By 19 December 2020 0 Comments

கூந்தல்!! (மகளிர் பக்கம்)

* தினமும் அல்லது ஒருநாள் விட்டு ஒருநாள் தலைக்குக் குளிப்பது அவசியம்.

* தலைமுடியை இழுத்து இறுகக் கட்டுவதோ, பின்னுவதோ கூடாது. தளர்வான பின்னலும் ஹேர் ஸ்டைலும்தான் கூந்தலுக்குப் பாதுகாப்பு.

* எலுமிச்சை விதைகள் 50, மிளகு 50, கைப்பிடி அளவு சின்ன வெங்காயம் எல்லாவற்றையும் கரகரப்பாக அரைத்து வழுக்கை விழுந்த இடத்தில் தேய்த்து, 10 நிமிடங்கள் கழித்து அலசினால் உயிர்ப்புள்ள வேர்க்கால்கள் மறுபடி வளரத் தொடங்கும்.

* குமுட்டிக்காய் என கிராமங்களில் கிடைக்கும். அதை வெட்டினால் உள்ளே ஈரப்பதம் இருக்கும். வழுக்கை விழுந்த இடத்தில் அதைத் தேய்த்து சிறிது நேரம் ஊறிக் கழுவினால் மீண்டும் அங்கே முடி வளரும் வாய்ப்புகள் உண்டு.

* சுகந்த கோகிலா, பே ஆயில், சிடர் உட் ஆயில்(Cedar wood oil)… இந்த மூன்று அரோமா ஆயில்களையும் தலா 3 சொட்டு எடுத்து வெள்ளை மிளகுப் பொடியில் கலந்து வழுக்கை விழுந்த இடத்தில் தடவிக் குளிக்கலாம்.

இல்லாதவர்களுக்கு நிறைய டிப்ஸ்…

* மண்டைப்பகுதி தெரிகிற அளவுக்கு மிகக் குறைவான முடி உள்ளவர்களுக்கும், எலி வால் போல் மெலிந்த கூந்தலை உடையவர்களுக்கும் முன்னந்தலையில் முடி குறைவாக உள்ளவர்களுக்கும் தினசரி கவலையே என்ன மாதிரி ஹேர் ஸ்டைல் செய்வது என்பதுதான்.

குறைந்த கூந்தலுடன் மண்டை பளிச்சிட வெளியே தலைகாட்ட விரும்பாத பலருக்கும் விக் வைத்துக் கொள்வதுதான் ஒரே தீர்வாக இருந்தது. அதன் அடுத்தக்கட்டமாக ஹேர் எக்ஸ்டென்ஷன்(Hair extension) வந்திருப்பதை பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

* விக் என்பது மொத்த மண்டைப்பகுதிக்குமானது. முடியே இல்லாத அல்லது குறைவாக இருக்கும் இடத்தை மட்டுமின்றி, சாதாரணமாக இருக்கும் இடத்தையும் சேர்த்தே மறைக்கும். உபயோகிப்பதிலும் சிரமங்கள் உண்டு. கனமாக இருக்கும்.

பார்த்த உடனேயே விக் வைத்திருப்பதை யார் வேண்டுமானாலும் கண்டுபிடித்துவிட முடியும். செயற்கையான தோற்றத்தைத் தரும். எப்போது அகற்றுவோம் என்கிற மனநிலையிலேயே இருக்க வைக்கும். இப்படி எந்தப் பிரச்னைகளும் இல்லாதது ஹேர் எக்ஸ்டென்ஷன்.

* ஹேர் எக்ஸ்டென்ஷனின் சிறப்பே, முடி குறைவாகவோ, அறவே இல்லாமலோ உள்ள பகுதிகளில் அதை உபயோகிக்க முடியும் என்பதுதான். உதாரணத்துக்கு சிலருக்கு பின்பக்கம் கூந்தல் வளர்ச்சி குறைவாக இருக்கும். பின்னலும் போட முடியாது. குதிரைவாலும் கட்டிக் கொள்ள முடியாது.

அவர்களுக்கு பின் பக்க முடியை மட்டும் அடர்த்தியாகக் காட்டும்படி ஹேர் எக்ஸ்டென்ஷன் பயன்படுத்த முடியும். அதேபோல சிலருக்கு முன்நெற்றிப் பகுதியிலும், உச்சியிலும் முடி குறைவாக இருக்கும். அவர்களுக்கும் அந்த இடத்தை மட்டும் ஹேர் எக்ஸ்டென்ஷன் வைத்து மறைத்து, அடர்த்தியாகக் காட்ட முடியும்.

* இது தவிர சிலருக்கு கூந்தல் ரொம்பவும் சென்சிட்டிவாக இருக்கும். எந்த சிகிச்சையும் ஏற்றுக் கொள்ளாது. அவர்களுக்கு சாதாரணமாக ஹேர் டிரையர் உபயோகித்தால்கூட முடி கொட்டும். ஹேர் ஸ்ட்ரெயிட்டனிங்கோ, கர்லிங்கோ செய்து கொள்ள ஆசைப்பட்டாலும் அத்தகைய சிகிச்சைகளை ஏற்றுக் கொள்கிற நிலையில் அவர்களது கூந்தல் இருக்காது.

அவர்களுக்கு ஹேர் எக்ஸ்டென்ஷன் மிகப் பெரிய வரப்பிரசாதம். அதாவது, கூந்தலை எந்த வகையிலும் பாதிக்காத வகையில் அவர்கள் விரும்பிய வகையில் விதம் விதமான ஹேர் எக்ஸ்டென்ஷன்.உபயோகிக்கலாம்.

* ஹேர் எக்ஸ்டென்ஷன் செய்வதற்கென்றே இன்று நிபுணர்கள் இருக்கிறார்கள். அவர்களை அணுக வேண்டியது அவசியம். எப்படி உங்கள் உடலுக்குப் பொருத்தமான உடையை அளவெடுத்துக் கச்சிதமாகத் தைத்து அணிகிறீர்களோ, அது போலவே உங்கள் மண்டைப் பகுதிக்குப் பொருத்தமாகத்தான் ஹேர் எக்ஸ்டென்ஷனைதேர்ந்தெடுக்க முடியும். முதலில் உங்கள் மண்டைப் பகுதியை அளவெடுப்பார்கள்.

உங்கள் முடியின் தன்மை, அதன், நிறம் என எல்லாவற்றையும் குறித்துக் கொள்வார்கள். விக் தயாரிப்பது போலவே செயற்கை முடியிலும், இயற்கை முடியிலும் இந்த ஹேர் எக்ஸ்டென்ஷன்களை தயாரிக்கலாம்.

இதில் நிஜமான முடியில் தயாரிக்கும்போது இன்னும் அதன் அழகு அதிகரிக்கும். அதை உங்கள் கூந்தலை அலசுவது போன்றே அடிக்கடி அலசியும், கலர் செய்தும் உபயோகிக்கலாம். செயற்கை கூந்தலில் செய்யப்படுகிற ஹேர் எக்ஸ்டென்ஷகளில் அது சாத்தியமில்லை.

*கல்யாணப் பெண்கள், மாடல்கள், நடிகைகள், மீடியா பெண்கள் எனப் பலரும் இன்று ஹேர் எக்ஸ்டென்ஷன் உபயோகிக்கத் தொடங்கி விட்டார்கள். இதில் பக்க விளைவுகள் இல்லை என்பது கூடுதல் சிறப்பு.

*ஹேர் எக்ஸ்டென்ஷகளில் 3 முதல் 5 கிளிப் வரை இருக்கும். அவற்றை நாமே நம் தலையில் தேவையான இடத்தில் பொருத்திக் கொள்ளும்வகையில் உபயோகிக்க எளிதானதாகவே இருக்கும். கிளிப்பா…. அது எந்தளவுக்கு உறுதியாக இருக்கும்? என்றோ யாராவது தொட்டுப் பார்த்தாலோ, இழுத்துப் பார்த்தாலோ கையோடு வந்து விடுமோ என்றோ பயப்படத் தேவையில்லை.

இன்னும் சொல்லப் போனால் ஹேர் எக்ஸ்டென்ஷன் வைத்துக் கொண்டு நடனமாடலாம். குதிக்கலாம். நீச்சலே அடிக்கலாம். நாள் முழுக்க உபயோகித்துவிட்டு, இரவு தூங்கச் செல்வதற்கு முன் கழற்றி வைத்து விடலாம். மறுபடி தேவைப்படுகிற போது எடுத்து மாட்டிக் கொள்ளலாம்.

*செயற்கை முடியில் தயாரிக்கப்பட்டதா, இயற்கை முடியிலா… முடியின் நீளம்… தன்மை போன்றவற்றைப் பொறுத்து இதன் விலை வேறுபடும். குறைந்தது 500 ரூபாயில் இருந்தே கிடைக்கும்Post a Comment

Protected by WP Anti Spam