மெஹந்தி!! (மகளிர் பக்கம்)

Read Time:6 Minute, 25 Second

மருதாணியை தேர்ந்தெடுப்பது முதல் மருதாணி வைப்பதால் உண்டாகிற நன்மைகள் வரை பல விஷயங்களையும் சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக மெஹந்தி டிசைன்கள் பற்றி, ரெடிமேட் மெஹந்தி கோன் உபயோகிக்கிற போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் பற்றி, மெஹந்தி அலர்ஜி வந்தால் செய்ய வேண்டிய முதலுதவி பற்றி… இன்னும் ஏராளமான மெஹந்தி தகவல்களைப்பற்றி விரிவாகப் பேசுகிறார் மெஹந்தி ஆர்ட்டிஸ்ட் பிரேமா வடுகநாதன்!

விதம் விதமான மெஹந்தி டிசைன்கள்

குஜராத்தி மெஹந்தி டிசைன்: நெருக்கமான கோடுகள், பூக்கள், மயில், மணப்பெண், முரசு போன்ற டிசைன்களை வரைவது. அரபிக் மெஹந்தி டிசைன்: பெரிய பூக்கள், இலை, கொடிகளை வரைவது. பாகிஸ்தானி மெஹந்தி டிசைன்: இது இந்தியன், அரபிக் டிசைன்கள் இரண்டையும் கலந்து வரைவது. இந்தோ அரபிக் மெஹந்தி டிசைன்: பட்டையான கோடுகளால் அவுட் லைன் வரைந்து, இந்தியன் டிசைன்களில் உள்ளே உள்ள இடங்களை நிரப்புவது.

கிளிட்டர் மெஹந்தி: ஆஸ்துமா, வீஸிங் இருப்பவர்களுக்கு மெஹந்தி குளிர்ச்சி என்பதால், அவர்களுக்கு கிளிட்டர் மெஹந்தி பரிந்துரைக்கப்படும். உடைக்கு மேட்ச்சாக ஜிகினா கலந்து பூக்கள், டாட்டூ போல பெரிய டிசைன்களாக வரைவதுதான் இதன் சிறப்பு. பார்ட்டி பிரியர்கள் அதிகம் விரும்பி போட்டுக் கொள்வதும் இந்த ஒரு நாள் மெஹந்திதான்!
பிளாக் மெஹந்தி: இது இஸ்லாமிய நாடுகளில் பிரபலம்.

பூக்கள் நிறைய கொண்ட டிசைனில் வெளிக்கோடுகள் கருப்பு நிறத்திலும், உள் பக்கம் சிவப்பு நிறத்திலுமாக வரைவார்கள். கருப்புசிவப்பு காம்பினேஷனில் அந்த டிசைன் கண்களைக் கவரும். எப்போதுமே தரமான மருதாணி இலையைப் பறித்து, பதமாக அரைத்து வீட்டிலேயே மெஹந்தி கோன் தயாரித்து உபயோகிப்பதுதான் பாதுகாப்பானது. இன்றைய பரபரப்பான வாழ்க்கையில் யாருக்கும் அதற்கு நேரமும் பொறுமையும் இல்லை. எனவே, ரெடிமேட் மெஹந்தி கோன்களையே உபயோகிக்கிறார்கள். ரெடிமேட் கோன் தேர்ந்தெடுக்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்…

லெமன் மெஹந்தி கோன், இன்ஸ்டன்ட் மெஹந்தி கோன் என்று பல வகை மெஹந்தி கோன்கள் கிடைக்கின்றன. மெஹந்தி கோன் வாங்கும் போது அதன் தயாரிப்புத் தேதியைப் பார்த்து வாங்கவும். ரெடிமேட் கோனை குறைந்தது 3 மாதங்கள் மட்டுமே வைத்திருந்து உபயோகப்படுத்த முடியும். நல்ல தரமான மெஹந்தி கோன்கள் மார்க்கெட்டில் கிடைக்கின்றன.

அந்த மெஹந்தி கோன் பெட்டியின் மேல் தயாரிக்கும் நிறுவனம், அதன் விலாசம் உள்ள பிராண்டுதான் சிறந்தது. இன்ஸ்டன்ட் மெஹந்தி கோன், டிசைன் வரைந்த பத்து நிமிடங்களுக்குள், டார்க் மெரூன் கலர் வந்துவிடும். இந்த மாதிரி மெஹந்தி கோன்களில் கண்டிப்பாக PPD என்று சொல்லக் கூடிய ParaPhenyl Diamin கலந்திருக்க வாய்ப்பு இருக்கிறது.

மெஹந்தி அலர்ஜி வந்தால் என்ன செய்ய வேண்டும்?

சென்சிட்டிவ் சருமம் கொண்டவர்கள், பொதுவாகவே ரெடிமேட் மெஹந்தி கோன்ஸ் உபயோகப்படுத்த வேண்டாம். முதல் முறை ரெடிமேட் கோன் வைத்து மெஹந்தி போட்டுக்கொள்கிறவர்கள் அதில் சிறிதளவை எடுத்து பேட்ச் டெஸ்ட் (Patch test) செய்துவிட்டு உபயோகிப்பது பாதுகாப்பானது. தரமான மெஹந்தி கோனால் அலர்ஜி வர வாய்ப்பில்லை. அப்படியே மெஹந்தியால் அலர்ஜி வந்தால் அலட்சியப்படுத்தாமல், உடனடியாக மருத்துவரைப் பார்ப்பது அவசியம்.

சில தரமற்ற மெஹந்தி கோன்களில் நல்ல நிறம் வர வேண்டும் என்பதற்காக குங்குமம், சுண்ணாம்பு போன்றவற்றைக் கூட சேர்க்கிறார்கள். இவையும் நிறைய பேருக்கு அலர்ஜியை ஏற்படுத்தலாம். மெஹந்தியால் அலர்ஜி ஏற்பட்டது தெரிந்தால் உடனடியாக அதை உபயோகிப்பதை நிறுத்த வேண்டும். சரும மருத்துவரைப் பார்த்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

மருதாணி சிவக்க என்ன செய்ய வேண்டும்?

மெஹந்தி டிசைன் போட்ட இடத்தில், எலுமிச்சையும் சர்க்கரையும் கலந்த கரைசலை பஞ்சினால் தொட்டு டிசைன் மேல் ஒற்றி வரவும்.

டிசைன் காய்ந்து எடுத்த பின், தண்ணீர் படாமல் 4 மணி நேரம் பார்த்துக் கொள்ளவும்.

சுடுநீரில் 15 20 கிராம்பு போட்டு அதில் இருந்து வரும் ஆவியில் கையை காட்டினால், அதிக நிறம் வர வாய்ப்பு இருக்கிறது.

கையில் லோஷன், எண்ணெய், பிளீச் படாமல் பார்த்துக் கொண்டால், மெஹந்தி கலர் மாறாமல் இருக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அந்த ‘3’ நாட்களில் உறவு கொள்ளலாமா? (அவ்வப்போது கிளாமர்)
Next post பருக்களை நீக்கும் அழகு சாதனங்கள்!! (மகளிர் பக்கம்)