தொடர்ந்தும் நீதிக்காக போராடுவோம்- உடல்கள் கட்டாயமாக தகனம் செய்யப்பட்டவர்களின் உறவுகள்!! (கட்டுரை)

Read Time:7 Minute, 12 Second

கொரோனா வைரசினால் உயிரிழந்த நிலையில் உடல் கட்டாயமாக தகனம் செய்யப்பட்டவர்களின் குடும்பத்தவர்கள் தொடர்ந்தும் நீதிக்காக போராடப்போவதாக தெரிவித்துள்ளன என 24 அமைப்புகள் கூட்டாக தெரிவித்துள்ளன.
அறிக்கையொன்றில் 24 அமைப்புகள் இதனை தெரிவித்துள்ளன
அவை மேலும் குறிப்பிட்டுள்ளதாவது

கொரோனா வைரசினால் உயிரிழந்த நிலையில் பலவந்தமாக உடல் தகனம் செய்யப்பட்டவர்களின் குடும்பத்தவர்களும், அல்லது கொரோனா வைரசினால் உயிரிழந்தனர் என்ற சந்தேகத்தின் பேரில் உடல்கள் தகனம் செய்யப்பட்டவர்களின் குடும்பத்தவர்களும் இலங்கையின் அதிஉயர் நீதிமன்றத்தில் வைத்திருந்த நம்பிக்கைகள் சிதறடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தொடர்ந்தும் அனுபவிக்கும் அநீதிக்கு இலங்கையில் ஒரு தீர்வு கிடைக்காமல் போய்விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

நாங்கள் நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை வைத்தோம் ஆனால் எங்களிற்கு தெரியாத காரணங்களுக்காக எங்கள் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது என உடல் தகனம் செய்யப்பட்ட , ஒருவரின் மகன் தெரிவித்திருந்தார். இவர் இந்த நடைமுறைக்கு எதிராக நீதிமன்றம் சென்றிருந்தார்.

இலங்கை அரசாங்கத்தின் கட்டாயமாக உடல்களை தகனம் செய்யும் நடவடிக்கைக்கு எதிராக முஸ்லீம்கள் கிறிஸ்டியன் கத்தோலிக்க சமூகத்தை சேர்ந்தவர்கள் தாக்கல் செய்த 11 மனுக்களை செவ்வாய்கிழமை உச்சநீதிமன்றம் பெரும்பான்மை தீர்மானத்தின் கீழ் நிராகரித்திருந்தது.
உடல்களை தகனம் செய்வது தங்களது மத சுதந்திரத்திற்கான உரிமையை மீறும் செயல் என குறிப்பிட்டு இந்த மனுக்களை அவர்கள் தாக்கல் செய்திருந்தனர்.

மனுக்களை தாக்கல் செய்தவர்களின் சார்பில் பல திறமை வாய்ந்த சட்டத்தரணிகள் ஆஜராகி கொவிட் 19 காரணமாக உயிரிழந்தவர்களின் அல்லது அதன்காரணமாக உயிரிழந்தவர்கள் என சந்தேகிக்கப்படுபவர்களின் உடல்களை அடக்கம் செய்வது பொது சுகாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றது என்பது இன்னமும் நிரூபிக்கப்படவில்லை என வாதாடியிருந்தனர்.

அரசாங்கம் புதிய கட்டுப்பாடுகளை விதித்ததன் மூலம் உடல்களை அடக்கம் செய்வது முக்கியமான மத நடைமுறையாகவும்,அடிப்படை உரிமையாகவும் உள்ளவர்களிற்கான அரசமைப்பினால் பாதுகாக்கப்பட்ட மத நம்பிக்கைகள் மற்றும் நடைமுறைகளிற்கான உரிமையை மீறியுள்ளது எனவும் வாதாடினர்.

ஆராயவேண்டிய விவகாரங்கள் உள்ளன என்ற அடிப்படையில் நீதிபதியொருவர் ஏனையவர்களின் முடிவிற்கு மாறான நிலைப்பாட்டினை எடுத்துள்ளார்,
இந்த விவகாரத்தின் முக்கியத்துவம் மற்றும் உணர்வுபூர்வமான தன்மை காரணமாக நீதிமன்றம் இந்த மனுவை விசாரிப்பதற்கு அனுமதி வழங்கும் என்ற எதிர்பார்ப்பு காணப்படடது.

இதேவேளை பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தவர்கள் தாங்கள் எவ்வாறு தொடர்ந்தும் நீதிக்காக போராட முடியும் என கேள்வி எழுப்பியுள்ளனர் என மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.
உலகளாவிய தொற்றுநோய் நிலைமையின் போது பொது அவசரகால நிலை காணப்படுவதால் மத மற்றும் நம்பிக்கை சுதந்திரம் உட்பட சில உரிமைகளை கட்டுப்படுத்தலாம் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம்.

இந்த கட்டுப்பாடுகள் காரணமாக அனைத்து மதங்களை சேர்ந்தவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதையும் நாங்கள் உணர்ந்துள்ளோம்,உரிமைகள் மறுக்கப்பட்ட ஏனைய விடயங்களில் உரிமைகளை மறுப்பதற்கான சரியான காரணங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன என மனுதாரர் ஒருவர் தெரிவித்தார்.

மீண்டும் மீண்டும நாங்கள் கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடககம் செய்வதை தடை செய்வதற்கா காரணத்தை அரசாங்கத்திடமிருந்து கோரியிருந்தோம்,
எனினும் அவர்கள் உடல்களை புதைப்பதால் வைரஸ் தொடர்ந்து பரவலாம் அல்லது சுகாதார அச்சுறுத்தல்கள் உள்ளன என்பதற்கான சரியான ஆதாரங்களை முன்வைக்க தவறிவிட்டனர் என தனது தந்தையின் உடலை தகனம் செய்வதற்கு அனுமதிக்காத மகன் ஒருவர் தெரிவித்ததார்.
இதன் காரணமாக தனது தந்தையின் உடலை கைவிடநேர்ந்தது என அவர் குறிப்பிட்டார்.

முஸ்லீம்களிற்கு எதிரான குரோத பிரச்சாரத்தையும், வன்முறையையும் தடுத்து நிறுத்துவதற்கு அரசாங்கம் தவறியுள்ள நிலையில் அரசாங்கத்தின் இனத்தை அடிப்படையாக கொண்ட இந்த செயற்பாடு ,நாட்டின் 9 வீதமான முஸ்லீம்களை குறிவைக்கும் இனவெறி மற்றும பாகுபாட்டை சுட்டிக்காட்டுகின்றது என மனித உரிமை அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.
இந்த நடவடிக்கைகள் ஒன்றிற்கும் மேற்பட்ட மதகுழுக்களை பாதிக்கின்றன.

எனினும் இறந்தவர்களை அடக்கம் செய்வது என்பது கேள்வி;க்குட்படுத்த முடியாத மத நடைமுறை என கருதும் முஸ்லீம்களை குறிப்பாக பாதிக்கின்றது.
அவர்கள் அரசாங்கம் செயற்படும் விதத்தினால் தாங்கள் இலக்குவைக்கப்படுவதாகவும்,கெகொடுமைப்படுத்தப்படுவதாகவும் அச்சுறுத்தலிற்கு உள்ளாவதாகவும் கருதுகின்றனர்என 24 அமைப்புகளும் தெரிவித்துள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post துவங்குமா அழகிரியின் ஆட்டம்!! (வீடியோ)
Next post 15 இலட்சத்தைக் கடந்த கொரோனா பலி!! (உலக செய்தி)