By 21 February 2021 0 Comments

இலங்கையில் அதிகரித்து வரும் எதிர்கால ஆபத்து!! (கட்டுரை)

இலங்கையில் சிறுபான்மை தமிழர்கள் சமத்துவம் நீதி அமைதி கண்ணியம் ஆகியவற்றுடன் வாழ்வதற்காக அவர்களின் உரிமைகளிற்கு ஆதரவளிப்பதாக இந்திய தலைவர்கள் உறுதியளித்துள்ளனர்.

ஐக்கியநாடுகளிற்கு வழங்கியுள்ள வாக்குறுதிகளில் சர்வதேச மனித உரிமையை உறுதிசெய்வதாக இந்திய அரசாங்கம் உறுதிமொழி வழங்கியுள்ளது.

இந்த கடப்பாடுகள் மிகவும் முக்கியமானவையாக மாறியுள்ளன,2019 இல் கோத்தபாயராஜபக்ச ஆட்சிக்கு வந்தது முதல் இலங்கையில் மனித உரிமை நிலவரம் மோசமடைந்துள்ளது.

பெப்ரவரி 22 ம் ஆரம்பமாகவுள்ள அடுத்த அமர்வில் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ள இலங்கையர்களை பாதுகாப்பது சர்வதேச சட்டத்தை உறுதி செய்வது ஆகியவற்றிற்கான நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பில் முக்கிய சோதனையை எதிர்கொள்கின்றது.

மனித உரிமை பேரவையின் உறுப்பு நாடு என்ற அடிப்படையில் இந்தியா முக்கிய பங்களிப்பை வழங்கவேண்டியிருக்கும்.
2005 முதல் 2015 வரை அவரது சகோதாரர் அரசாங்கத்திற்கு தலைமை வகித்தவேளை கோத்தபாய ராஜபக்ச பாதுகாப்பு செயலாளராக காணப்பட்டார்.இந்த காலப்பகுதி மோசமான மனித உரிமை மீறல்கள் நிறைந்ததாக காணப்பட்டது.
ஆரசாங்கத்தை விமர்சிப்பவர்கள் கொல்லப்பட்டனர் சித்திரவதை செய்யப்பட்டனர் பலவந்தமாக காணாமல் செய்யப்பட்டனர்.
இலங்கை அரசாங்கத்திற்கும் விடுதலைப்புலிகளிற்கும் இடையிலான முடிவடைந்த உள்நாட்டு யுத்தத்தின் போது பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

இரு தரப்பும் பல யுத்த குற்றங்களிற்கு காரணம்.
யுத்தத்தின் இறுதி மாதங்களில் இலங்கைபடையினர் பொதுமக்கள் மீது கண்மூடித்தனமான எறிகணைதாக்குதல்களை மேற்கொண்டனர்,விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்கள் என சந்தேகப்படுபவர்களை கொலை செய்தனர்.

புதுப்பிக்கப்பட்டுள்ள அச்சங்கள்
2015 இல் மகிந்த ராஜபக்ச தேர்தலில் தோல்வியடைந்தவேளை புதிய நம்பிக்கைகள் காணப்பட்டன,அதிகளவு கருத்துச்சுதந்திரம் காணப்பட்டது,தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் காணப்பட்ட ஒடுக்குமுறை மிகுந்த இராணுவமயப்படுத்தபட்ட சூழ்நிலையில் முன்னேற்றம் ஏற்படத் தொடங்கியது.

அவ்வேளை புதிய அரசாங்கம் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானத்திற்கு அனுசரணை வழங்கியது,
ஆனால் மீண்டும் அச்சம் திரும்பியுள்ளது,வடக்குகிழக்கில் உள்ள தமிழ் சமூகத்தினர் அதிகரிக்கும் துஸ்பிரயோகங்களை சந்தித்துள்ளனர்,கடந்த வருடம் முதல் சுதந்திர தின நிகழ்வுகளில் தமிழில் தேசியகீதம் பாடப்படுவது கைவிடப்பட்டுள்ளது.
சிறுபான்மை தமிழர்களின் மத உரிமைகள் தாக்குதலிற்கு உட்பட்டுள்ளன,இந்து ஆலயங்கள் தலையீடுகளை சந்திக்கின்றன.
2015 இல் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவைக்கு இலங்கை வழங்கிய வாக்குறுதிகளை 2020 இல் ராஜபக்ச அரசாங்கம் கைவிட்டது.

2015 தீர்மானத்திற்கு ஆதரவளித்த பாதிக்கப்பட்ட குடும்பங்களின் உறுப்பினர்கள் செயற்பாட்டாளர்களை அது அச்சுறுத்துகின்றது.
முன்னைய அரசாங்கத்தின் அரசியல்பழிவாங்கல் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு மனித உரிமைதுஸ்பிரயோகங்களில் ஈடுபட்டவர்கள் என குற்றச்சாட்டு சுமத்தப்பட்டவர்களை விடுதலை செய்துள்ளது.
யுத்த குற்றங்களுடன் தொடர்புபட்ட பலர் முக்கிய பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

ராஜபக்ச அரசாங்கம் பொறுப்புக்கூறல் குறித்த முழுமையான வெறுப்பை வெளியிட்டுள்ளது,கடந்த செப்டம்பரில் சிரேஸ்ட இராணுவ அதிகாரிகளிற்கு எதிரான மனித உரிமை பேரவையின் குற்றச்சாட்டு குறிப்பிடத்தக்க ஆதாரங்கள் அற்றது ஏற்றுக்கொள்ள முடியாதது என தெரிவித்திருந்தது.

அரசாங்கத்தின் நடவடிக்கைகளை – அவைநீதிக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் காணப்படுகின்றன என்பதை ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை அங்கீகரிக்கவேண்டும்.

இலங்கையில் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ள சிறுபான்மை மக்களை பாதுகாப்பதற்கு புதிய தீர்மானம் அவசியம், மிகமோசமான குற்றங்களிற்கு பொறுப்புக்கூறலை உறுதி செய்வதன் மூலம் இதனை சாத்தியமாக்கவேண்டும்.
இலங்கையில் அதிகரித்து வரும் எதிர்கால ஆபத்துக்களை குறைப்பதற்காக இந்தியா ஐக்கியநாடுகளின் ஏனைய உறுப்புநாடுகளுடன் இணைந்து புதிய தீர்மானத்திற்கு ஆதரவளிக்கவேண்டும்Post a Comment

Protected by WP Anti Spam