By 13 November 2020 0 Comments

வேதனையை விலைக்கு வாங்கலாம்!! (அவ்வப்போது கிளாமர்)

ரித்விகா… 20 வயது. கல்லூரியில் படிக்கும் போதே திருமணம் செய்து வைத்துவிட்டார்கள். கணவர் நரேஷ் தொழில் அதிபர். இரண்டே மாதங்கள்… நரேஷுக்கு சலித்துப் போய்விட்டாள் ரித்விகா. தன் நிறுவனத்துக்கு மாடலாக வந்த பெண்ணுடன் நட்சத்திர விடுதி, வெளிநாடு என சுற்ற ஆரம்பித்தான். அது ரித்விகாவுக்குத் தெரிந்தது. சண்டை போட்டாள்.

‘‘என்னை மாதிரி பிசினஸ்மேனுக்கு பல டென்ஷன். அதைக் குறைக்க இப்படி பொண்ணுங்களோட சுத்தறது சாதாரணம். அதுக்காக உனக்கான இடம் இல்லைன்னு ஆகிடாது’’ என மழுப்பினான். ‘‘அப்படின்னா நானும் வேற ஆம்பளையோட உறவு வச்சுக்கட்டுமா?’’ – கோபத்துடன் கேட்டாள். ‘‘பல வீடுகள்ல நடக்கறது தான். எனக்கு ஆட்சேபணை இல்லை’’ – சாதாரணமாகச் சொன்னான் நரேஷ்.

கணவனின் அன்பும் முறையான தாம்பத்தியமும் கிடைக்காமல் தவித்தாள் ரித்விகா. ஒருநாள் தோழி ரம்யா சில வலைத்தளங்களை அறிமுகப்படுத்தினாள். பணம் பெற்றுக் கொண்டு பெண்களுடன் செக்ஸ் வைத்துக் கொள்ளும் ஆண்களின் தொடர்பு கிடைத்தது. அவர்களில் ஒருவன் ராஜ் – பெய்டு செக்ஸ் வொர்க்கர். ரித்விகாவின் செக்ஸ் வேட்கையை தணித்தான் ராஜ். ஒருநாள் ரித்விகாவிடம் செல்போன் வீடியோ ஒன்றைக் காட்டினான்.

இருவரும் பல இடங்களில் உறவு கொண்ட காட்சிகள்! பெரிய தொகை வேண்டும், தரவில்லையென்றால் வீடியோ பதிவுகளை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு குடும்ப மானத்தை வாங்கிவிடுவேன் என்று மிரட்டினான். வேறு வழியில்லாமல் கணவனிடம் பணம் வாங்கி பிரச்னையைத் தீர்த்தாள் ரித்விகா. பணத்துக்காக பெண்களை வளைப்பவனை ‘ஆண் பாலியல் தொழிலாளி’ என்றே அழைக்க வேண்டும். அமெரிக்காவில் இது பிரபல தொழில்.

இவர்களை ‘ஜிகோலோ’ (Gigolo) என்கிறார்கள். பெண்களின் பார்ட்னராக எல்லா சுகங்களையும் தர வேண்டியது இவர்கள் கடமை. விலையாக பணம் கிடைக்கும். பெண் பல ஆண்களுடன் உடல் உறவு வைத்துக் கொள்ள உளவியல் ரீதியான காரணங்கள் இருக்கின்றன. பணம் அதிகமாகப் புழங்குவது முக்கிய காரணம். பணமிருப்பதால் ஆண்களைப் போலவே பலவற்றையும் அனுபவிக்கத் துடிக்கிறார்கள். ‘அவர் மட்டும் பல பெண்களோட உறவு வச்சுக்கறாரு.

நாமளும் ஏன் பிடிச்சவங்களோட இருக்கக் கூடாது?’ – இப்படி நினைத்து இதில் இறங்குபவர்கள் சிலர். கணவனுடனான செக்ஸில் திருப்தி கிடைக்காத பெண்களும், பொழுதுபோக்காக இதைச் செய்பவர்களும் உண்டு. பாதகமான விளைவுகள்… பாலியல் நோய்கள் வருவதற்கு வாய்ப்பு… தேவையில்லாத கர்ப்பம்… பிளாக்மெயில்… ஒருநாள் உல்லாசத்துக்கு வருபவன் நெடுநாள் உறவாக மாறிவிடும் அபாயம்… தாம்பத்திய வாழ்வில் பிரச்னைகள்… விஷயம் வெளியே தெரிந்தால் சமூகத்தில் அவப்பெயர்.

இதெல்லாம் தெரிந்திருந்தும் ஒரு பெண் ஏன் இந்தச் சேற்றில் இறங்க வேண்டும்? ஒரு சாகசம் செய்த உணர்வு கிடைப்பதும், ஆணுக்கு நிகராக நாமும் செயல்பட வேண்டும் என்ற உத்வேகம் கிடைப்பதும்தான்.எவ்வளவு பிஸியாக இருந்தாலும் கணவன், தன் மனைவிக்குரிய நேரத்தைத் தர வேண்டும். புதிய நிலைகளில் உறவு கொள்ள வேண்டும். செக்ஸ் சார்ந்த பிரச்னைகள் இருந்தால், மருத்துவரிடம் காட்டி சரி செய்ய வேண்டும். எதிலும் பரஸ்பரம் விட்டுக் கொடுப்பது நல்லது. இவற்றையெல்லாம் கடைப்பிடித்தால் மனைவி வேறொரு ஆணுடன் செல்ல வாய்ப்பிருக்காது.

மனநலப் பிரச்னைகளாலும் சில பெண்கள் இதில் ஈடுபடுவதுண்டு. அவா்கள் மனநல நிபுணரிடம் ஆலோசனை பெற வேண்டும். பல ஆண்களுடனான உறவென்பது வம்பை விலை கொடுத்து வாங்குவதற்குச் சமம். குடும்ப வாழ்வே சிறந்தது.Post a Comment

Protected by WP Anti Spam