உடலுக்கு நன்மை தரும் நடைப்பயிற்சி!! (மருத்துவம்)

Read Time:2 Minute, 23 Second

உடல் எடை குறைப்பவர்கள், நீரிழிவு மற்றும் ரத்த அழுத்த பிரச்னை உள்ளவர்கள் மற்றும் எந்த வித பிரச்னையும் இல்லாமல் ஆரோக்கியமாக இருப்பவர்கள் எல்லாருக்கும் சிறந்த பயிற்சி உடற்பயிற்சி. ஜிம்மிற்கு சென்று தான் ஃபிட்டாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. தினமும் 20 நிமிடம் கைகளை வீசி விறுவிறுப்பாக நடைப்பயிற்சி செய்து வந்தால் பல நன்மைகள் பெற்று ஆரோக்கியமாக வாழலாம். நடைப்பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள்…

*பாதங்களில் உள்ள தசைகள் வலிமையாகிறது.

*மலச்சிக்கல் ஏற்படாமல், உடலிலிருந்து கழிவுப்பொருட்கள் வெளியேறுகிறது.

*உடல் வடிவழகு பெற்று, தேவையில்லாத ஊளைச்சதைகள் மற்றும் கொழுப்பு குறைய உதவுகிறது.

*நினைவாற்றல் மிகுதியாகும். நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.

*கால்களின் விரல்களில், கால்களின் அடிப்பகுதிகளில் இரத்த ஓட்டம் பரவும். பித்த வெடிப்பு, ஆணி வருவதைத் தடுக்கும்.

*கூன் விழுவது தடுக்கப்படும். முதுமை வருவதைத் தள்ளிப்போடும்.

*திசுக்களின் தேய்மானம் குறையும். உடல் உறுதி பெறும்.

*இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறையும்.

*பார்வையும், காது கேட்கும் திறனும் அதிகரிக்கச் செய்யும்.

*ஐம்புலன்களும் சீராக இயங்குவதால் நாள் முழுவதும் சோர்வின்றி இருக்கலாம்.

*எவ்வித மனஇறுக்கமும் மறையும்.

*இதயம் சார்ந்த நோய்கள் வராமல் தடுக்கும்.

*முதியவர்களுக்கு கால்சியம் சத்து குறைவதை தடுக்கும்.

*முக்கியமாக இதயத்திற்கு சுறுசுறுப்பு, உற்சாகம், அமைதி, மனநிம்மதி ஏற்படும்.

*நடைப்பயிற்சி மருந்தில்லா இயற்கை மருந்து; நடப்போம்; நோய்களை ஓட வைப்போம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கடினமான நோயையும் எளிதில் குணமாக்கலாம்!! (மருத்துவம்)
Next post நடுங்கவைக்கும் சவூதி அரேபியாவின் 12 சட்டங்கள் ! (வீடியோ)