புருவம் அழகு பெற டிப்ஸ்….!! (மகளிர் பக்கம்)

Read Time:4 Minute, 26 Second

இன்றைய காலத்தில், இளம்பெண்கள் முதல் அம்மாக்கள் வரை தங்கள் அழகை பாதுகாக்க காட்டும் அக்கறை அதிகம். நம் முகத்துக்கு அழகு சேர்ப்பது புருவம்.கண்களுக்கு கவசமாக விளங்குபவை புருவங்கள்.நம் கண்களை சூரியன், தூசி, வியர்வை ஆகியவற்றில் இருந்து காத்து, பார்வையை மங்கவிடாமல் பார்த்துக்கொள்பவை இவை. சிலருக்கு புருவ முடி இல்லாமல் இருக்கும், வேறு சிலருக்கு திடீரென புருவ முடி உதிர ஆரம்பித்து, வயிற்றில் புளியை கரைக்கும்.. தொற்றுநோய், தொழுநோய் போன்ற தோல் வியாதி, பிறவியிலேயே வரும் மரபுவழி குறைபாடு, தைராக்ஸின் சுரப்பி குறைபாடு, கீமோதெரபி எனப்படும் புற்றுநோய் சிகிச்சை, அழகுசாதன பொருட்களால் ஏற்படும் டெர்மடிட்டிஸ் ஆகியவை இதற்கு காரணம். புருவத்தை அழகாக பராமரிக்க நம் வீட்டிலேயே பின்பற்றக்கூடிய இயற்கை வழிமுறைகள் இதோ…

விளக்கெண்ணெய்: விளக்கெண்ணெயை பஞ்சில் தொட்டு புருவங்களில் தேய்த்து 30 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இதை ஆறு வாரங்களுக்கு தொடர்ந்து செய்து வந்தால், புருவம் புதுப்பொலிவு பெறும்.

தேங்காய் எண்ணெய் : தூங்குவதற்கு முன்னர் புருவத்தில் தேங்காய் எண்ணெய் தேய்த்து, காலையில் கழுவிவிடவும். இது முடியின் புரோட்டீன் இழப்பை தடுக்கும். இதிலிருக்கும் லாரிக் அமிலம், புருவ முடி வேர்களை நுண்கிருமிகளிடம் இருந்து பாதுகாத்து, முடி வளர உதவும்.

பாதாம் எண்ணெய்: தூங்குவதற்கு முன்னர் பாதாம் எண்ணெயை புருவத்தில் தேய்த்துவிட்டு காலையில் கழுவவும். இதிலிருக்கும் வைட்டமின் ஏ, பி, இ ஆகியவை முடி வளர உதவும்.

ஆலிவ் எண்ணெய்: இதை விரலால் புருவங்களில் தடவி, மசாஜ் செய்து இரண்டு மணி நேரம் கழித்து கழுவவும். இரண்டு வாரங்களுக்கு இதை செய்து வந்தால் முடி வளரும். ஆலிவ் எண்ணெயில் இருக்கும் வைட்டமின் ‘’இ’’ புருவ முடிக்கு ஊட்டச்சத்து அளிக்கும். வைட்டமின் ‘’ஏ’’ உடம்பில் இயற்கையாக சுரக்கும் எண்ணெயை அதிகரிக்கும்.

கற்றாழை: புருவத்தில் கற்றாழை ஜெல் தேய்த்து, 30 நிமிடங்கள் கழித்து கழுவவும். இது, விரைவில் முடி வளர உதவும்.

வெங்காய சாறு: ஒரு வெங்காயத்தை சாறு எடுத்து, ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு, மூன்று டீஸ்பூன் தண்ணீர் கலந்து புருவத்தில் தேய்த்து வந்தால், முடி வளரும். வாரம் மூன்று முறை இதை செய்யலாம். இதிலிருக்கும் சல்பர், முடி உதிர்வை தடுக்கும்.

பால்: பஞ்சால் தொட்டு, பாலை புருவத்தில் தேய்த்து, 15 நிமிடங்கள் கழித்து கழுவவும். ஆறு மாதங்களுக்கு இதை தொடர்ந்து செய்து வர, புருவ முடி சீராக வளரும்.

முட்டை மஞ்சள் கரு: இதை, புருவங்களில் தேய்த்து 20 நிமிடங்கள் கழித்து கழுவவும். வாரத்துக்கு மூன்று முறை இதை செய்யலாம். இதிலிருக்கும் பயோட்டின், முடி வளர உதவும்.

மரபுவழி நோய், தொழுநோய் போன்றவை உள்ளவர்களுக்கு இயற்கை முறையில் புருவ முடிகளை வளர வைப்பது கடினம்.

செம்பருத்தி இலை: செம்பருத்தி இலையை அரைத்து, புருவங்களில் தேய்த்து வர புருவ முடி வளரும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றிய பிராமண சமூகம்!! (வீடியோ)
Next post அழகான பாதம் ஆரோக்கியமாக இருக்க வேண்டாமா? (மகளிர் பக்கம்)