என்ன எடை அழகே!! (மகளிர் பக்கம்)
எடையைக் குறைத்து, அளவான உடல்வாகுடன் இருக்க எல்லோருக்கும் ஆசைதான். ஆனால், அதற்கான முறையான வழிகள்தான் பலருக்கும் தெரிவதில்லை. எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்கிற தேடலில் எடைக்குறைப்புக்கான வழியாக யார் என்ன சொன்னாலும் அதைப் பின்பற்றிப் பார்ப்பதும் பலனளிக்காத விரக்தியில் அந்த முயற்சியைக் கைவிடு வதும்தான் பலரின் வழக்கமாக இருக்கிறது.
அறிவியல் ரீதியான முறையில் எடையைக் குறைப்பது தான் ஆரோக்கியமான முறை என்பதை உணர்த்தவும், எடைக் குறைப்பு முயற்சியில் இருக்கிற ஒவ்வொரு வரும் தனிநபர் அல்ல… ஒரு பெருங்கூட்டமே இருக்கிறது என்று காட்டவும், எடைக் குறைப்பு என்பது ராக்கெட் சயின்ஸ் அல்ல என நிரூபிக்கவுமே ‘என்ன எடை அழகே’ என்கிற ரியாலிட்டி தொடர் ஆரம்பிக்கப்பட்டது. சீசன் 1ன் பிரமாண்ட ஆதரவைத் தொடர்ந்து இதோ இப்போது சீசன் 2 தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வரை எடையைக் குறைக்க என்னென்னவோ செய்து பார்த்து வெறுத்துப் போயிருந்த தோழிகளுக்கு, ‘தி பாடி ஃபோகஸ்’ நிறுவன உரிமையாளரும் டயட்டீஷியனுமான அம்பிகா சேகர் வழிகாட்டுகிறார். ஒவ்வொருவரின் தனிப்பட்ட உடல்அமைப்பு, ஆரோக்கியப் பின்னணி, வாழ்க்கை முறை, உணவுப்பழக்கம் எனப் பலவற்றையும் ஆராய்ந்து பார்த்து தனிப்பட்ட முறையில் உணவு மற்றும் உடற்பயிற்சி பட்டியல் பரிந்துரைக்கப்பட்டது. பருமனை விரட்டுவதை பெரும் சவாலாகவே எடுத்துக் களத்தில் இறங்கிய தோழிகள், ஒவ்வொரு கிராம் எடை குறையும்போதும் நம்பிக்கையும் உற்சாகமும் கொண்டனர். அடிப்படையான உணவுப் பழக்கமும் உடற்பயிற்சி ரொட்டீனும் விளக்கப்பட்ட பிறகு, ஒவ்வொருவருக்குமான தேவை அடிப்படையில் பிரத்யேக மெஷின்கள் மூலம் சிகிச்சை அளிக்கிறார் அம்பிகா சேகர்.
அதன்படி, சாந்திக்கு, உடலின் நச்சுத் தண்ணீர் வெளியேற உதவும் லிம்பாடிக் டிரெயினேஜ் சிகிச்சையும், நிவேதிதாவுக்கு ஃபுல்பாடி செலோவும், தாமரைச் செல்விக்கு Upper back சிகிச்சையும், ராஜலட்சுமிக்கு Anti cellulite சிகிச்சையும், யமுனாவுக்கு Transion சிகிச்ைசயும், சபிதாவுக்கு இ.எஃப்.எக்ஸ் சிகிச்சையும் வழங்கப்பட்டன.
பரம்பரைவாகு, உடல் உழைப்பு, உணவுப்பழக்கம் என பல காரணிகளால் பெண்களில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பகுதியில் பருமன் அதிகரிக்கலாம். அந்தந்த பகுதிகளில் உள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைக்கவென சில பிரத்யேக மெஷின்கள் உள்ளன. டயட், எக்சர்சைஸ் ஆகியவற்றுடன், இதையும் சேர்த்துச் செய்கிற போது, ஊளைச்சதை கரைந்து, அளவான உடல்வாகுக்குத் திரும்புவது எளிதாகும்…’’ என்கிறார் அம்பிகா சேகர்.
தோழிகளின் எடை நிலவரம்
முதலிடத்தில் நிவேதிதா
ஆரம்ப எடை – 96.5
இப்போதைய எடை – 83.7
2ம் இடத்தில் சாந்தி
ஆரம்ப எடை – 92.4
இப்போதைய எடை – 81.9
3ம் இடத்தில்
தாமரைச் செல்வி
ஆரம்ப எடை – 74.4
இப்போதைய எடை – 95.7
யமுனா
ஆரம்ப எடை – 65.1
இப்போதைய எடை – 86.1
4ம் இடத்தில் ராஜலட்சுமி
ஆரம்ப எடை – 79
இப்போதைய எடை – 71.7
5ம் இடத்தில் அகிலா ராணி
ஆரம்ப எடை – 85
இப்போதைய எடை – 77.4
6ம் இடத்தில் சபிதா
ஆரம்ப எடை – 75.5
இப்போதைய எடை – 70.5
போட்டியிலிருந்து விலக்கப்படுகிறார் ஐரின்… கிடைத்தற்கரிய இந்த அரிய வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை ஐரின். சிகிச்சைக்கு ஒத்துழைக்காத காரணத்தினால் அவர் இந்த ரியாலிட்டி தொடரிலிருந்து வெளியேற்றப்படுகிறார்.