கூந்தல்!! (மகளிர் பக்கம்)

Read Time:9 Minute, 10 Second

தினமும் பல் துலக்குகிறோம். முகம் கழுவுகிறோம். குளிக்கிறோம். அது போலத்தான் கூந்தலை சுத்தப்படுத்துவதும் அன்றாடம் செய்யப்பட வேண்டிய அவசியமான கடமை. ஆனால், பலரும் கூந்தலை சுத்தப்படுத்துவதில் அக்கறை காட்டுவதில்லை. தினமும் தலைக்குக் குளிப்பதா என்கிற கேள்வி அனேகம் பேருக்கு உண்டு.

கூந்தலில் சீபம் என்கிற ஒருவகையான இயற்கை எண்ணெய் சுரக்கும். ஷாம்பு என்பது மண்டைப் பகுதியில் படிகிற தூசு, அழுக்கு, அதிகப்படியான எண்ணெய் பசை போன்றவற்றை நீக்கி, கூந்தலை சுத்தப்படுத்துகிற ஒரு வழுவழுப்புத் திரவம். ஆனால், ஒவ்வொருவரும் அவரவர் கூந்தலின் தன்மைக்கேற்ற ஷாம்புவை தேர்வு செய்ய வேண்டியது அவசியம். உங்களுடைய கூந்தல் எந்த வகையைச் சேர்ந்தது எனத் தெரிந்து கொள்ள வேண்டியதும் அவசியம்.மண்டைப்பகுதி எண்ணெய் பசையுடன் இருக்கிறது.

ஆனால், நுனிகள் வறண்டிருக்கின்றன… அப்போது என்ன ஷாம்பு உபயோகிப்பது? வறண்ட கூந்தலுக்கானதையா? எண்ணெய் பசைக் கூந்தலுக்கானதையா? இப்படி ஒவ்வொருவருக்கு ஒரு கேள்வி இருக்கும்.தவிர, கூந்தலின் ஈரப்பதம் காக்க… அடர்த்தியாகக் காட்ட… மிருதுவாக்க… பலப்படுத்த… இப்படி ஏதேதோ உத்தரவாதங்களுடன் நிறைய ஷாம்புகள் வருகின்றனவே… எதைத் தேர்வு செய்வது என்கிற கேள்வியும் இருக்கும்.

எண்ணெய் பசை கூந்தலுக்கு…

– மண்டைப்பகுதியில் இயற்கையாகக் காணப்படுகிற எண்ணெய் பசையானது மண்டைக்கு ஒருவிதப் பாதுகாப்பைத் தரக்கூடியது. அதாவது, மண்டைப்பகுதி சீக்கிரமே வறண்டு போகாமலிருக்க ஈரப்பதத்தைத் தக்க வைக்க அது உதவும். ஆனால், அதுவே அளவுக்கதிகமாக சுரந்தால் கூந்தல் பிசுபிசுப்படைவதுடன், பொடுகு உருவாகவும் காரணமாகி விடும். இப்படிப்பட்ட கூந்தல் உடையவர்கள் கூந்தலை ஈரப்பதத்துடன் வைப்பதாகவோ, மென்மையாக்குவதாகவோ, சுருள் சுருளாக மாற்றுவதாகவோ சொல்லும் ஷாம்புகளை தவிர்க்க வேண்டும். இவை ஏற்கனவே எண்ணெய் பசையுடன் உள்ள மண்டைப் பகுதியை இன்னும் மோசமாக்கும்.

– Volumizing, strengthening or balancing எனக் குறிப்பிடப்பட்டிருக்கும் ஷாம்புகள் உங்கள் கூந்தலின் அதிகப்படியான எண்ணெய் பசையைப் போக்கும்.

– Daily Clarifying ஷாம்புகள் தினசரி உபயோகத்துக்கு ஏற்றவை. ஆனால், அளவுக்கு மீறி உபயோகித்தால் மண்டையின் இயற்கையான எண்ணெய் பசை முற்றிலும் நீக்கப்படலாம் என்பதால் கவனம் தேவை.

வறண்ட கூந்தலுக்கு…

வறண்ட கூந்தல் என்பது பிரச்னைக்குரிய கூந்தல். அதில் அரிப்பு, செதில்களாக உதிர்வது, முடி உதிர்வு போன்றவை வரும் வாய்ப்புகள் அதிகம்.

– Strengthening, fortifying and volumizing ஷாம்புகளை தவிர்க்க வேண்டும்.
– லேசான வறட்சியுடன் அரிப்போ செதில்கள் உதிர்வோ இல்லாத கூந்தலுக்கு Promote moisture, hydration எனக் குறிப்பிடப்பட்டிருக்கும் ஷாம்புகளை உபயோகிக்கலாம்.

– அளவுக்கதிகமாக வறண்டு போயிருக்கும் கூந்தலுக்கு மென்தால் மற்றும் டீ ட்ரீ கலந்துள்ள ஷாம்புகள் சிறந்தவை.

– Nioxin கலந்துள்ள ஷாம்புகள் மிதமானது முதல் அதீத வறட்சி உள்ள கூந்தல்களுக்குப் பொருத்தமானவை.
– சல்பேட் கலந்துள்ள ஷாம்புகளை இவர்கள் உபயோகிக்கவே கூடாது. அது கூந்தலின் வறட்சியை மிகவும் அதிகப்படுத்தும்.

காம்பினேஷன் கூந்தலுக்கு…

– மிக மென்மையான/பாதிக்கப்பட்ட கூந்தலுக்கு…டீப் கண்டிஷனிங் செய்வதாக சொல்லப்படுகிற ஷாம்புகளை இவர்கள் தவிர்க்க வேண்டும். கூந்தல் மேலும் மோசமடைவதைத் தவிர்த்து, பத்திரமாகப் பராமரிக்க புரோட்டீன் அதிகமுள்ள ஷாம்புகளை உபயோகிக்கலாம்.

– சுருட்டையான/செதில்கள் உதிரும் கூந்தலுக்கு…
இவர்களுக்கு Anti Dandruff ஷாம்புகளே சிறந்தவை. ஆனால், அது கூந்தலின் வறட்சியை அதிகப்படுத்தும் என்பதால், இந்த ஷாம்பு உபயோகித்த பிறகு Smoothing, Moisturizing கண்டிஷனர் உபயோகிக்க வேண்டியது மிக அவசியம்.

– எண்ணெய் வடியும் மண்டைப் பகுதி/வறண்ட நுனிப்பகுதி கொண்ட கூந்தலுக்கு…இந்த வகையான கூந்தலைக் கையாள்வது சற்றே சிரமமானது. மண்டைப்பகுதியில் படிந்துள்ள எண்ணெய் பசை மற்றும் அழுக்கை நீக்க அதற்கேற்ற ஷாம்புவையும், கூந்தல் வறண்ட நிலைக்கு மாறுகிற இடத்திலிருந்து, அதற்கேற்ப நுனிப்பகுதிகளுக்கு மட்டும் கண்டிஷனர் உபயோகிப்பதும் அவசியம்.

ஷாம்புவின் பி.ஹெச் அளவுகூந்தலின் இயற்கையான கருமை நிறத்தையும், அதன் பளபளப்பையும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமானால் நீங்கள் உபயோகிக்கிற ஷாம்புவின் பி.ஹெச் அளவைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். பல ஷாம்புகளிலும் இந்த பி.ஹெச் அளவு குறிப்பிடப்படுவதில்லை.0 முதல் 14 வரையிலான பி.ஹெச் அளவில் 7 எனக் குறிப்பிடப்பட்டிருந்தால் நடுநிலையானது.7ஐ விடக் குறைந்தால் அமிலத்தன்மை அதிகம் கொண்டதாகவும், 7ஐ விட அதிகமாக இருந்தால் காரத்தன்மை அதிகம் கொண்டதாகவும் அர்த்தம்.

ஷாம்பு கரைசலில் காணப்படுகிற ஹைட்ரஜனின் அளவே அதன் அமில, காரத் தன்மையின் அளவைத் தீர்மானிக்கிறது. அதிக பி.ஹெச் கொண்ட ஷாம்புகள் உங்கள் கூந்தலுக்கு உகந்தவை அல்ல. 5 முதல் 7 வரையிலான பி.ஹெச் அளவே சிறந்தது.

பி.ஹெச் அளவு ஏன் அவசியம்?

கூந்தல் என்பது கியூட்டிகிள் எனப்படுகிற செதில்களால் ஆன மிக நுண்ணிய பகுதிகளாகும். தண்ணீரும் காரத்தன்மையும் கொண்ட பொருட்களை உபயோகிக்கும் போது இந்த செதில் பகுதிகள் திறந்து, அவற்றின் உள்பாகங்கள் வரை ஊடுருவி, பாதிக்கப்படும். கூந்தலை பாதிக்கிற இது போன்ற கடுமையான தாக்குதல்களில் இருந்து கியூட்டிகிள் பகுதி பாதுகாக்கப்பட வேண்டும். மிதமான அமிலத்தன்மை கொண்ட ஷாம்பு உபயோகிக்கும் போது கியூட்டிகிள் பகுதி மூடப்படுவதுடன், கூந்தல் தண்டுகள் பாதுகாக்கப்படும். கூந்தலின் வறட்சியும் தவிர்க்கப்படும்.

– எண்ணெய் பசையான மண்டைப்பகுதியும் வறண்ட நுனிகளும் கொண்டவர்களுக்கு பி.ஹெச் பேலன்ஸ் உள்ள ஷாம்பு பெரிதும் உதவும்.

– மிகவும் எண்ணெய் பசையான கூந்தல் உள்ளவர்கள், Panthenol கலந்த பி.ஹெச் பேலன்ஸ்டு ஷாம்புவை தேர்வு செய்ய வேண்டும்.

– வறண்ட கூந்தலும் நுனிகள் வெடித்தும் காணப்பட்டால் Cetyl alcohol கலந்த பி.ஹெச் பேலன்ஸ்டு ஷாம்புவை தேர்வு செய்ய வேண்டும்.

– கலரிங் செய்யப்பட்ட கூந்தலுக்கு ஜோஜோபா ஆயில் மற்றும் வைட்டமின் ஈ கலந்த பி.ஹெச் பேலன்ஸ்டு ஷாம்புவை தேர்வு செய்ய வேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முகப்பொலிவுக்கு 5 வழிகள்!! (மகளிர் பக்கம்)
Next post ஆரோக்கியமாக இருப்பதே வெற்றிதான்!! (மருத்துவம்)