் தொடர்பில் இருந்தால், குழந்தைக்கும் பரவும் வாய்ப்புள்ளது. குழந்தைக்கும் அம்மாவுக்கும் இடையே சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும்.

தாய்ப்பாலில் தொற்று பாதிப்பு இல்லை என்றாலும், நேரடியாக தராமல், தனியாக எடுத்து தரலாம். இதன் மூலம் குழந்தைக்கு தொற்று ஏற்படாமல் பாதுகாக்க முடியும். இந்த சமயத்தில் கர்ப்பிணிகள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். டாக்டரை பார்க்கும் பட்சத்தில் முகக்கவசம் மற்றும் கைகளை சானிடைசர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். அவ்வப்போது கை கழுவ வேண்டும். சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும். இதை எல்லாம் அவர்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

கர்ப்ப காலத்தில் கர்ப்பப்பை நுரையீரலை அழுத்துவதால், பொதுவாகவே பெண்களுக்கு மூச்சிரைப்பு ஏற்படும். தொற்று இருக்கும் போது, அதன் பாதிப்பு அதிகமாக இருக்கும். மேலும் ஆசியா பெண்களுக்கு விட்டமின் டி குறைபாடு அதிகம் ஏற்படும். நம் சருமத்தில் உள்ள மெலனின் சூரிய ஒளியினை சருமத்தில் ஊடுருவதை தடுக்கும். இதனால் சூரிய ஒளியில் இருந்து பெறக்கூடிய விட்டமின் டி போதிய அளவு ஆசிய பெண்களுக்கு கிடைப்பதில்லை என்று இங்கிலாந்தில் உள்ள மருத்துவ ஆய்வுகளில் கண்டறிந்துள்ளனர்.

அந்த குறைபாட்டினை போக்க விட்டமின் டி சார்ந்த உணவுகள் அல்லது டாக்டரின் அறிவுரைக்கு ஏற்ப மருந்துகள் உட்கொண்டால், தொற்று ஏற்படாமல் தவிர்க்கலாம். கோவிட் தொற்றால் ரத்தநாளங்களில் அடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. கர்ப்பிணிகளுக்கு இந்த பிரச்னை மற்றவர்களை விட இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும். கர்ப்ப காலத்தில் மாதவிடாய் ஏற்படாது என்பதால் அந்த சமயத்தில் ரத்தம் கொஞ்சம் அடர்த்தியாக இருக்கும். தொற்று ஏற்படும் போது இந்த அடர்த்தி இரட்டிப்பாகும்.

அதனை தடுக்க நிறைய தண்ணீர் மற்றும் பழச்சாறுகள் குடிக்கலாம். தினசரி வேலைகளை செய்யலாம். உடற்பயிற்சி மேற்கொள்ளலாம். பிரச்னை உள்ளவர்கள், டாக்டரின் ஆலோசனைபடி செயல்படலாம். விட்டமின் சி, சிங்க் மற்றும் போலிக் அமிலம் போன்ற மருந்துகள் டாக்டர்கள் பரிந்துரைபடி சாப்பிடலாம். இதை தவிர உணவில் மஞ்சள், மிளகு, இஞ்சி, எலுமிச்சை, தேன் சேர்த்துக் கொண்டு ஆரோக்கியமான உணவினை சாப்பிட வேண்டும். முக்கியமாக பயப்படாமல் இருப்பது அவசியம்’’ என்று ஆலோசனை வழங்கினார் டாக்டர் வாணி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உச்சக்கட்டம் பற்றி ஓர் அறிமுகம்!! (அவ்வப்போது கிளாமர்)
Next post வாய்ப்புகளை நாம்தான் உருவாக்க வேண்டும்! (மகளிர் பக்கம்)