என்ன எடை அழகே!! (மகளிர் பக்கம்)
எடை குறைப்பு இத்தனை எளிதானதா என வாசிக்கிற ஒவ்வொருவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிற தொடர் `என்ன எடை அழகே…’.
குங்குமம் தோழியும், `தி பாடி ஃபோகஸ்’ உரிமையாளரும் டயட்டீஷியனுமான அம்பிகா சேகரும் இணைந்து நடத்தும் எடை குறைப்பு ரியாலிட்டி தொடரின் சீசன் 2 வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. சீசன் 2வில் தேர்வான 8 பேரில், இறுதிச் சுற்று வரை பயணித்தவர்கள் சாந்தி, யமுனா, தாமரைச் செல்வி, சபிதா, அகிலா ராணி மற்றும் ராஜலட்சுமி. வெற்றியாளர்களுக்கு சுந்தரி சில்க்ஸ் வழங்கிய அழகான பட்டுப்புடவைகள் பரிசளிக்கப்பட்டன.
எடை குறைஞ்ச உடல், அட்டகாசமான பட்டுப்புடவை, முகத்துல கூடியிருக்கிற அழகுக் களைனு எங்க எல்லாருக்கும் எங்க கல்யாண நாள் ஞாபகம் வந்திருச்சு. புதுசா வாழ்க்கைத் தொடங்கியிருக்கிற மாதிரி ஃப்ரெஷ்ஷா, சந்தோஷமா ஃபீல் பண்ண வச்ச குங்குமம் தோழியையும் அம்பிகா சேகரையும் வாழ்நாள் முழுக்க மறக்க மாட்டோம்…’’ என மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்கள் வெற்றியாளர்கள்!
எங்களுக்கெல்லாம் எப்போ வாய்ப்பு கிடைக்கும்?’ என தினம் தினம் தொலைபேசியிலும் கடிதங்கள், இமெயில் மூலமும் ஆர்வமாகக் கேட்கும் தோழிகளுக்கு… சீசன் 3 விரைவில் ஆரம்பம்!முழுமையான ஆல்பம் காண:
Average Rating