கேஸ் அடுப்பு பராமரிப்பு!! (மகளிர் பக்கம்)

Read Time:3 Minute, 15 Second

அன்றாடம் சமையலுக்கு நாம் கேஸ் அடுப்புகளைதான் பயன்படுத்தி வருகிறோம். இரண்டு மற்றும் நான்கு அடுப்பு கொண்ட இந்த கேஸ் அடுப்புகள் பல மாடல்களில் வருகின்றன. எதுவாக இருந்தாலும், அதை நாம் சீராக பராமரித்து வந்தால் அதிக நாட்கள் பழுதாகாமல் இருக்கும்.

*கேஸ் அடுப்பு தரையிலிருந்து குறைந்தது இரண்டு அடி உயரத்தில் மேடையில் இருக்க வேண்டும்.

*ஜன்னல்களில் துணித்திரை பயன்படுத்தாமல் கம்பி வலை பொருத்தினால், கேஸ் அடுப்புக்கு பாதுகாப்பு, தீ விபத்தும் ஏற்படாது.

*சிலிண்டரின் அருகில் ஊதுவத்தி, மெழுகுவர்த்தி, சிம்னி விளக்கு, கெரசின் ஸ்டவ் போன்ற ெபாருட்கள் வைக்கக் கூடாது. சிலிண்டரை நிமிர்த்தியே வைக்க வேண்டும்.

*கூடுதல் சிலிண்டரை சமையல் அறையில் வைப்பதைத் தவிர்த்து வேறிடத்தில் வைக்க வேண்டும்.

*கேஸ் ட்யூப் ஒரு மீட்டர் நீளத்துக்குக் குறைவாய் இருக்க வேண்டும்.

*சூடான பொருட்களை ட்யூபின் அருகில் வைக்கக் கூடாது.

*கேஸ் ட்யூபை தண்ணீரால் மட்டுமே சுத்தம் செய்ய வேண்டும். சோப், எண்ணெய் போன்றவற்றால் சுத்தம் செய்தால் குழாயிலிருந்து ட்யூப் வெளியே வந்து கேஸ் லீக்காகும் வாய்ப்புஉள்ளது.

*ட்யூப், ஸ்டவ், சிலிண்டரின் குழாயில் அழுந்தப் பொருத்தியிருக்க வேண்டும்.

*மேடை, கேஸ் அடுப்பு கழுவும்போது சோப்பு பவுடருடன் சிறிது ஷாம்பு கலந்து தேய்த்து துடைத்தால் சுத்தமாக இருக்கும்.

*தினமும் இரவு சாப்பிட்டு முடித்ததும், கேஸ் அடுப்பை வெதுவெதுப்பான நீரில் நனைத்த துணியால் துடைத்துவிட வேண்டும்.

*கேஸ் அடுப்பு மீதோ, பர்னர் மீதோ உணவுப் பண்டங்கள் சிந்தி விட்டால், உடனே ஒரு துணியால் துடைத்துவிட்டால், கறை, காய்ந்து போகாது, சுத்தம் செய்வதும் எளிது.

*கேஸ் அடுப்பு மிதமான சூட்டில் இருக்கும்போதே துடைத்துவிட்டால் பிசுக்கு, கறை, அழுக்கு போன்றவை நீங்கி சுத்தமாக இருக்கும்.

*பாலோ, சாம்பார் போன்றவையோ பொங்கி வழியாமல் அருகிலிருந்து கவனித்துக்கொண்டால் கேஸ் அடுப்பு, பர்னர், பிசுக்கு, கறை, அழுக்கு படியாமல் இருக்கும். சுத்தம் செய்வதும் சுலபம்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இலங்கையில் அதிகரித்து வரும் எதிர்கால ஆபத்து!! (கட்டுரை)
Next post காதல் மட்டும் போதுமா? (மகளிர் பக்கம்)