காணாமல் போனவர்களின் உறவினர்கள் சிலரும் உருக்கமான வேண்டுகோள்!! (கட்டுரை)

Read Time:5 Minute, 5 Second

கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ள சிஐடியின் முன்னாள் இயக்குநர் ஷானி அபயசேகரவிற்கு அவசர மருத்துவ சிகிச்சையை வழங்கவேண்டும் என கொலை செய்யப்பட்ட சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் மகள் அகிம்சாவும் காணாமல்போனவர்களின் உறவினர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அகிம்சா விக்கிரமதுங்கவும், 2008 முதல் 2009ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் காணாமல்போனவர்களின் உறவினர்களும் இணைந்து கடிதமொன்றை சிறைச்சாலை ஆணையாளருக்கும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கும் பொலிஸ்மா அதிபருக்கும் தொற்றுநோய் வைத்தியசாலையின் தலைமை மருத்துவருக்கும் அனுப்பிவைத்துள்ளனர்.

தங்கள் குடும்பத்தவர்கள் கொல்லப்பட்டமை அல்லது காணாமலாக்கப்பட்டமைக்கு யார் பொறுப்பு என்பதை கண்டறிந்த விசாரணைகளை ஷானி அபயசேகரவே முன்னெடுத்தார் அல்லது கண்காணித்தார் என அவர்கள் தங்கள் கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.
எங்கள் குடும்பத்தவர்கள் சார்பில் நீதியை பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்ட மிகச்சிறிய எண்ணிக்கையிலான அதிகாரிகளில் ஷானி அபயசேகரவும் ஒருவர் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அபயசேகர போன்று அனைத்து அதிகாரிகளுக்கும் முதுகெலும்பும்,நேர்மையும் உறுதிப்பாடும் இருந்திருக்குமானால் எங்கள் பாசத்துக்குரியவர்கள் இன்று உயிருடன் இருந்திருப்பார்கள் என அவர்கள் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.
தனது கடமையை செய்தமைக்காகவும் நாங்கள் இழந்தவர்களிற்காக நீதியை கோரியதற்காகவும் அபயசேகரவின் உயிர் ஆபத்தில் உள்ளது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நாங்கள் அவரின் சார்பில் குரல்கொடுத்து அவருக்குதீமை ஏற்படுவதை தடுப்பதற்காக கடமைப்பட்டுள்ளோம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மகரசிறைச்சாலையின் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவேளை ஷானி அபயசேகரவிற்கு கொரோனா பாதிப்புள்ளமை தெரியவந்துள்ளதாக நாங்கள் அறிந்துள்ளோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அவரின் விருப்பமின்றி அவரை இரண்டு தடவைகள் இடம்மாற்றியுள்ளனர்,நீதிமன்றத்தின் அனுமதியுள்ளாமலே இதனை செய்துள்ளனர் என என கொலை செய்யப்பட்ட சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் மகள் அகிம்சாவும் காணாமல்போனவர்களின் உறவினர்களும் தெரிவித்துள்ளனர்.

வழமையாக தடுப்புக்காவலில் உள்ள எவரையும் நீதிமன்றத்தின் அனுமதியின்றி வேறு பகுதிக்கு மாற்றுவது கிடையாது என குறிப்பிட்டுள்ள அவர்கள் கொரேனாh வைரஸ் வழிகாட்டுதல்கள் தடுப்பு காவலில் உள்ளவரின் உயிரை பாதுகாப்பதற்காக அவரை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு அனுமதித்திருக்கலாம் ஆனால் அபயசேகரவின் விடயத்தில் இது இடம்பெறவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

அவர் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்த மருத்துவமனையிலிருந்து அவரை பலவந்தமாக அகற்றி ஏனைய சிறைக்கைதிகளுடன் சேர்ந்து நாட்டின் பல பகுதிகளிற்கும் கொண்டு சென்றதால் அவர் இரண்டு நாட்கள் சரியாக உறங்காத நிலையை ஏற்படுத்தினார்கள் எனவும் என கொலை செய்யப்பட்ட சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் மகள் அகிம்சாவும் காணாமல்போனவர்களின் உறவினர்களும் தங்கள் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அவர் தற்போது மருத்துவ மனையில் இல்லை இராணுவத்தின் கட்டிடமொன்றில் காணப்படுகின்றார் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அவரது உடல்நிலை மோசமடைகின்றது என நம்பகதன்மை மிக்க தகவல்கள் கிடைத்துள்ளன,எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மனதை உருக்கும் உண்மை கதை ! நான் எப்படி வடகொரியாவில் இருந்து தப்பினேன்!! (வீடியோ)
Next post வயதானால் இன்பம் குறையுமா? (அவ்வப்போது கிளாமர்)