அமெரிக்காவின் தடபுடலுக்கெல்லாம் அஞ்சமாட்டோம்: வடகொரியா அறிவிப்பு

Read Time:1 Minute, 41 Second

NorthKorea.jpgஅணுஆயுத விஷயத்தில் அமெரிக்காவின் தடபுடலுக்கெல்லாம் அஞ்சமாட்டோம் என்று வடகொரியா திட்டவட்டமாக அறிவித்துள்ளது. பெரிய வல்லரசு நாடுகள் மட்டும் அணுஆயுதங்களை வைத்துக்கொள்ளலாமா என்று கேள்வியும் எழுப்பியுள்ளது. பெரிய நாடுகள் பயங்கர ஆணுஆயுதங்களை வைத்துக்கொண்டு அணுஆயுதங்களை பாதுகாப்புக்காக தயாரிக்கும் சிறிய நாடுகளை மிரட்டக்கூடாது என்று ஐ.நாûவுக்கான வடகொரிய பிரதிநிதி பக் கில் யோன் ஐ.நா.கமிட்டியிடம் தெரிவித்துள்ளார்.

இந்த இரட்டைக் கொள்கையானது அணுஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தை குறுகியதாக்கிவிடும் என்றும் யோன் தெரிவித்துள்ளார்.

சட்டப்பூர்வமாகவும் நியாயமாகவும் வெளிப்படையாகவும் நாங்கள் நவீன தொழில்நுட்பத்துடன் அணுஆயுதங்களை தயாரித்துள்ளோம். அமெரிக்காவின் அச்சுறுத்தலை சமாளிக்கவே இந்த நடவடிக்கையில் நாங்கள் இறங்கியுள்ளோம். அதே சமயத்தில் நாங்கள் எந்த நாட்டிற்கும் முதலில் அணுஆயுத ரகசியங்களை தெரிவிக்க மாட்டோம். அணுஆயுதத்தையும் முதலில் பயன்படுத்தமாட்டோம் என்றும் யோன் மேலும் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post தனக்கென்று தனியிடமான முதலிடத்தில் உள்ள “அதிரடி” இணையதளத்திற்கு நிதர்சனத்தின் வாழ்த்துக்கள்…
Next post அமெரிக்க நாடாளுமன்றத் தேர்தல்; அதிபர் புஷ் கட்சி தோற்கும்: கருத்துக் கணிப்பு முடிவு