தமிழர் பகுதியில் ஒரே கிராமத்தின் மீது 48 குண்டுகளை வீசியது ராணுவம்

Read Time:3 Minute, 3 Second

ANI.sflag.gifஇலங்கையில் விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் வெள்ளிக்கிழமை ராணுவம் குண்டு வீசித் தாக்குதல் நடத்தியதாக விடுதலைப் புலிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து விடுதலைப்புலிகளின் இணையத்தளமான தமிழ்நெட்டில் வெளியிடப்பட்டுள்ள செய்தியின் விவரம்: இலங்கையின் வடகிழக்குப் பகுதியான முல்லைத் தீவுப் பகுதியில் இலங்கை ராணுவ விமானங்கள் 48 குண்டுகளை வீசின. கடந்த சில வாரங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் இது மிகப் பெரியதாகும். இதில் யாரும் கொல்லப்படவில்லை. ஆனால் 10 பசுக்கள் கொல்லப்பட்டதோடு பெருமளவிலான விளை நிலங்களும் சேதமடைந்தன என அந்த செய்தி கூறுகிறது.

அமைதி திரும்ப ஐரோப்பிய யூனியன் அழைப்பு:இலங்கையில் இரு தரப்பும் சண்டை நிறுத்தத்தம் செய்ய வேண்டும் என ஐரோப்பிய யூனியன் சனிக்கிழமை வலியுறுத்தியது. ஐரோப்பிய யூனியன் நாடுகளின் சுழற்சி முறையிலான தலைமைப் பதவியை தற்போது பின்லாந்து வகித்து வருகிறது.

இந்நாட்டு அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள ஒரு அறிக்கையின் விவரம் வருமாறு: இலங்கையில் இருதரப்பு சண்டை நிறுத்தத்தின் மூலமாக பேச்சுவார்த்தைக்கு உகந்த சூழலை உருவாக்குவது அவசியம்.

தற்போது அங்கு வெடித்திருக்கும் வன்முறையால் இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே சுவிட்சர்லாந்தில் அக்.28 மற்றும் 29-ல் நடக்க இருக்கும் அமைதிப் பேச்சுவார்த்தை பாதிக்கப்படலாம்.

இலங்கைப் பிரச்சினையில் நார்வே நாட்டின் மத்தியஸ்தம் முக்கியத்துவம் வாய்ந்தது. 2002-ம் ஆண்டில் சண்டை நிறுத்தம் ஏற்பட்டதற்கு நார்வேயின் சமாதானப் பணிகளே காரணமாகும்.
இலங்கைச் சண்டையின்போது நடக்கும் மனித உரிமை மீறல்களை கவனத்தில் கொள்ளவேண்டும்.

சண்டையால் பாதிக்கப்பட்ட பகுதியில் நிவாரணப் பொருள்கள் மக்களைச் சென்றடைகின்றனவா என்பதையும் நிவாரணப் பணியாளர்களின் பாதுகாப்பையும் இலங்கை அரசு உறுதி செய்ய வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ஜப்பானில் நில நடுக்கம்
Next post ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு, பாராளுமன்றக் குழு நாளை கூடுகிறது