கல்லீரலை பலப்படுத்தும் கத்தரிக்காய்!! (மருத்துவம்)

Read Time:4 Minute, 56 Second

நமக்கு எளிதில், அருகில் கிடைக்கும் மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைப்பெட்டியில் உள்ள உணவுப்பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், செரிமானத்தை தூண்ட கூடியதும், கல்லீரலை பலப்படுத்தும் தன்மை கொண்டதும், வலி நிவாரணியாக விளங்குவதுமான கத்திரிக்காயின் நன்மைகள் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் காணலாம்.

கத்திரிக்காய் சிறந்த உணவாகி ஊட்டசத்துக்களை கொடுக்கிறது. இதில், பொட்டாசியம், மெக்னீசியம், இரும்பு, கால்சியம் சத்துக்கள் மிகுதியாக உள்ளன. புற்றுநோய் வராமல் தடுக்கும் அற்புதமான மருந்தாகிறது. கத்திரிக்காயில் நார்ச்சத்து மிகுதியாக இருப்பதால் மலச்சிக்கலை போக்குகிறது. ரத்தத்தில் உள்ள கொழுப்பை கரைக்கிறது. தோலுக்கு பலம் தருவதுடன், தலைமுடிக்கு வளம் கொடுக்கிறது. உடல் வலியை போக்குகிறது. ஈரலை பலப்படுத்துவதாக விளங்குகிறது.

கத்திரிக்காயை பயன்படுத்தி கல்லீரலை பலப்படுத்தும், பசியை தூண்டும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: கத்தரிக்காய், நல்லெண்ணெய், மிளகு, சீரகம்.செய்முறை: ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் விடவும். இதில், ஒரு ஸ்பூன் கத்திரி பிஞ்சு பசை சேர்த்து வதக்கவும். ஒரு டம்ளர் நீர்விட்டு உப்பு, மிளகுப்பொடி, சீரகப்பொடி சேர்த்து கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துவர பசியின்மை, சுவையின்மை சரியாகும். ஜீரணத்தை தூண்டும். கல்லீரலை பலப்படுத்தும். கத்தரிக்காய் 2ம் நிலை சர்க்கரை நோய்க்கு அற்புதமான மருந்தாகிறது. ரத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும் தன்மை உடையது.

கத்திரி இலைகளை பயன்படுத்தி ஆஸ்துமா, மூச்சுத்திணறலுக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: கத்திரி இலைகள், அதிமதுரம், தேன். செய்முறை: ஒரு பாத்திரத்தில், அதிமதுர துண்டுகளை லேசாக நசுக்கி போடவும். இதனுடன், 2 கத்தரி இலைகள் சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்கவும். வடிகட்டி தேன் சேர்த்து காலை, மாலை வேளைகளில் குடித்துவர சளி, இருமல், ஆஸ்துமா, மூச்சுத்திணறல் பிரச்னைகள் சரியாகும்.

நெஞ்சக கோளாறுகள் குணமாகும். சிறுநீர் பெருக்கியாக விளங்குகிறது. கொழுப்பை குறைக்கும். ரத்த அழுத்தத்தை குறைக்கும். கத்திரி இலைகள் துளசியை போன்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. கத்திரி வேரை பயன்படுத்தி மூட்டுவலி, காய்ச்சலுக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: கத்திரி வேர், மஞ்சள், சீரகம், தேன்.செய்முறை: கத்திரி வேரை சுத்தப்படுத்தி எடுக்கவும். இதனுடன் கால் ஸ்பூன் மஞ்சள், சிறிது சீரகம் சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைத்து வடிகட்டி, தேன் சேர்த்து குடித்துவர மூட்டுவலி, காய்ச்சல், இடுப்பு வலி குணமாகும். வலி நிவாரணியாக விளங்குகிறது.

கல்லீரல் வீக்கத்தை குணப்படுத்தும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். இப்பிரச்னைக்கு இஞ்சி, தேன், பூண்டு, பால், மஞ்சள் ஆகியவை மருந்தாகிறது. இஞ்சி சாறுடன் சிறிது தேன் சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் கல்லீரல் வீக்கம் குணமாகும். மாலை வேளையில், 5 பல் பூண்டு எடுத்து சிறிது மஞ்சள் சேர்த்து பாலில் கொதிக்க வைத்து குடித்துவர கல்லீரல் வீக்கம் குணமாகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கோடைக்கு ஒரு குடை!! (மகளிர் பக்கம்)
Next post மூலநோய்க்கு மருந்தாகும் மாசிக்காய்!! (மருத்துவம்)