தோல்நோய்களை குணப்படுத்தும் ஆகாயத்தாமரை!! (மருத்துவம்)

Read Time:4 Minute, 47 Second

நமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், தோல்நோய்களை போக்க கூடியதும், மூலநோய்க்கு மருந்தாக அமைவதும், சிறுநீர்தாரையில் உண்டாகும் தொற்றுக்களை போக்கவல்லதுமான ஆகாயத்தாமரையின் மருத்துவ குணங்கள் குறித்து பார்க்கலாம்.

ஏரி, குளம், குட்டைகளில் வளரும் தாவரம் ஆகாய தாமரை. இது, பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. நுண்கிருமிகள், நோய் கிருமிகளை அழிக்க கூடிய ஒன்றாக விளங்குகிறது. தோல் நோய்க்கு மருந்தாகிறது. காய்ச்சலை தணிக்கிறது. புற்றுநோய் வராமல் தடுக்கிறது. வீக்கத்தை கரைக்கும் தன்மை உடையது.பல்வேறு நன்மைகளை கொண்ட ஆகாயத்தாமரையின் வேர்கள் கொத்துக்கொத்தாக இருக்கும். மண் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி இந்த செடியை அதில் போட்டு வைத்தால் அருகருகே செடிகள் உருவாகும்.

ஆகாய தாமரை இலைகளை பயன்படுத்தி கழிச்சல், சீதக்கழிச்சல், ரத்த மூலம், சிறுநீரோடு ரத்தம் கலந்து வெளியேறுவதை குணப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: வெண்ணெய் அல்லது பசு நெய், ஆகாய தாமரை இலை.
செய்முறை: வெண்ணெய் அல்லது பசு நெய் அரை ஸ்பூன் அளவுக்கு எடுக்கவும். இதனுடன் ஒரு ஸ்பூன் ஆகாயத்தாமரை இலை பசை சேர்க்கவும். பச்சை வாடை போகும் வரை கொதிக்க வைக்கவும். இதை குடித்துவர கழிச்சல், ரத்தமூலம், சிறுநீரோடு ரத்தம் கலந்து செல்வது குணமாகும். சிறுநீரகத்தை தாக்கும் புற்று நோயை தடுக்கும்.

ரத்தத்தை உறைய வைக்கும் தன்மை கொண்ட ஆகாயத்தாமரையை பயன்படுத்தி சர்க்கரை நோய், தோல் நோய்களுக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: மஞ்சள் பொடி, ஆகாயத்தாமரை இலை.செய்முறை: மஞ்சள் பொடி ஒரு ஸ்பூன் அளவுக்கு எடுக்கவும். இதனுடன் 100 மில்லி ஆகாயத்தாமரை சாறு சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை குடித்துவர ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும். சிறுநீர் தாரையில் ஏற்படும் தொற்று குணமாகும்.

ஆகாயத்தாமரை இலைகளை பயன்படுத்தி மூலம், கட்டி மற்றும் தோல்நோய்களுக்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: ஆகாயத்தாமரை இலைகள், தேங்காய் எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய்.செய்முறை: ஆகாயத்தாமரை இலை பசை எடுக்கவும். இதனுடன் தேங்காய் எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சவும். இதை வடிகட்டி தோல் நோய்களுக்கு மேல் பூச்சாக பயன்படுத்தலாம். இதை பூசிவர வெளி மூலம் குணமாகும். கொப்புளங்கள் இல்லாமல் போகும். தோலில் ஏற்படும் அரிப்பு, தடிப்பு, கட்டிகள் சரியாகும். சொரி, சிரங்கு குணமாகும்.

ஆகாயத்தாமரையின் இலைகள் உள், வெளி மருந்தாகி பயன்தருகிறது. பல்வேறு நன்மைகளை கொண்ட ஆகாயத்தாமரையை பயன்படுத்தி உடல் நலம் பெறலாம்.வண்டுக்கடி, தேள் கடிக்கான மருத்துவம் குறித்து பார்க்கலாம். தேவையான பொருட்கள்: படிகாரம், சுண்ணாம்பு. செய்முறை: படிகாரத்தை பொடித்து எடுக்கவும். இதனுடன் சிறிது சுண்ணாம்பு சேர்த்து நன்றாக கலக்கவும். இதை வண்டுக்கடி, தேள் கடி உள்ள இடத்தில் பூசினால் வலி விலகும். வீக்கம் கரையும். விஷம் முறியும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மூட்டுவலியை போக்கும் செங்கொன்றை!! (மருத்துவம்)
Next post வேற வழியே இல்ல | குழம்பித் தவிக்கும் பாகிஸ்தான், சீனா, துருக்கி கூட்டணி!! (வீடியோ)