வாழைப்பழத்தோலை தூக்கி எறியாதீங்க !! (மகளிர் பக்கம்)

Read Time:2 Minute, 50 Second

வாழைப்பழம் எல்லோருக்கும் விருப்பமான பழம்தான். ஆனால் வாழைப்பழத்தின் தோலின் பலன்களை நாம் தெரிந்துகொண்டால் அதை தூர வீசி எறிய மாட்டோம்.

*கைகளிலோ, பாதத்திலோ மரச்சில்லுகள் அல்லது முள் குத்தினால் குத்திய இடத்தில் வாழைப்பழத்தோலை மெல்ல தடவி, பின்னர் அந்த இடத்தைச்சுற்றி அழுத்தம் கொடுத்தால் எளிதில் முள் வெளியே வந்துவிடும்.

*சொரியாசிஸ் போன்ற சரும நோய்களால் சருமம் சிவந்து தடித்து காணப்படும். பாதித்த இடங்களில் வாழைப்பழத்தோலை தேய்த்தால், எரிச்சல் நீங்கி, சருமம் இயல்பு நிலைக்கு மாறும். சருமத்தில் ஈரப்பதம் அளித்து, அரிப்பைத் தடுக்கும்.

*மருக்கள் இருந்தால் அது சரும அழகையே பாதிக்கும். வாழைப்பழத்தோலினை மருக்கள் மீது தேயுங்கள். பின் வாழைப்பழத்தோலினை மருக்கள் மீது வைத்து ஒரு துணியினால் கட்டி ஒரு இரவு முழுவதும் வைத்திருங்கள். நாளடைவில் மருக்கள் மாயமாய் மறைந்து விடும்.

*ஏதாவது சிறு பூச்சி கடித்தால் அல்லது வேறு பிரச்னைகளால் சருமம் தடித்து, அரிப்பு ஏற்பட்டால் வாழைப்பழத்ேதாலை ஃபிரிட்ஜில் வைத்து அதன்பின் அதனை எரிச்சல் மற்றும் அரிப்பு இருக்கும் இடத்தில் தடவினால் விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

*முகப்பருவை எளிதில் போக்க வாழைப்பழத்தோலிலிருக்கும் ஒரு என்ஸைம் சருமத்தின் துவாரங்களில் சென்று பாதிக்கப்பட்ட இடத்தில் செயல் புரிகிறது. இதனால் முகப்பருக்கள் குறைந்து, அதனால் ஏற்படும் தழும்புகளும் மறையும்.

*மஞ்சள் கறை இல்லாமல் வெண்மையான பற்கள் பெற வேண்டுமானால் தினமும் பல் விளக்கிய பின் காலையிலும், இரவிலும் வாழைப்பழத்தோலினைக் கொண்டு பற்களைத் தேய்த்தால் பற்கள் பளீரென மின்னும்.

*காயங்கள் ஏதும் ஏற்பட்டால் தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிடுங்கள். அதன் தோலை காயத்தின் மேல் பூசுங்கள். உடல் ஆரோக்கியத்துக்கும் நல்லது. காயமும் விரைவில் ஆறிவிடும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அமெரிக்க உளவுத்துறையின் கதை!! (வீடியோ)
Next post டிப்ஸ்… டிப்ஸ்… டிப்ஸ்…!! (மகளிர் பக்கம்)