கறுத்துப்போன முழங்கை பளிச்சிட சில டிப்ஸ்!! (மகளிர் பக்கம்)

Read Time:5 Minute, 59 Second

பனிக்காலம் வந்து விட்டாலே உடலில் ஒரு வறட்சித் தன்மையும் வந்து விடுகிறது. குளிப்பதற்கு முன்பாக லேசாக எண்ணை தடவிக் கொண்டு குளித்தால் குளித்த பின் தோலில் வறட்சியால் வரும் சுருக்கங்கள் தவிர்க்கப்படும்.

*சுடு தண்ணீரில் எலுமிச்சை சாறும், சிறிதளவு தேனும் கலந்து குடிக்க புத்துணர்ச்சியாய் இருக்கும்.

*வைட்டமின் சி சத்து அதிகம் உள்ள நெல்லிக்காய் சாப்பிட்டால் சருமத்தின் உள்சூடு பாதுகாக்கப்படும்.*கால்பாதம் வெடித்து விடுவது பனிக்காலங்களில் சகஜம். இதற்கு பாதங்களை வெதுவெதுப்பான நீரில் வைத்து நீரில் உப்பு சிறிது ஆலிவ் ஆயில் சேர்க்கவும்.

*15 நிமிஷம் கழித்து ப்யூமிக்ஸ் கல்லில் நன்கு தேய்க்கவும். பிறகு பாதங்களை துடைத்து லேசாக க்ரீம் தடவவும். பெட்ரோலியம் ஜெல்லி மிகவும் நல்லது அது வாஸ்லினுக்கு சமம். தோலுக்கு சிறந்த பாதுகாப்பு.

*உதடுகளுக்கு அவ்வப்போது சிறிது வெண்ணெய் பூசவும். வாஸ்லின் அல்லது உதடுகளுக்கென்றே உள்ள பிரத்தியேகக் க்ரீம்களை பயன்படுத்தலாம்.

*நிறைய பழங்கள், கேரட் சாப்பிடுவது உடல் வறட்சியை நீக்கும். சுடுநீர் குடித்து வந்தால் வறட்சியை கட்டுக்குள் வைக்கும்.
தோலில் ஏற்படும் சுருக்கத்தைப் போக்க

ஆயில் மசாஜ்: பாதாம் எண்ணெய், நல்லெண்ணெய் இரண்டையும் சமமாக எடுத்து உடம்பு முழுவதும் தடவி மூன்று மணி நேரம் ஊற வையுங்கள். பின்னர் கோதுமைத் தவிடால் ஒத்தடம் கொடுத்து கடலை மாவினால் தேய்த்துக் கழுவுங்கள். வாரம் ஒருமுறை இப்படிச்செய்துவர, சருமத்தில் சுருக்கம் மறைந்துவிடும்.

கறுத்துப்போன முழங்கையை எப்படி பளிச்சாக்குவது?

நாற்காலியில் ஒரே பொசினில் உட்கார்ந்திருந்தால் முட்டிகள் உராய்ந்து கறுத்துப் போகும். நாற்காலியில் வியர்வை படாமல் பார்த்துக் கொண்டாலும், முட்டி கறுப்பாகாது. நாற்காலியின் கைப்பிடிகளின் மீது டவலையோ அல்லது வெல்வெட் துணியையோ போட்டும் உட்காரலாம். இதனால் கை முட்டி உராயாமல் இருக்கும்.

முட்டியின் கறுப்பு நிறத்தை அகற்ற, ஆரஞ்சுத் தோல் பவுடர் கடைகளில் கிடைக்கிறது. 4 டீஸ்பூன் ஆரஞ்சுத் தோல் பவுடரை, 4 டீஸ்பூன் பாலில் ஊறவைத்து கலந்து கொண்டு முட்டியில் பூசி லேசாகத் தேய்த்துவிட்டு, 10 நிமிடங்களுக்குப்பின் தண்ணீரில் கழுவிவிடலாம். மாய்ச்சுரைசர் கிரீம்கள், வாஸ்லின் மாதிரியான கிரீம்களை அப்ளை செய்வதாலும் முட்டியின் கறுத்த நிறம்போய்விடும்.குளிர்காலத்தில் கதகதப்பான உடைகள் அணிந்துக் கொள்ளுதல், நெருப்புக்கு அருகில் அமர்ந்து குளிர் காய்தல், தலை முதல் கால் வரை மூடிய நிலையில் உடைகள் அணிதல் ஆகியவை மட்டும் போதாது. குளிர்காலத்தில், கூந்தலை பராமரிப்பது அவசியம்.

கூந்தல் பராமரிப்பு :

குளிர்காலத்தில் கூந்தல் வறண்டு காணப்படும். எனவே, கூந்தலில் கத்தாழை சாறு தடவி, சில நிமிடங்கள் கழித்து மசாஜ் செய்யலாம். இதனால், கூந்தல் மென்மையாக இருக்கும். மேலும், வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை ஆலிவ் ஆயில் தடவலாம். இதனால், கூந்தலின் ஈரத்தன்மை வலுவடையும். எண்ணெயை சூடுபடுத்தி, தலையில் தேய்த்து வெயில் காலத்தில் ஊறவிடுவதை விட குறைந்த நேரம் மட்டுமே ஊறவிட வேண்டும். தலையில், அதிக நேரம், எண்ணெயை ஊறவிட்டால், உடல் நலன் பாதிக்கப்படலாம்.அதே போல், மூலிகைச் சாறுகள் ஏதாவது தலையில் தேய்ப்பதாக இருந்தாலும், அவற்றையும் அதிக நேரம் ஊற விடக் கூடாது. மூலிகை சாறுகள் பெரும்பாலும் குளிர்ச்சி தருபவை, அவை வெயில் காலத்திற்கே உகந்தது.
அடிக்கடி ஹேர் கலரிங் செய்வது, சுருட்டை முடிகளை நீண்ட முடியாக மாற்றும் ஸ்ட்ரீக்கிங் ஆகியவற்றால் கூந்தலின் ஈரப்பதம் வறண்டு போவதால் அவற்றையும், சூடான சாதனங்களை கூந்தலில் பயன்படுத்துவதையும் தவிர்ப்பது நல்லது.கூந்தலில் இயற்கையான ‘டைகள்’ பயன்படுத்தலாம். ட்ரையர்கள் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது. குளிர்ந்த காற்றில் இருந்து கூந்தலைக் காப்பாற்ற, ‘சில்க் பேப்ரிக்’ துணிகளைப் பயன்படுத்தலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பைபாஸ் சர்ஜரி தவிர்க்க இதோ வழி…!! (மருத்துவம்)
Next post கூந்தல்!! (மகளிர் பக்கம்)