மூலநோய்க்கு மருந்தாகும் மாசிக்காய்!! (மருத்துவம்)

Read Time:4 Minute, 49 Second

நமக்கு அருகில், எளிதில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான, பக்கவிளைவில்லாத, பயனுள்ள, எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், மாசிக்காயின் நன்மைகள் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் காணலாம்.பல்வேறு மருத்துவ குணங்களை உடைய மாசிக்காய் ரத்தத்தை உறைய வைக்கும் தன்மை கொண்டது. இது, புற்றுநோய் வராமல் தடுக்கின்ற உள் மருந்தாக விளங்குகிறது. மேல் மருந்தாக பயன்படுத்தும்போது புண்களை ஆற்றுகிறது. வாய் கொப்பளிக்கும் நிலையில் பற்களுக்கு பலம் கொடுக்கிறது. அதிக மாதவிலக்கை நிறுத்த கூடிய தன்மை மாசிக்காய்க்கு உண்டு.

மாசிக்காயை பயன்படுத்தி பல்வலி, ஈறுகளில் ஏற்படும் வீக்கம், வாய் புண்களை ஆற்றும் மருந்து தயாரிக்கலாம். மாசிக்காய் பொடி நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக் கொள்ளவும். இதில் மாசிக்காய் பொடி சேர்த்து 10 நிமிடங்கள் ஊறவைத்த பின் வாய்கொப்பளிக்க வேண்டும். இவ்வாறு செய்துவர ஈறுகளில் ஏற்படும் ரத்த கசிவு, பல்வலி, வாய் புண்கள் குணமாகும்.

மாசிக்காயை பயன்படுத்தி கழிச்சல், வெள்ளைபோக்கு, அதிகப்படியான ரத்தபோக்கை கட்டுப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: மாசிக்காய், மோர். செய்முறை: ஒரு டம்ளர் அளவுக்கு மோர் எடுத்துக்கொள்ளவும். இதனுடன் அரை ஸ்பூன் மாசிக்காய் சேர்த்து குடித்துவர வெள்ளைபோக்கு, மாதவிலக்கு சமயத்தில் ஏற்படும் அதிக ரத்தப்போக்கு, கழிச்சல், சீதக்கழிச்சல் சரியாகும்.

மாசிக்காயை தூளாக்கி பாலில் இட்டு பருகிவர அதிக மாதவிலக்கு கட்டுப்படும். வலியுடனான மாத விலக்கு சரியாகும். வெள்ளைபோக்கு அதிகமாகும்போது இடுப்பு வலி, வயிற்று வலி, சோர்வு ஏற்படும். இப்பிரச்னைகளை மாசிக்காய் சரிசெய்கிறது.
மாசிக்காயை பயன்படுத்தி மூலநோய்க்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: வெண்ணெய், மாசிக்காய் பொடி. செய்முறை: பசு வெண்ணெய்யுடன் மாசிக்காய் பொடி சேர்த்து கலந்து இரவு நேரங்களில் பூசிவர மூலநோய், ஆசனவாய் கடுப்பு, வாய்ப்புண் குணமாகும்.

இதை தோலில் ஏற்படும் சுருக்கங்களுக்கு மேல்பூச்காக பயன்படுத்தலாம். மாசிக்காய் தோல் சுருக்கத்தை போக்கும் மருந்தாகி பயன்தருகிறது. மாசிக்காய் மிகுந்த துவர்ப்பு உடையது என்பதால் புண்களை ஆற்றும். ரத்தத்தை கட்டுப்படுத்தும். ஆசனவாய் வெடிப்பை குணப்படுத்தும். மாசிக்காயை பயன்படுத்தி முகப்பருக்களை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: மாசிக்காய், ஜாதிக்காய், எலுமிச்சை. செய்முறை: மாசிக்காய் பொடியுடன் சிறிது ஜாதிக்காய் பொடி சேர்க்கவும். இதனுடன், எலுமிச்சை சாறு கலந்து பருக்களுக்கு மேல் பூசிவர பருக்கள் மறையும். தலைசுற்றலை போக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். தேவையான பொருட்கள்: நெல்லி வற்றல், சுக்கு, கொத்துமல்லி. செய்முறை: சிறிது நெல்லி வற்றல் எடுக்கவும். இதனுடன் கொத்துமல்லி, சுக்குப்பொடி சேர்த்து தேனீராக்கி குடித்துவர தலைசுற்றல் சரியாகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கல்லீரலை பலப்படுத்தும் கத்தரிக்காய்!! (மருத்துவம்)
Next post சீனாவை எதிர்கொள்வதற்காக மேற்குபசுபிக் பிராந்தியத்திற்கு ரோந்து கப்பல்களை அனுப்புகின்றது அமெரிக்கா!! (கட்டுரை)