மாஸ்க் மேக்கப்… இது லேட்டஸ்ட்!! (மகளிர் பக்கம்)

Read Time:8 Minute, 10 Second

கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா நம்முடைய வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறிவிட்டது. இன்னும் சொல்லப்போனால் நாம் அந்த ெதாற்றுடன் வாழ பழகிக்கொண்டோம் என்று தான் சொல்ல வேண்டும். இப்போது தொற்று பரவாமல் இருக்க முகத்தில் மாஸ்க், கையில் கையுறை போட வேண்டும் என்பது கட்டாயமாகிவிட்டது.

காலப்போக்கில் இவை இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டு விடும். மாஸ்க் நம்முடைய முகத்தில் பாதியை மறைத்து விடுவதால், எஞ்சி இருக்கும் கண்களை எப்படி அழகாக காண்பிக்கலாம் என்று டிப்ஸ் தருகிறார் கிரீன்டிரண்ட்ஸ் அழகு நிலையத்தின் அழகுக்கலை நிபுணர் புய்.

‘‘இது கண்களுக்கு போடப்படும் ஒரு வகையான மேக்கப். இரண்டு மாதம் ஊரடங்குக்கு பிறகு இப்போது 50% மக்கள் வேலைக்கு செல்ல ஆரம்பித்துவிட்டார்கள். அதில் பெண்களும் அடங்குவர். அவ்வாறு வேலைக்கு போகும் போது மாஸ்க் அணிவது என்பது வழக்கமாகிவிட்டது. அந்த சமயத்தில் நம்முடைய கண்கள் அழகாக தெரிய அதனை எவ்வாறு அழகுப்படுத்திக் கொள்ளலாம் என்று பார்க்கலாம்.

முதலில் முகம் மற்றும் கண்கள் பகுதியினை க்ளென்சர் கொண்டு துடைக்க வேண்டும். இது சருமத்தில் இருக்கும் அழுக்கினை நீக்கி பளிச்சிட செய்யும். அதன் பிறகு மாய்சரைசிங் கிரீம் பயன்படுத்த வேண்டும். சருமத்தில் உள்ள ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்ள இது உதவும். கண்கள் உள்ள பகுதியில் பிரைமர் பயன்படுத்தலாம். இதில் கண்கள் மற்றும் சருமத்திற்கு என தனித்தனியாக உள்ளது. நாம் இங்கு கண்களுக்கு மட்டுமே கவனம் செலுத்துவதால், கண்களுக்கான பிரைமர் பயன்படுத்தலாம். பிரைமர் மேக்கப் கலையாமல் இருக்க உதவும். மேலும் சருமத்தின் ஓட்டைகளை அடைப்பதால், மேக்கப் போடும் போது திட்டு திட்டான தோற்றம் ஏற்படாமல் இருக்கும்.

பிரைமரை தொடர்ந்து கன்சீலர். எல்லாருடைய சருமமும் எந்த வித பிரச்னை இல்லாமல் இருக்கும் என்று சொல்லிட முடியாது. சிலருக்கு கண்களுக்கு கீழ் பகுதியில் தழும்பு இருக்கலாம் அல்லது பரு காரணமாக அங்கு கரும்புள்ளிகள் ஏற்பட்டு இருக்கலாம். இதனை மறைக்க கன்சீலர் பயன்படும். அடுத்து ஃபவுண்டேஷனை தொடர்ந்து ஐஷேடோ போடலாம். ஐஷேடோ ெபாதுவாக நாம் இரண்டு, மூன்று நிறங்களை இணைத்து போடலாம்.

அலுவலகம் செல்பவர்கள் என்றால் மிகவும் லைட் ஷேட் நிறங்களான பிங்க், சீ ப்ளூ, பர்பில் வயலெட், பீச் பயன்படுத்தலாம். இவை எல்லா விதமான உடைகளுக்கும் செட்டாகும். இல்லை என்றால் உடையின் நிறத்திற்கு ஏற்பவும் பன்படுத்தலாம். பார்ட்டி அல்லது இரவு நேரத்தில் வெளியே செல்லும் போது ஆரஞ்ச், ஓஷன் கிரீன், காப்பர்… கொஞ்சம் அடர்த்தியான நிறங்களை உபயோகிக்கலாம். இரண்டு மூன்று நிறங்களை பயன்படுத்தும் போது, பேஸ் நிறமாக ஒரு நிறத்தை பயன்படுத்தி, அதன் பிறகு மற்ற இரண்டு நிறங்களை பாதியளவு கண்களில் தடவி பிறகு இரண்டையும் ஒன்றோடு ஒன்றாக மெர்ஜ் செய்யலாம். இதன் மூலம் கண்களை மூடும் போது மூன்று நிறங்கள் எடுத்து கொடுக்கும், பார்க்க அழகாக இருக்கும்.

கண்களுக்கான மேக்கப் முடிந்தது. அடுத்து புருவம். பிரவுன் நிறத்தில் புருவத்தை வரைந்து ஷேட் செய்யலாம். கருப்பு நிறம் பயன்படுத்தினால் பார்க்க விகாரமாக இருக்கும். பிரவுன் நிறம் இயற்கை தோற்றத்தை அளிக்கும். அடுத்து கண்களின் இமை மேல் செயற்கை இமைகளை பொருத்திக் கொள்ளலாம். இது அவரவரின் விருப்பம்.

அடுத்து ஐ லைனர். கண்களின் மேல் மற்றும் கீழ் இரண்டு பகுதியிலும் போடலாம். கண்களை எடுப்பாகவும்,
பெரியதாகவும் காண்பிக்கும். சிலருக்கு கண்கள் சிறியதாக இருக்கும். அவர்கள் கண்களுக்கு கீழ் போடும்போது முதலில் வெள்ளை நிறத்தில் ஐலைனர் போட்டு விட்டு பிறகு கண் மை போடலாம். அவ்வளவு தான். அடுத்து முகத்தில் கண்ணம் மற்றும் மூக்கு பகுதியில் சிறிதளவு மேக்கப் போட்டுக் கொண்டால் போதும். இனி மாஸ்க் அணிந்தாலும் நீங்கள் அழகான தோற்றத்துடன் காண்பீர்கள்’’ என்றார் அழகுக் கலை நிபுணர் புய்.

மேக்கப் போடுவதை விட அதை மறக்காமல் நீக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். கண்களுக்கு மட்டும் இல்லை, சாதாரணமாக எந்த விதமான மேக்கப் போட்டாலும், அதை இரவு படுக்கும் முன் எடுக்க மறக்க கூடாது. எப்போதும் மேக்கப்போடு இருந்தால், அது சருமத்தில் சுறுக்கம் மற்றும் வேறு சில பாதிப்பினை ஏற்படுத்தும்.

* இரவு படுக்கும் முன் பஞ்சில் மேக்கப் ரிமூவர் கொண்டு மேக்கப்பினை துடைத்து எடுக்க வேண்டும்.

* கண்களில் நீக்கும் போது, கண்களை இழுத்து பிடித்து கண்களின் ஆரம்ப பகுதியில் இருந்து மேக்கப்பினை நீக்க வேண்டும். அவ்வாறு செய்யும் போது அழுத்தி செய்யாமல் மெல்ல செய்ய வேண்டும்.

* கண்களில் உள்ள சருமம் மிகவும் மிருதுவாக இருக்கும் என்பதால், அங்கு அழுத்தி துடைக்கும் போது சுறுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.

* முகத்தில் மேக்கப்பினை கலைக்கும் போது கீழிருந்து மேலாக துடைக்க வேண்டும், சருமம் பாதிக்காமல் பாதுகாக்க முடியும்.

* கண்களில் உள்ளே இருக்கும் ஐ லைனர் மற்றும் கண் மையை நீக்க குழந்தைகளுக்கு பயன்படுத்தும் பேபி ஆயிலை கொண்டு நீக்கலாம்.

* மேக்கப்பினை கலைத்தவுடன் டோனர் பயன்படுத்த வேண்டும். இது சருமத்தில் உள்ள PH அளவினை கட்டுப்பாட்டில் வைக்கும்.

* இப்போது மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுவிட்டதால், அந்த பகுதியில் உள்ள சருமமும் பாதிப்படைய வாய்ப்புள்ளது. காரணம் அந்த பகுதி வியர்த்து, சருமம் டீஹைட்ரேடாக வாய்ப்புள்ளது. அதை போக்க மாய்சரைசிங் கிரீம் பயன்படுத்தலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சொரியாசிஸ் பிரச்னைக்கு மருந்தாகும் மரிக்கொழுந்து!! (மருத்துவம்)
Next post வேக் அப் டூ மேக்கப்!! (மகளிர் பக்கம்)