உங்க கழுத்து கருப்பா இருக்கா? அதை நீக்க இதோ சில வழிகள்!! (மகளிர் பக்கம்)

Read Time:4 Minute, 44 Second

ஒவ்வொரு நாளும் அழகாக இருக்க வேண்டுமென்ற எண்ணம் கண்டிப்பாக ஒவ்வொருவருக்கும் இருக்கும். அதற்கு சரியான பராமரிப்புக்களை முகத்திற்கு மட்டுமின்றி, கை, கால்கள், கழுத்து போன்ற இடங்களுக்கும் கொடுக்க வேண்டும். குறிப்பாக முகத்தை பராமரிக்கும் நாம், கழுத்தைச் சுற்றி சரியாக பராமரிப்பதில்லை. இதனால் அப்பகுதி சிலருக்கு மிகவும் கருமையாக இருக்கும். மேலும் இப்பகுதியில் அதிகமாக வியர்ப்பதால், தூசிகள், இறந்த செல்கள் போன்றவை அப்படியே படிந்து கருமையான படலமாகின்றன. இதனைத் தவிர்க்க தினமும் போதிய பராமரிப்புக்களை கழுத்திற்கும் கொடுக்க வேண்டும். இங்கு கழுத்தில் உள்ள கருமையைப் போக்க சில வழிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

தினமும் ஸ்கரப் செய்யுங்கள்: கழுத்தை தினமும் ஸ்கரப்பர் கொண்டு தேய்க்க வேண்டும். இல்லாவிட்டால் பாலை கழுத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் வெது வெதுப்பான நீரால் துடைத்து எடுங்கள். இதனால் கழுத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள் முழுமையாக வெளியேறும் மற்றும் வறட்சியின்றி ஈரப்பசையுடனும் இருக்கும். எலுமிச்சை ப்ளீச் 1/2 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றில் 1 டீஸ்பூன் ரோஜ் வாட்டர் சேர்த்து கலந்து, கழுத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் இரவில் படுக்கும் முன் செய்து வந்தால், கழுத்தில் உள்ள கருமை மறைவதைக் காணலாம்.

ஓட்ஸ்: ஓட்ஸ் உடலுக்கு மட்டும் நல்லதல்ல, சருமத்திற்கும் தான். அதிலும் ஓட்ஸை பொடி செய்து, தக்காளி கூழ் உடன் சேர்த்து கலந்து, கழுத்தில் தடவி சிறிது நேரம் மென்மையாக தேய்த்து, 20 நிமிடம் ஊற வைத்து கழுவினால், கழுத்தில் உள்ள கருமை அகலும். குறிப்பாக இம்முறையை முகத்திற்கு செய்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.

பேக்கிங் சோடா: பேக்கிங் சோடா ஓர் அற்புதமான சருமத்தில் உள்ள கருமையைப் போக்கும் பொருள். அத்தகைய பேக்கிங் சோடாவை நீரில் கலந்து கழுத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 23 முறை செய்து வந்தால், கழுத்தில் இருக்கும் கருமை நீங்கும்.

வெள்ளரிக்காய்: வெள்ளரிக்காயை துருவி, ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, கழுத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, கழுவும் முன் சிறிது நேரம் மசாஜ் செய்து, பின் கழுவ வேண்டும். இதனால் கழுத்தில் உள்ள கருமை மறையும்.

தயிர்: தயிர் ஓர் சிறப்பான ப்ளீச்சிங் தன்மை கொண்ட பொருள். 1 டீஸ்பூன் தயிரில் 1 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, கழுத்தில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், நல்ல மாற்றத்தைக் காணலாம். இன்னும் சிறப்பான பலனைப் பெற அத்துடன் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்துக் கொள்ளுங்கள்.

பப்பாளி: காய் பப்பாளி காயை தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்து, கழுத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், கழுத்தில் உள்ள கருமை கொஞ்சம் கொஞ்சமாக மறைவதைக் காணலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தினம் வால்நட் சாப்பிடுங்க… படுக்கையில் அசத்திடுங்க…!! (அவ்வப்போது கிளாமர்)
Next post கூந்தல்!! (மகளிர் பக்கம்)