பாரிஸில் வளர்ந்த ரொனி பிளிங்கென் அமெரிக்க இராஜாங்கச் செயலராகிறார்!! (கட்டுரை)

Read Time:3 Minute, 44 Second

அமெரிக்காவின் புதிய ராஜாங்கச் செயலாளராக அன்ரொனி பிளிங்கெனின் (Antony Blinken)பெயரை ஜோ பைடன் தெரிவு செய்திருக்கிறார் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

ஜோ பிடனுக்கு மிக நெருக்கமானவரும் அவரது நீண்டகால ஆலோசகருமாகிய பிளிங்கென், அமெரிக்கா தலைமையிலான உலகளாவிய கூட்டணிகளைப் பாதுகாத்துப் பலப்படுத்ததக் கூடியவர் என்று மதிப்பிடப்படுகிறார்.

58 வயதான பிளிங்கென், ஒபாமா நிர்வாகத்தில் பிரதி ராஜாங்கச் செயலாளராகவும் பிரதித் தேசிய பாதுகாப்பு ஆலோசகராகவும் கடமையாற்றியவர்.அதற்கு முன்னர் குடியரசுக் கட்சியின் பில் கிளின்டன் பதவிக்காலத்தில் ஓர் இளைஞராக அவரது உரைகளை வடிவமைக்கும் உதவியாளராக விளங்கியவர் பிளிங்கென் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

“உப்பும் மிளகுமான” தலைக் கேசத்துடன் (salt and pepper hair) தோன்றும் ஒரு கிற்றார் வாத்தியக் கலைஞரான பிளிங்கென், எந்த சமயத்திலும் ஆத்திரப்பட்டதையோ அல்லது சுய கட்டுப்பாட்டை இழந்ததையோ தாங்கள் கண்டதில்லை என்று அவருக்கு நெருக்கமான மூத்த ராஜதந்திரிகள் கூறியிருக்கின்றனர்.

1971 இல் பெற்றோருடன் பிரான்ஸில் குடியேறி தனது இளவயதில் பாரிஸில் கல்வி கற்றுவந்த பிளிங்கெனை “பிரான்ஸ் மீது மதிப்புக்கொண்ட ஒரு நெருக்கமான நண்பர்” என்று பிரெஞ்சு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.பிரெஞ்சு மொழியை சரளமாகப் பேசக்கூடியவர் அவர்.

பிளிங்கென் ராஜாங்கச் செயலர் பதவிக்கு அமர்த்தப்படுவது ட்ரம்ப் ஆட்சியில் உலகளாவிய ரீதியில் உடைந்துபோன அமெரிக்கக் கூட்டணிகளை மீள ஒழுங்கமைப்பதை நோக்கமாகக் கொண்டது என்று அவதானிகள் குறிப்பிடுகின்றனர்.

முதலில் ராஜாங்கச் செயலாளர் பதவி மூத்த அமெரிக்க ராஜதந்திரி சுசான் ரைஸுக்கு வழங்கப்படலாம் என்று நம்பப்பட்டது.ஆனால் செனட் சபையில் ஜனநாயகக் கட்சியினர் மத்தியில் அவருக்குக் கடும் எதிர்ப்பு நிலவுகிறது. எனவே அவரது பெயரை பைடன் தவிர்த்துக் கொண்டுள்ளார்.

இதேவேளை –

ஒபாமா நிர்வாகத்தில் ராஜாங்கச் செயலராக விளங்கிய ஜோன் கெரி (John Kerry) பருவநிலை மாற்றம் சுற்றுச் சூழல் தொடர்பான முக்கிய பொறுப்புக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

ஆபிரிக்க விவகாரங்கள் தொடர்பான பிரதி ராஜாங்கச் செயலராக முன்னர் விளங்கியவரும் கறுப்பினப் பூர்வீகம் கொண்டவருமாகிய லின்டா தோமஸ்-கிறீன்பீல்ட் (Linda Thomas-Greenfield) அம்மையாரின் பெயரை ஐ. நாவுக்கான அமெரிக்கத் தூதராக ஜோ பைடன் பரிந்துரைக்கவுள்ளார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post Pami-அ கல்யாணம் பண்றப்ப மூட்டை தூக்குனேன்!! (வீடியோ)
Next post கன்னித்திரையின் பங்கு என்ன? (அவ்வப்போது கிளாமர்)