சிறுநீரக கல்லடைப்பா கவலையை விடுங்க!! (மருத்துவம்)

Read Time:9 Minute, 36 Second

நம்மில் பலருக்கும் சொல்ல முடியாத உடல் உபாதையை தருவது சிறுநீரக கல்லடைப்பு, தலைவலி, வயிற்றுவலி, இடுப்பு மூட்டுகளில் வலி, வாந்தி, குளிர், படுக்கவோ, இருக்கவோ முடியாமல் அனைத்து விதமான உடல் உபாதைகளையும் தரும் நோய் சிறுநீரக கல்லடைப்பு. சில பகுதிகளில் உள்ள நிலத்தடி நீரும் கூட கல் உருவாக காரணமாகி விடுகிறது. முன்பு அறுவை சிகிச்சை என்ற நிலை ஆங்கில மருத்துவத்தில் இருந்தாலும் தற்போது லேப்லோஸ்கோபி என்ற எளிய நுண்துளை அறுவை சிகிச்சை மூலம் சிறுநீரக கல் அகற்றப்படுகிறது. ஆனால் கத்தியின்றி, ரத்தமின்றி, எளிதான பாரம்பரிய உணவு பழக்கம் மற்றும் கல் உருவானால் அதனை கரைக்க மிக எளிதான மருத்துவ முறைகள் நமது சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் உள்ளன. இதுபற்றி மைலாடி ஆயுர்வேத மருத்துவர் பிரேசில்லா சாரோன் இஸ்ரேல் கூறும் ஆலாசனைகளை கேட்போம்.

உருவாகும் விதம்:

இரத்தத்தில் உள்ள கழிவுகளை சுத்திகரித்து அதனை சிறுநீரக வெளியேற்றி ரத்த அழுத்தம் மற்றும் எலக்ட்ரோலைஸ் (தாது உப்புக்கள்) சமநிலை படுத்துவது சிறுநீரகத்தின் வேலலை. பில்டர் ஹவுஸ் போன்று செயல்பட்டு தீயவனவற்றை அகற்றும் புனிதமான பணியை மேற்கொள்ளும் சிறுநீரகத்தில் சுண்ணாம்பு துகள்கள் ஆக்சலேட், மெக்னீசியம், அமோனியம் போன்ற வேதிபொருட்களின் கூட்டு சேர்க்கையே சிறு சிறு கல் போன்று மாறுகிறது. இனை ரீனல் கேல்குலைஸ் (neprolithiasis) என்றும் கூறலாம்.

சிறுநீரகத்தில் மூத்திரகுழாய் மற்றும் மூத்திரபைகளில் இக்கல் காணப்படும். இந்நோய் 20 முதல் 30 வயதுடைய ஆண்களை அதிகம் பாதிக்கிறது. பெண்களுக்கு யூரிக் அமிலம் தன்மையினால் கல் உருவாகிறது.

சிறுநீரில் உள்ள உப்பு மற்றும் துகள்கள் ஒன்றையொன்று வசீகரித்து கற்கண்டு போல் உருவாகும். இக்கற்களின் அளவு பலவிதங்களில் உள்ளது. ஒருநாளைக்கு ஒரு லிட்டருக்கு குறைவாக சிறுநீர் கழிக்கும் நபர்களிடம் அதிகமாக இந்த பாதிப்பு உள்ளது. இருபக்க சிறுநீரகங்களிலிருந்து யூட்டர் வழியாக சிறுநீரக பையை அடைகிறது. பையில் சேமிக்கப்படும் நீர் யூரித்திரா மூலம் வெளியேறுகிறது. இந்த இடைவெளியில் அதிக நேரம் சிறுநீர் தேங்கி நிற்கும் போது தான் சிறிய துகள்கள் தொகுக்கப்பட்டு படிவகற்களாக மாறுகின்றது.

காரணங்கள்:

கால்சியம் ஆக்சலேட், அமோனியா, சிஸ்டைன் உள்ள உணவுகளை அதிகம் சாப்பிடுவதாலும் அதிகமான வைட்டமின் டி சத்தால் கால்சியம் அதிகம் கிரகிக்கப்பட்டு கால்சியம் கல் உருவாகிறது. அதிகமாக நீர் வெளியே செல்வதாலும் ஹைபர் தைராய்டிசம்(hyper para thyroidism) உள்ளவர்களிடமும் கல் உருவாகும். அதிகப்படியான புரோட்டீன், நார்சத்தில்லா உணவு அதிகம் சாப்பிடுவது. அதிக நேரம் ஒரே இடத்தில் இருப்பது குடும்ப பூர்வீகம் காரணமாகவும் கல் வரலாம்.

அறிகுறி:

சிறுநீர் குழாயிலோ, பையிலோ யூரித்திராலிஸ் கல்லினால் தடங்கள் ஏற்படும்போது வலியினால் உள்ள அறிகுறி இருப்பின் இருபக்கமும் பின்பகுதியில் தாங்க முடியாத கூர்மையான வலி பின்பகுதியில் தொடங்கி கால்களின் இடையோடு பரவும். வேதனையினால் ஒரு நிலையில் இருக்க முடியாமலும், வாந்தி வரும். வாந்தி வருவது போன்று அவதியும் இருக்கும். சிறுநீரில் ரத்தமும் வெளியேறும், அடிக்கடி சிறுநீர் முட்டும் சிறுநீர் குழாயில் நோய் தொற்றி காய்ச்சல் குளிர் ஏற்படும்.

விதங்கள்

கற்கள் பலவடிவ அளவுகளில் வருகிறது. 1. கால்சியம் கற்கள் 2. யூரிக் அமிலம் (காபி கலரில் மென்மையானது) 3. ஸ்டுருவைட் கற்கள் (struvite)(mg.nh3) 4. மஞ்சள் நிறத்தை ஒத்த கடுமையான கல் (systimestrue) 5. மான் கொம்பு போன்ற வடிவில் சிறுநீரகத்தில் பரந்து இவ்வகை கல் அதிகம் துன்பம் தரும் (stage horn stonr).

முரண்பாடான சிக்கல்கள்:

யூரினரி பாதையில் நோய்தொற்று ஏற்படும். சிலநேரங்களில் சிறுநீரகத்தில் உள்ள நெப்ரான் செல்களை பாதிக்க செய்கிறது. ஒருவருக்கு சிறுநீரகக் கல் ஒருமுறை ஏற்பட்டால் மறுபடியும் வரும் வாய்ப்புகள் உண்டு.

கண்டறியும் முறை:

சிறுநீர் பரிசோதனையில் கிருமிகளோட காஸ்ட் அல்லது கிறிஸ்டல்கள் இருக்கிறதா எனப்பார்க்க வேண்டும். நுண்ணோக்கியில் கிறிஸ்டல்களை பார்க்கும் போது அவை செவ்வக வடிவில் ஒளிரும். இரத்த பரிசோதனை மூலம் சிறுநீரக செயல்பாடு, கால்சியம் அளவை கண்டறிந்து கரைக்கலாம். கிரியாட்டின் அளவை அறியலாம். சி.டி ஸ்கேன் மூலம் துல்லியமாக அறியலாம். எக்ஸ்ரே மற்றும் அல்ரா சவுண்ட் ஸ்கேன் மூலமும் அறியலாம்.

சிகிச்சை:

4 மி்.மீ அல்லது 2இஞ்ச் விட்டமுள்ள கற்கள் யூரின் மூலம் வெளியேற அதிகநீ்ர் மற்றும் டை யூரிடிக் மருந்து மூலம் வெளியேறலாம். கல் 6மி.மீ முதல் 7 மி.மீ விட்டத்தில் இருந்தால் வலி அதிகரிக்கும் எனவே உடனடி சிகிச்சைகளான லித்தோ டிரிப்சி எனும் சிகிச்சை மூலம் கல்லை எக்ஸ்ரே மூலம் கண்டறிந்து மின் அலைகள் மூலம் கற்களை சிறிதாக உடைத்து சிறுநீர் மூலம் வெளியேறலாம். பெர்கியூட்டோனியஸ் செப்ரோ லித்தோ டிரிப்சி மூலம் முதுகில் சிறுஅறுவை சிகிச்சை மூலம் கற்களை உடைக்கலாம்.

அறுவை சிகிச்சை

ஸ்டேஜ் ஹார்ன் போன்ற கற்களோ சிறிய சிறுநீரகமோ இருந்து பெரிய கல் இருந்தால் மேற்கண்ட இருகிசிச்சை முறைகளும் உதவாது. அறுவை சிகிச்சை வழி யூரிக் ஆசிட் கற்களுக்கு காரத் தன்மை திரவம் மூலம் சிகிச்சை செய்யலாம்.

மூலிகை சிகிச்சை:

மாவிலங்கபட்டை, நெருஞ்சி, பூளம்பூ, முக்கிரட்டை, கொள்ளு, போன்றவை கற்களை உடனடியாக கரைக்கலாம். வாழைத்தண்டு, முள்ளங்கியும் சிறந்த நிவாரணி.

உணவுமுறை.

கால்சியம் அதிகமுள்ள தக்காளி, திராட்சை, கேரட், காலிபிளவர், முட்டைகோஸ், பால், சீனிக்கிழங்கு சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. ஆக்சலேட் அதிகமுள்ள பீட்ரூட், பாதம், பட்டாணி, முந்திரி பருப்பு, சோயா, சாக்லெட், தவிர்க்கலாம். ஓட்ஸ், கோதுமை, கஞ்சி அதிகம் சாப்பிடலாம். காபி, டீ, மதுபானங்கள் தவிர்க்க வேண்டும். மாமிசத்தில் மீன், மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி, மற்றும் உப்பு தவிர்ப்பது நல்லது.

உடனடி தீர்வுக்கு வாழைத்தண்டு

சிறுநீரக கற்களுக்கு வாழைத்தண்டு மற்றும் முள்ளங்கி சாறு சிறந்த மருந்தாகும். காண கசாயமும் (கொள்ளு) துளசி கசாயமும் போட்டு அருந்தலாம்.

எலுமிச்சை சாறு 4 கரண்டி 3 வேளை சாப்பிட்டால் சிறுநீரக கல் மற்றும் பித்தகல்லும் வெளியேறும். (எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் தன்மை சுண்ணாம்பு தன்மையை கரைக்கும்)

2 கரண்டி ஆப்பிள் சீடரை வினிகருடன் ஒரு கரண்டி தேன் ஒரு கரண்டி வெந்நீரில் கலந்து சாப்பிடலாம்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கல்லீரல் சுருக்கமும் பாதிப்பும்!! (மருத்துவம்)
Next post மிரளவைக்கும் உண்மை சம்பவம் ! (வீடியோ)