கூந்தல்!! (மகளிர் பக்கம்)

Read Time:7 Minute, 7 Second

என்சைக்ளோபீடியா: வி.லஷ்மி

வாரம் தவறாத எண்ணெய் குளியலோ, மாதம் தவறாத பார்லர் விசிட்டோ, காஸ்ட்லியான கூந்தல் அழகுப் பொருள் உபயோகமோ மட்டுமே உங்கள் கூந்தலின் ஆரோக்கியத்தைப் பாதுகாத்து விடாது. கூந்தலின் அழகுக்கும் ஆரோக்கியத்துக்கும் உணவே மருந்து! ஊட்டச்சத்துகளில் ஒன்று குறைந்தாலும் அது கூந்தலில் வேறு வேறு பிரச்னைகளாக பிரதிபலிக்கும்.

கூந்தல் உதிர்வுக்குக் காரணமாகும் ஊட்டச்சத்துக் குறைபாடு

கூந்தலை பாதிக்கிற ஊட்டச்சத்துக் குறைபாடுகளில் முதல் இடம் புரதத்துக்கு. ஃபாலிக்கிள்எனப்படுகிற கூந்தல் நுண்ணறைகளுக்கு ஏராளமான புரதம் தேவை. அதில் குறை ஏற்படும்போது உடனடியாக கூந்தலின் வேர்ப்பகுதி பாதிக்கப்படும்.Protein – Calorie Malnutrition (PCM) எனப்படுகிறஇந்தப் புரதக் குறைபாட்டை அதன் தீவிரத்தைப் பொறுத்து4 நிலைகளாகப் பிரிக்கலாம்.

முதல் நிலையில் கூந்தலானது வறண்டு, உயிரே இல்லாமல் காட்சியளிக்கும். சுலபமாக உடைந்து உதிரும். டெலோஜன் எனப்படுகிற கூந்தல் உதிர்வதற்கு முன்பான ஓய்வு நிலைக்கு நிறைய வேர்க்கால்கள் தள்ளப்படும். அடுத்த நிலையானது, தீவிர வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், இரைப்பை அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கும் அதிகம்
ஏற்படும். இந்த இரண்டு நிலைகளிலுமே கூந்தலானதுசெம்பட்டையாக மாறுவதுடன், ஆங்காங்கே உதிர்ந்து சிதறிய நிலையில் காணப்படும்.

Marasmus என்பதும் புரதக் கலோரி குறைபாட்டு பிரச்னையே. இது பெரும்பாலும் குழந்தையின் முதல் வயதில் ஏற்படும். கூந்தலானது வறண்டும் மிக மெலிதாகவும் இருக்கும். கூந்தலின் வளர்ச்சி நிலையான அனாஜனில் ஒரு முடி நுண்ணறைகூட
இருக்காது. மொத்தமும் டெலோஜன் என்கிற ஓய்வு நிலையிலேயே இருக்கும். Marasmus பிரச்னை தொடருமானால், மொத்த முடியும் கொட்டி விடும். குழந்தையின் வளர்ச்சியும் பெரிதும் பாதிக்கப்படும்.

Kwashiorkor என்பது இன்னொரு நிலை. இது குழந்தையின் 2வது வயதில் தாக்கும். குறைந்த அளவு புரதமும் அதிக கார்போஹைட்ரேட்டும் உள்ள உணவு குழந்தைக்குக் கொடுக்கப்படும்போது இந்தப் பிரச்னை ஏற்படும். Marasmus மற்றும் Kwashiorkor என இரண்டு நிலைகளிலுமே கூந்தல் தொட்டாலே உடையும். உதிரும். தலையில் ஒரு பகுதியிலோ அல்லது முழுவதிலுமோ வழுக்கை ஏற்படும். கருப்பாக இருந்த கூந்தல் சிவப்பாக மாறும்.

இரும்புச்சத்துக் குறைபாடு

கூந்தல் ஆரோக்கியத்துடன் மிக நெருங்கிய தொடர்புள்ளது இரும்புச்சத்து. பெண்களுக்கு இரும்புச்சத்துக் குறைபாடு ஏற்படுவது மிக சகஜமானது. மாதவிலக்கின் போது ஏற்படும் ரத்த இழப்பில் இரும்புச்சத்து பெரியளவில் குறையும். இரும்புச்சத்து குறைபாட்டின் முதல் அறிகுறி முடியின் ஆரோக்கியத்தில் தெரியும்.

அத்தியாவசிய கொழுப்பு அமிலக் குறைபாடு

உடலுக்குத் தேவையான கொழுப்பு அமிலங்களில் குறைபாடு அதிகமாகும் போது, சிலருக்கு புருவங்கள் மற்றும் மண்டைப்பகுதியில் சிவப்புத் திட்டுகள் காணப் படும். பெரும்பாலான முடிகள் உதிர்ந்து விடும். இருக்கும் கொஞ்ச முடியும் வறண்டு, நிறம் மாறி உடையத் தயாராக இருக்கும்.

துத்தநாகக் குறைபாடு

தீவிரமான முடி உதிர்வு, வழுக்கை போன்ற பிரச்னைகளுக்கு துத்தநாகக் குறைபாடு காரணமாகும் என்பதே பலருக்கும் தெரியாது. அத்தியாவசிய கொழுப்பு அமிலக் குறைபாடும் சரி, துத்தநாகக் குறைபாடும் சரி, செல்களின் வளர்சிதை மாற்றத்துடன் சம்பந்தப்பட்டவை என்பதால் அவற்றின் விளைவானது கூந்தல் ஆரோக்கியத்தில் பிரதிபலிக்கும்.மேலே சொன்ன அத்தனை பிரச்னைகளுக்கும் முறையான மருத்துவப் பரிசோதனையும் சிகிச்சைகளும் தேவை. சுய மருத்துவமோ, வெளிப்பூச்சுகளோ பலன் தராது. ட்ரைகாலஜிஸ்ட் உதவியுடன் ஊட்டச்சத்துக் குறைபாட்டை சரி செய்கிற உணவுகளை பற்றித் தெரிந்து கொண்டு பின்பற்றலாம். தேவைப்பட்டால் மருந்துகள் மற்றும் சப்ளிமென்ட்டுகளையும் அவர் பரிந்துரைப்பார்.

அனோரெக்சியா நெர்வோஸா (Anorexia Nervosa)

உடல் எடை அதிகரித்துவிடக் கூடாது என்கிற பயத்தில் வேண்டுமென்றே பட்டினி இருப்பது, சாப்பிட்டதும் வாந்தி எடுப்பது, அளவுக்கதிக உடற்பயிற்சி செய்வது, பேதி மருந்து மற்றும் உடல் இளைப்பதற்கான மாத்திரைகளை எடுத்துக் கொள்வது என சிலர் முயற்சி செய்வதையே அனோரெக்சியா நெர்வோஸா என்கிறோம். இது பெரும்பாலும் டீன் ஏஜ் பெண்களையே பாதிக்கிறது. இதன் விளைவால் முடி உதிர்வு அதீதமாக இருக்கும். கூந்தல் ஆரோக்கியத்தைத் தக்க வைக்கும் அளவுக்கு உணவின் மூலம் உடலுக்குத் தேவையான ஊட்டங்கள் போகாததே காரணம். இது தற்காலிகமானபிரச்னைதான். ஊட்டச்சத்துக் குறைபாடு சரிசெய்யப்பட்டாலே கூந்தல் ஆரோக்கியத்தை மீட்கலாம். ஊட்டச்சத்து நிபுணரின் ஆலோசனை மற்றும் கவுன்சலிங் இரண்டும் இவர்களுக்கு அவசியம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சுய இன்பத்தால் ஆண்மை பறிபோகுமா? (அவ்வப்போது கிளாமர்)
Next post பாலும் பால் சார்ந்த பொருட்களும்…!! (மருத்துவம்)