மாபெரும் உணவுத்திருவிழா!! (மருத்துவம்)

Read Time:12 Minute, 0 Second

ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக பாரம்பரிய முறையில் MVM என்ற பெயரில் பெருங்காயம் தயாரித்து வரும், MVM ரமேஷ்குமார் தங்கள் நிறுவனம் பற்றி கூறுகையில், “மூன்று தலைமுறையாக இத்தொழில் செய்து வருகிறோம். ஆப்கானிஸ்தான், கஜகஸ்தான், ஈரான், ஈராக் போன்ற நாடுகளிலிருந்து பெருங்காயத்திற்கான மூலப் பொருட்களை இறக்குமதி செய்கிறோம். இந்தியாவில் இதற்கான சூழல் இல்லையென்றாலும் உலக அளவில் பெருங்காயம் பயன்படுத்துவதில் முதலிடத்திலிருப்பது நாம்தான். பெருங்காயம் உணவு பொருளாக மட்டுமின்றி அதிசிறந்த மருத்துவ பொருளும் கூட. இது வயிறு சம்மந்தப்பட்ட எல்லா பிரச்சினைகளுக்கும் உபயோகப்படுகிறது.

குறிப்பாக கர்ப்பகால பெண்களுக்கும், குழந்தை பெற்ற பின்னரும் இதன் பயன்பாடு மகத்துவமானது. ஒரு சிட்டிகை பெருங்காயத்தை மோரில் கலந்து காலையில் சாப்பிட்டு வந்தால் வாயு போன்ற பிரச்சினைகள் தீரும். உடலுக்கு குளிர்ச்சியூட்டக் கூடிய கம் அரேபிக் என்ற மூலப்பொருட்களை நாம் பெருங்காயத்தில் சேர்க்கிறோம்” என்று கூறும் ரமேஷ் குமார், “மக்களுக்கு மிகவும் பயனுள்ள ஒரு பொருளை உற்பத்தி செய்து, அவர்களிடம் கொண்டு சேர்ப்பதில் மனநிறைவு பெருகிறோம். ஆரம்ப காலம் முதல் இன்று வரை, எங்கள் பொருள் மக்களிடம் சென்று சேர்ந்ததில் பெரும் பங்கு தினகரன், குங்குமத்தை சாரும்” என்றார்.

சருமப் பொலிவுக்கு ஆலிவ்

உட்புறமாகவும், வெளிப்புறமாகவும், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு பயன்படுத்தும் விதத்தில் ஆலிவ் எண்ணைகளை விற்பனை செய்து வரும் தன்யா அசோசியேட் உரிமையாளர், முரளி ஆர்.பார்த்தசாரதி, பேசுகையில், “ஆலிவ் எண்ணைகளை கிரீசிலிருந்து இறக்குமதி செய்கிறோம். அத்தென்னா என்ற பெயரில் சொந்த பிராண்டும் வைத்திருக்கிறோம். எக்ஸ்ட்ரா வெர்ஜின் (extra virigin oil) என்கிற சமையல் எண்ணையினை, இதய நோயாளிகளுக்காக பரிந்துரைக்கிறோம்.

இதனோடு olive pomace oil சமையலுக்காக கொடுக்கிறோம். இதை மூன்று, நான்கு முறை மறுசுழற்சி முறையிலும் பயன்படுத்தலாம். எந்த ஒரு வாசம் வருவதோ, கெடுதலோ இதில் கிடையாது. Pure olive oil மற்றும் ஆல்மண்ட்ராப் ஆயில் மெடிக்கல் ஷாப், நாட்டு மருந்து கடை, டிப்பார்ட்மெண்ட் ஸ்டோர், மால்களில் கிடைக்கும். இது குழந்தைகளுக்கு மசாஜ் செய்யவும், பெரியவர்களும் பயன்படுத்தும் போது எலும்புகள் வலிமை கொள்கிறது. மேலும், சருமம் மிருதுவாகவும், பொலிவும் அடைகிறது. இதை சமைக்கவும் பயன்படுத்தலாம்” என்றார்.

மசாலா உலகின் நம்பர் ஒன்

தொடர்ந்து இருபது ஆண்டுகளுக்கு மேலாக “சூப்பர் பிராண்ட்” என்கிற விருது பெற்று வரும் எவரஸ்ட் மசாலாவின் பிராஞ்ச் மேனேஜர் சுரேஷ் பாபு தங்கள் நிறுவனம் பற்று பேசும் போது, “மசாலா பொருட்களில் இந்தியாவின் நம்பர் ஒன் பிராண்டாக இருக்கும் எவரஸ்ட் மசாலா ஐம்பது ஆண்டு காலம் பழமையானது. 46 மசாலா வகைகளைக் கொண்டிருக்கும் நாங்கள், எந்த ஒரு கலப்படம் இல்லாமலும், தூய்மையானதாகவும் வாடிக்கையாளர்களுக்கு கொடுத்து வருகிறோம்.

அறுபது நாடுகளுக்கு மேல் ஏற்றுமதி செய்து வரும் எவரஸ்ட் நிறுவனத்தின் உற்பத்தித் தளம் ஆசியாவில் மிகப்பெரிய மசாலாப் பொருட்களுக்கான தளமாகும். குஜராத்தில் இயங்கி வரும் இதில் ஜெர்மன் டெக்னாலஜி கொண்டு நவீன முறையில் மசாலா பொருட்களை தயாரித்து வருகிறோம்” என்று கூறும் சுரேஷ், “இந்த எக்ஸ்போ எங்களுக்கு இரண்டாவது அனுபவம். வரும் வாடிக்கையாளர்களுக்கு நேரடியாகவே எங்கள் மசாலா பொருட்களை பரிசோதித்து வாங்குவதற்கான தளமாக இதை பார்க்கிறோம். எப்போதும் தினகரன் நடத்தும் இது போன்ற எக்ஸ்போக்களுக்கு அதிக மக்கள் வருவதால் எங்களை மக்கள் மத்தியில் மேலும் கவனிக்கப்பட இந்த கண்காட்சிகள் மிகவும் பங்களிக்கின்றன’’ என்கிறார்

மணம் கமழும் அகர்பத்தி

அனைத்து வீடுகளிலும் பயன்படுத்தும் பாத்திரம் கழுவும் பொருட்களை இருபத்தி எட்டு ஆண்டுகளாக விற்பனை செய்து வரும் பீதாம்பரி நிறுவனத்தின் சீனியர் ஏரியா சேல்ஸ் மேனேஜர் வேல்முருகன், “வீடுகளில் அடிப்படை தேவைகளின் ஒன்றான கிளீனிங் சம்மந்தமான பொருட்களை கொடுத்து வருகிறோம். ஷைனிங் பவுடர் பித்தலை, செம்பு, அலுமினியம் போன்ற பொருட்களை கழுவ பயன்படுகிறது. தற்போது இரும்பு, எவர் சில்வர் பொருட்கள் கழுவவும் அதற்கேற்றார் போல் கொடுக்கிறோம்.

வெள்ளி பொருட்களை, ‘ரூபரி’ என்ற பவுடர் மூலமாக சுத்தம் செய்யும் போது எந்த ஒரு சேதாரமும் இல்லாமல் வெள்ளி சாமான்கள் புதிதாக வாங்கியது போல் ஜொலிக்கும். முதியோர், குழந்தைகள், மூச்சு சம்மந்தமான பிரச்சினைகள் உள்ளோர்க்கு எவ்வித பாதிப்பும் இருக்காத படி இயற்கை முறையில் கடந்த இரு ஆண்டுகளாக அகர்பத்திகள் உற்பத்தி செய்து வருகிறோம். புதிதாக டாய்லெட் கிளீனரிலும் கவனம் செலுத்துகிறோம்” என்று கூறினார்.

வீட்டுக்கே வருகிறது செக்கெண்ணை

புதிதாக தொழில் முனைவோருக்கு வழிகாட்டியாகவும், பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருபவர்களான ‘MACHINE FACTORY GROUP OF COMPANY’ நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான பிரோஸ் நிஷா தங்கள் நிறுவனம் குறித்து பேசுகையில், ‘‘பல்வேறு வகையான மிஷின்களை உற்பத்தி செய்கிறோம். மரசெக்கின் மூலமாக எண்ணை தயாரித்து வந்தோம். விலை உயர்ந்த அதில் ஒரு நாளைக்கு 80லிட்டர் எண்ணைதான் வரும். தற்போது எல்லோரும் இயற்கை முறைக்கும், ஆரோக்கியத்திற்கும் மாறி வருகிறார்கள். செக் எண்ணெய் பற்றிய விழிப்புணர்வு மக்கள் மத்தியில் அதிகம் உள்ளது.

20 வகையான எண்ணை வித்துகள் மூலம் வீட்டிலிருக்கும் இல்லத்தரசிகளே தங்களுக்குத் தேவையான எண்ணைகளை பெறும் வகையில் மிஷின் தயாரித்துள்ளோம். குழந்தைகளுக்கும், வீட்டிலிருப்பவர்களுக்கும் பரிமாறும் போது நல்லது கொடுக்கிறோம் என்கிற மனநிம்மதி பெறுவர்” என்று கூறும் பிரோஸ் நிஷா, “ஒரு லிட்டர் தூய்மையான சூரிய காந்தி எண்ணை பெறுவதற்கு ரூ.1000 செலவழிக்க வேண்டும். ஆனால், எப்படி நமக்கு குறைந்த விலையில் கிடைக்கிறது” என்கிற கேள்விக்கு பதிலும் அவரேகொடுத்தார்.

‘‘பொதுவாக நாம் வாங்கும் சூரிய காந்தி எண்ணையில் 80% பாமாயில், 20 % சூரியகாந்தி என்று அந்த பாக்கெட்டில் எழுதியிருக்கும். சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லாரும் உணவுப் பழக்கம் காரணமாக தொப்பையோடு உள்ளனர். காரணம் நாம் கசடு எண்ணைகளை தான் பயன்படுத்தி வருகிறோம்” என்கிறார். தற்போது வேலை வாய்ப்பு இல்லாத சூழலில், அவர்களுக்கான வேலையை உருவாக்குவதற்கான குழுவை வைத்திருக்கும் இந்த நிறுவனத்தில், ஒரு பொருள் உற்பத்தி செய்வதிலிருந்து, அந்த பொருள் விற்பனைக்கு எடுத்து செல்லும் பேக் முதல் அனைத்தும் தயாரிப்பதற்கான மிஷின்களை கொடுக்கின்றனர். இது குறித்து கூறும் பிரோஸ் நிஷா, “எண்ணை தயாரிப்பு மிஷனிலிருந்து, அது பேக் செய்யும் பாட்டில், ஸ்டிக்கர் முதற் கொண்டு எளிமையாக வீட்டிலேயே செய்வதற்கான வழிவகை செய்கின்றோம். குறிப்பாக சிறு தொழில் முனைவோரை ஊக்கப்படுத்தி வருகிறோம்” என்றார் பிரோஸ் நிஷா.

கமகமக்கும் காபி

உலகம் முழுவதும் காபி குடிப்போர் இருந்தாலும், தென்னிந்திய காபிக்கென்று தனி சிறப்புண்டு. அந்த தனி சிறப்போடு 70ஆண்டுகளாக தொடர்ந்து இயங்கி வரும் ‘கோதாஸ் காபி’ நிறுவனத்தின் பங்குதாரர் நித்தின், “ஆரம்பத்தில் காபி தூள், காபி கொட்டைகளை கொண்டு வந்தோம். இதனையடுத்து காபி புரூவிங் மிஷின்களை கார்ப்ரேட் நிறுவனங்கள், பள்ளி, கல்லூரி மற்றும் முக்கிய இடங்களில் இன்ஸ்டால் செய்து வருகிறோம். இதன் தனி சிறப்பு காபிக்கு தேவையான பாலின் கொதிநிலை ஒரே அளவில் இருந்தால் தான் அதன் சுவை ஒரே மாதிரி இருக்கும். அது இந்த மிஷினில் கிடைக்கும். இயற்கையான முறையில் தயாராகும் கோதாஸ் காபி, தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, மும்பாய், பூனே, தில்லி போன்ற இடங்களில் கிடைக்கிறது. கோதாஸ் காபி கடைகளில் ஹாட் காபியில் கிடைக்கும் அதே சுவையில் தற்போது கோல்டு காபி-யும் கொடுத்து வருவதோடு, புதிதாக மில்க் ஷேக்குகளும் கொடுக்கிறோம்” என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 46 வது அமெரிக்க ஜனாதிபதியும் 46 வது ஐநா கூட்டத்தொடரும்!! (கட்டுரை)
Next post என்ன எடை அழகே!! (மகளிர் பக்கம்)