கூந்தல்!! (மகளிர் பக்கம்)

Read Time:6 Minute, 4 Second

அலோபேஷியா என்பது வழுக்கைத் தன்மையைக் குறிப்பது என அறிந்திருப்பீர்கள். வயோதிகம், பரம்பரை வாகு, உடல்நலக் குறைபாடு எனப் பல்வேறு காரணங்களால் வழுக்கைப் பிரச்னை வருவது இயற்கை. இவற்றை எல்லாம் தாண்டி, வேறு ஒரு காரணத்தாலும் வழுக்கை விழலாம். டிராக்‌ஷன் அலோபேஷியா என்கிற அந்தப் பிரச்னைக்குக் காரணமே வேறு.

கூந்தலுக்குக் கொடுக்கப்படுகிற அதிகபட்ச அழுத்தம் அல்லது இழுப்பே இதற்கான காரணம். ஒருவர் எப்போதும் தன் கூந்தலை ஒரே மாதிரி டைட்டாக பின்னிக் கொள்வதாலும், போனி டெயில் போலக் கட்டிக் கொள்வதாலும் ஏற்படுகிற பிரச்னை. டிராக்‌ஷன் அலோபேஷியாவில், தலையில் எந்தப் பகுதி முடியானது அதிக இறுக்கமாக இழுக்கப்படுகிறதோ, அந்தப் பகுதியில் முடி உதிர்ந்து வழுக்கை ஏற்படும். பெரும்பாலும் முன்னந்தலை மற்றும் பக்கவாட்டுகளில் இப்படி ஏற்படும். ஆரம்பத்தில் இது குறைவாகத் தெரிந்தாலும், போகப் போக அதிகரித்து பின்னந்தலைக்கும் பரவும்.

ஃபாலிக்கிள் எனப்படுகிற கூந்தலின் புடைப்புப் பகுதியானது, கூந்தல் உற்பத்திக்கான முக்கியமான இடம். ஒவ்வொரு ஃபாலிக்கிளும் பல வருடங்கள் தீவிரமாக வேலை செய்துவிட்டு, பிறகு தற்காலிகமாக ஓய்வெடுக்கும். அடுத்து முடி உதிர்ந்து மீண்டும் முளைக்கும். இந்த நிலையில் இறுக்கமான பின்னல், குதிரைவால் போன்றவற்றால் அந்த ஃபாலிக்கிள் பகுதி பாதிக்கப்பட்டு, புதிய முடியை உருவாக்க இயலாமல் போகும்.

புதிய ஃபாலிக்கிளை நம்மால் உருவாக்க முடியாது என்பதால் முடி உதிர்வு என்பது நிரந்தரமாக மாறும். எனவே, டிராக்‌ஷன் அலோபேஷியா என்பது சற்றே மிரட்டலான பிரச்னையும்கூட. கூந்தலை இறுக்காமல் தளர்வாக விடுவதுதான் இந்தப் பிரச்னையில் இருந்து தப்பிப்பதற்கான ஒரே வழி.இந்தப் பிரச்னை, டை அடிப்பது, ஸ்ட்ரெயிட்டனிங் போன்ற கெமிக்கல் சார்ந்த பிரச்னைகளாலும் ஏற்படும். ரசாயனங்களின் தாக்கமானது கூந்தலின் வலிமையைக் குறைத்து விடுவதால், சாதாரணமாக தலையை வாரினால்கூட முடி உதிரும்.

டாப் 4 காரணங்கள்

இறுக்கமான பின்னல், போனி டெயில், கிளிப் செய்வது போன்ற பழக்கங்கள்.

கூந்தலை நீண்ட நேரத்துக்கு இறுகக் கட்டி வைத்தது மாதிரியான ஹேர் ஸ்டைல்கள். கூந்தலையும் மண்டைப் பகுதியையும் ரொம்பவும் அழுத்துகிற மாதிரியான ஹெல்மெட். ஏற்கனவே உள்ள வழுக்கையை மறைக்க வீவிங் முறையில் செய்யப்படுகிற காஸ்மெட்டிக் சிகிச்சைகள்.

தடுப்பது எப்படி?

பிரச்னைக்கான காரணத்தைத் தெரிந்து கொண்டுதான் தடுப்பு நடவடிக்கைகளைப் பற்றி யோசிக்க வேண்டும். சிலருக்கு கூந்தலைத் தளர்வாகப் பின்னுவது மற்றும் இரவு படுக்கச் செல்லும் முன் பின்னலை அவிழ்த்துத் தளர்வாக விடுவது என எளிய முறையின் மூலமே தீர்வு காணலாம்.சிலருக்கு மன அழுத்தம் காரணமாக உளவியல் ரீதியாக, கூந்தலை இழுப்பது, சுருட்டுவது, பிடுங்குவது போன்ற பழக்கங்கள் இருக்கும். அப்படிப்பட்டவர்களுக்கு அந்தப் பழக்கங்களுக்கான பின்னணி காரணங்களை ஆராய்ந்து சரிப்படுத்தினால் மட்டுமே இந்தப் பிரச்னையை நிறுத்த முடியும்.

சிகிச்சைகள்…

சீக்கிரமே கண்டுபிடித்து சிகிச்சையைத் தொடர்ந்தால் பிரச்னை தீவிரமாகாமலும் கூந்தல் உதிர்வு நிரந்தரமாகாமலும் தடுக்க முடியும். பாதிப்படைந்த கூந்தல் ஃபாலிக்கிள்களை சரிப்படுத்துவதாக சந்தைப்படுத்தப்படுகிற பல பொருட்களும் அப்படிச் செய்வதில்லை. கூந்தலுக்கு ஏற்பட்ட பலவருட பாதிப்பு என்பது வாழ்நாள் முழுக்க தொடரவே செய்யும். கூந்தலைக் கையாள்வதில் சில மாற்றங்களைப் பின்பற்றுவதன் மூலம் ஆரம்பக்கட்ட வழுக்கையை சரி செய்யலாம்.

தீவிரமடைந்த கடைசிக்கட்ட வழுக்கைப் பிரச்னைக்கு இதுவரை மருந்துகள் இல்லாதது துரதிர்ஷ்டம். முதல் வேலையாக ட்ரைகாலஜிஸ்டை சந்தித்து, பிரச்னையின் தீவிரத்தைத் தெரிந்து கொண்டு, கூந்தல் பராமரிப்பை முறைப்படுத்த வேண்டும். அவரது அறிவுரையின் பேரில், ஆரம்பக்கட்ட முடி உதிர்வை சரி செய்து, மீண்டும் அங்கே முடி வளரச் செய்ய வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அழகான கூந்தலுக்கு…!! (மகளிர் பக்கம்)
Next post நம்பிக்கை தரும் கொரோனா ஆராய்ச்சிகள்.. டிசம்பருக்குள் தடுப்பூசி! (மருத்துவம்)