சில் கிளைமேட்டில் கூந்தல் பராமரிப்பு!! (மகளிர் பக்கம்)

Read Time:3 Minute, 3 Second

ஒருநாள் விட்டு ஒரு நாள் தலையில் விளக்கெண்ணெய் தேய்த்து 10 நிமிடம் ஊற விட்டு குளிக்கலாம். தலையில் மேல்புறத்தோல் வரண்டு முடி உதிர்வதைத் தடுக்கும்.

* 5 மிலி தேங்காய்ப்பாலில் 5மிலி விளக்கெண்ணெய் கலந்து அத்துடன் 10 சொட்டு டீட்ரீ ஆயில் கலந்து பஞ்சில் நனைத்து தலையின் தோல் பகுதியில் படும்படி தேய்த்து ஒரு மணி நேரம் ஊறவைக்கலாம். பின்னர் ஷாம்பு குளியல் செய்து கொள்ளலாம். இதன் மூலம் பொடுகு பரவுவதை தடுக்கலாம்.

* இரவு படுக்கும் முன்னர் மரத்தால் ஆன பெரிய பல் கொண்ட சீப்பினால் தலையில் பதியும் படி வாரினால் ரத்தஓட்டம் சீராகி முடி உதிர்வதைத் தடுக்கும்.

* இரவில் உலர்ந்த திராட்சைகள் 15 வரை தண்ணீரில் ஊறப்போடவும். காலையில் எழுந்ததும் திராட்சைகளை சாப்பிட்டு விட்டு தண்ணீரையும் குடிக்கவும். முடி நன்றாக வளர்வதுடன் பளபளப்பு கூடும்.

*முடி உதிர்வைத் தடுக்க வாரம் ஒரு முறை முடக்கத்தான் கீரையை அரைத்து, தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதுபோல் 3 மாதங்கள் செய்து வந்தால், எந்தக் காரணத்துக்காக முடிகொட்டியிருந்தாலும் சரியாகிவிடும். இக்கீரை நரை ஏற்படுவதையும் தடுக்கும்.

* இரவில்நெல்லிக்காய்களை தண்ணீரில் ஊறப்போட்டு, காலையில் அந்த நீரில் எலுமிச்சை சாறு சேர்த்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் முடி உதிர்வதுநி ற்கும்.

* கற்றாழைச்சாறில்எண்ணெய் கலந்து தலையில் தேய்க்கலாம். நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் ஆகியவற்றை அரைத்து தேங்காய்ப்பாலுடன் கலந்து, தலையில் தடவி அரைமணி நேரம் ஊறவைத்து குளிக்க வேண்டும்.

* வெந்தயத்தை அரைத்து பிரிட்ஜில் வைத்துக் கொண்டு, தினமும் குளிப்பதற்கு முன்பாக தலையில் நன்கு தேய்த்து அரைமணி நேரம் ஊறவைத்துக் குளிக்கலாம். முடிகொட்டுவது நின்று விடும். ஆப்பிள்சாறு, வெந்தயத்தூள், சீயக்காய்த்தூள் ஆகியவற்றை வெந்நீரில் கலந்து தலைக்கு தேய்த்து அலசினால் முடியில் உள்ள பிசுபிசுப்பு நீங்கிவிடும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிங்கி இறால் பிடிக்க போனால் வேற மீன்கள் வருது!! (வீடியோ)
Next post குளிர்கால முக வறட்சியை போக்க!! (மகளிர் பக்கம்)