டிரம்பின் தனிப்பட்ட செய்தியை கோத்தபாயவிடம் தெரிவித்த மைக்பொம்பியோ தனது தனிப்பட்ட கையடக்க தொலைபேசி இலக்கத்தையும் வழங்கியுள்ளார்!! (கட்டுரை)

Read Time:4 Minute, 17 Second

இலங்கைக்கான விஜயத்தின் போது இலங்கை ஜனாதிபதியை சந்தித்தவேளை அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்பொம்பியோ அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் தனிப்பட்ட செய்தியொன்றை ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க இலங்கை பிரதிநிதிகளுடனான சந்திப்பின்போது மைக்பொம்பியோ தான் இலங்கை ஜனாதிபதியுடன் சில நிமிடங்கள் தனிப்பட்ட பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கு விருப்பம் வெளியிட்டுள்ளார்.
இந்த சந்திப்பில் அமெரிக்க ஜனாதிபதியின் தனிப்பட்ட செய்தியை மைக்பொம்பியோ பகிர்ந்துகொண்டுள்ளார்.

டிரம்ப் நிர்வாகம் சிறிய நாடுகளுடன் உறவுகளை வலுப்படுத்தும் விதத்தில் தனது வெளிவிவகார கொள்கைகளில் மாற்றங்களை மேற்கொள்கின்றது என மைக்பொம்பியோ ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா பெரிய நாடுகளில் இருந்து தனது கவனத்தை சிறிய நாடுகளை நோக்கி திருப்பியுள்ளது என மைக்பொம்பியோ தெரிவித்துள்ளார்.

இலங்கையுடன் நெருக்கமாக இணைந்து செயலாற்றுவது குறித்து அமெரிக்கா ஆர்வமாகவுள்ளது என தெரிவித்துள்ள மைக்பொம்பியோ இலங்கையில் அமெரிக்க நிறுவனங்களை முதலீடு செய்யுமாறு கேட்டுக்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் ஏதாவது விசேட தொழில்துறைக்கு அமெரி;க்காவின் உதவி தேவைப்படுகின்றதா என மைக்பொம்பியோ ஜனாதிபதியிடம் கேட்டுள்ளார்.

நாட்டின் விவசாய துறையை அபிவிருத்தி செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

விவசாயத்தை அடிப்படையாக கொண்ட மாநிலமான கன்சாஸ் மூலம் அரசியலில் நுழைந்த தனக்கு நாட்டிற்கு பேண்தகு விவசாய தொழில்துறையின் முக்கியத்துவம் தெரியும் என மைக்பொம்பியோ தெரிவித்துள்ளார்.
இராணுவபின்னணியை கொண்ட மைக்பொம்பியோ ஜனாதிபதியின் இராணுவ அனுபவங்கள் குறித்து கேட்டறிந்துள்ளார் , ஜனாதிபதி தனது வாழ்நாளில் அமெரிக்காவில் இராணுவபயிற்சி எதனையாவது பின்பற்றியிருக்கின்றாரா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜனாதிபதி தான் அமெரிக்காவின் போர்ட் பெனிங் இராணுவ பயிற்சி கல்லூரிக்கு சென்றதாக தெரிவித்துள்ளார்.குறிப்பிட்ட போர்ட் பெனி;ங் கல்லூரிக்கு மைக்பொம்பியோவும் சென்றுள்ளார்.

பொதுவான விருப்பங்கள் காரணமாக நட்புறவை மேலும் வளர்த்துக்கொண்ட மைக்பொம்பியோ ஜனாதிபதியிடன் தொடர்ந்தும் தொடர்பிலிருப்பதாக தெரிவித்துள்ளதுடன் இரு நாடுகளிற்கும் இடையிலாக அபிவிருத்தி ஒத்துழைப்பு குறித்து மேலும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளார்.
அமெரிக்க இராஜாங்க அமைச்சர் தனது தனிப்பட்ட கையடக்கதொலைபேசி இலக்கத்தை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவிற்கு வழங்கியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரத்த அழுத்தத்தை குறைக்கும் தேன்பழம்!! (மருத்துவம்)
Next post இத எரிக்க முடியுமா..? வாக்குவாதமான விவாதம்!! (வீடியோ)