உதடு பத்திரம் ! (மகளிர் பக்கம்)

Read Time:5 Minute, 32 Second

குளிர்காலத் தொந்தரவுகளில் முக்கியமான ஒன்று சரும பாதிப்பு. அதிலும் பனிக்காற்றால் அதிகம் பாதிக்கப்படுபவை உதடுகள்தான். வெடிப்புகள், ரத்தக்கசிவுகள், அதன் பின்விளைவாக வலி, பொது இடங்களுக்குச் செல்ல சங்கடம் என்று பல்வேறு தொந்தரவுகள் பனியினால் ஏற்படும்.

இதைத் தவிர்க்க க்ரீம்கள், லோஷன்கள், லிப் பாம்கள் என மார்க்கெட்டுகளில் கிடைக்கும் சகலத்தையும் வாங்கி குவித்துவிடுவோம். இதற்கு மாற்றாக செலவில்லாத, எளிய இயற்கை வழிகளையும் அழகுக்கலை நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். அவற்றைத் தெரிந்துகொள்வோமா?

உதடுகளிலும் அதனைச் சுற்றியுள்ள தோல் பகுதிகளிலும் ஒரு மெல்லிய லேயர் போல ஒட்டும் லிப் மாஸ்க் (Lip mask)தான் அந்த பாதுகாப்பான வழிமுறை. கடைகளில் கிடைக்கும் செயற்கையான லிப் மாஸ்க்குகளில் கிளிசரின், அமிலம், சீரம் போன்ற வேதிப்பொருட்கள் சேர்க்கப்பட்டிருக்கும்.

இதனால் சிலருக்கு ஒவ்வாமை ஏற்பட்டு உதடுகள் வீங்கவோ, காயம்படவோ நேரிடும். ஆனால், வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே தயாரிக்கப்படும் இந்த இயற்கை லிப் மாஸ்க் பாதுகாப்பானது என்று உத்தரவாதமாக சொல்லலாம்.

வெள்ளரி மாஸ்க்

வெள்ளரிக்காயைப் பாதியாக வெட்டி, அதன் மேல் தோலை நீக்கிக் கொள்ள வேண்டும். பின்பு மிக்ஸியில் பசையாக அரைத்து விழுதாக எடுத்துக் கொண்டு அதை உதடுகளிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் தடவிக் கொள்ளலாம். தினமும் இதை செய்துவந்தால் உதடுகளின்
ஈரத்தன்மை பாதுகாக்கப்படும்.

பாதாம் மாஸ்க்

வைட்டமின் ‘ஈ’ நிறைந்த பாதாம் எண்ணெய் உதடுகளின் வறட்சியைத் தடுக்கக்கூடியது. குளிப்பதற்கு முன் பாதாம் எண்ணெயைத் தடவி மசாஜ் செய்து வந்தால் உதடுகள் மென்மையாக இருக்கும்.

வெண்ணெய் மாஸ்க்

வெண்ணெயில் புரதம் அதிகமாக இருப்பதால், வறட்சியான மற்றும் வெடிப்புகள் உள்ள உதடுகளில் வெண்ணெயைத் தடவுவதன் மூலம் ஈரப்
பதத்தை தக்க வைத்துக் கொள்ளலாம்.

ஃப்ரூட் மாஸ்க்

பப்பாளி, ஆப்பிள், மாதுளை என உங்களுக்குப் பிடித்த பழங்களில் செய்யும் மாஸ்க் இது. பழத்தை மசித்து உதடுகளைச் சுற்றிலும் தடவி வந்தால் பழங்களில் உள்ள வைட்டமின் சத்துக்கள் உதட்டுக்குக் கிடைத்து பார்ப்பதற்குக் கவர்ச்சியாகத் தோன்றும்.

ஸ்வீட் மாஸ்க்

உதட்டில் இருக்கும் இறந்த செல்களை அகற்ற சர்க்கரையும், தேனும் கலந்த இந்த ஸ்வீட் மாஸ்க் பயன்படும். உதட்டின் ஈரப்பசையைக் காக்கவும் தேன் பயன்படும்.

பனானா மாஸ்க்

குளிப்பதற்கு முன் பழுத்த வாழைப்பழத்தை மசித்து உதடுகளின் மேல் தடவி 10 நிமிடங்கள் ஊற வைத்த பின்னர் குளிர்ந்த நீரினால் அலம்ப வேண்டும். உதடுகள் மினுமினுப்பதுடன் வாழைப்பழத்தில் உள்ள புரதம் மற்றும் பொட்டாசியம் காரணமாக சரும வறட்சியும் நீங்கும்.

கற்றாழை மாஸ்க்

வீட்டிலேயே கற்றாழை வளர்ப்பவர்கள் இப்போது அதிகம் என்பதால் இது மிகவும் எளிதான மாஸ்க்தான். கற்றாழையின் ஜெல்போன்ற திரவத்தை தினமும் உதடுகளில் தடவி வந்தால் வறட்சி நீங்கி ஈரப்பதம் கிடைக்கும். கற்றாழை ஜெல்லும் ரெடிமேடாக இப்போது கிடைக்கிறது.

ஆலிவ் மாஸ்க்

ஆலிவ் எண்ணெயை உதடுகளில் தடவி வரும்போது வறட்சி நீங்கி கருமையான உதடுகளும் நிறம் மாறி கோவைப்பழம் போல சிவப்பான உதடுகளைப் பெறலாம்.

லெமன் மாஸ்க்

எலுமிச்சை, ஆரஞ்ச் போன்ற சிட்ரஸ் பழங்களின் தோல் உதடுகளின் வறட்சியை தடுக்கக்கூடியது. தோலில் இருந்து சாற்றினை எடுத்து உதடுகளில் தடவி வரலாம்.

கோகனட் மாஸ்க்

இவை எல்லாம் கிடைக்கவில்லையா… இருக்கவே இருக்கிறது தேங்காய் எண்ணெய். தேங்காய் எண்ணெய் இல்லாத வீடு இருக்காது. தேங்காய் எண்ணெயை மிதமான சூட்டில் உதடுகளில் தடவி வந்தால் உதட்டின் ஈரப்பதம் எப்போதும் போகாது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மோடி ஆட்சி ஓயும் வரையிலும் போராடத் தயார்!! (வீடியோ)
Next post கூந்தல்!! (மகளிர் பக்கம்)