பேக்கரி கடைக்குள் புகுந்த ரஷிய அதிபர் புதின் -காசு கொடுத்து காபி வாங்கி குடித்தார்

Read Time:1 Minute, 33 Second

Rushia.Putin.jpgரஷிய அதிபர் புதின் ஜெர்மனி நாட்டில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். டிரெஸ்டன் நகருக்கு சென்று இருக்கும் அவர் அங்கு ஒரு சிறிய பேக்கரி கடைக்கு திடீர் என்று சென்றார். அங்கு 50 Ind.ரூபாய் கொடுத்து ஒரு கேக்கும், 120 Ind.ரூபாய் கொடுத்து ஒரு காபியும் வாங்கினார். அவர் ரஷிய உளவுத்துறை அதிகாரியாக அந்த ஊரில் வேலை செய்தவர். அதனால் அவர் ஜெர்மனி மொழியில் சரளமாக பேசினார். அவர் கடைக்குள் நுழைந்ததை என்னால் நம்பமுடியவில்லை. அவர் சுத்தமான ஜெர்மனி மொழியில் பேசினார் என்று கடையின் மேலாளர் அலெக்சாண்ட்ரா கயேர்ட்னர் கூறினார்.

அங்கு இருந்த ஜெர்மனி மொழி பத்திரிகையை கொஞ்சநேரம் படித்தார். பிறகு கடையில் பக்கத்து மேஜையில் சாப்பிட்டுக்கொண்டிருந்த கட்டிடத்தொழிலாளர்களிடம் அவர் பேசினார். கேக்கை சாப்பிட்டு காபி குடித்ததும் அவர் அந்த கடையில் இருந்து வெளியேறினார். அவரது பாதுகாவலர்கள் மற்றும் அவருடன் வந்த போட்டோகிராபர்கள் ஆகியோரும் வெளியேறினார்கள்.

Rushia.Putin.jpg

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post மினி உலக கோப்பை தகுதி சுற்று போட்டி: இலங்கை-வெஸ்ட் இண்டீஸ் பலப்பரீட்சை
Next post கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும் அதுகுறித்த செய்திகளும்