கேப்ஸ்யூல்: மீன் எண்ணெய் மாத்திரை!!! (மருத்துவம்)

Read Time:1 Minute, 53 Second

மீன் எண்ணெய் மாத்திரைகளை தினமும் எடுத்துக் கொள்வது நல்லதா? டாக்டர் வாணி விஜய் (பொதுநல மருத்துவர் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்): மீன் எண்ணெய் மாத்திரை ஒரு சிறந்த ஆன்டிஆக்சிடென்ட். உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. சரும செல்களின் சேதாரத்தை கட்டுப்படுத்தி, சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படாமல் பளபளப்புடன் இருக்கச் செய்கிறது. வயதை குறைத்துக் காட்டுகிறது. மீன் எண்ணெய் மாத்திரையில் ஒமேகா 3 எனப்படும் கொழுப்பு அமிலமும், வைட்டமின் ஏயும் மட்டுமே உள்ளன.

ஒமேகா 3 கொழுப்பு அமிலம் இதயத்துக்கு நல்லது. கொழுப்பில் கரையும் வைட்டமினான ஏ அதிக அளவு உடலில் சேர்ந்தால் ‘ஹைபர்வைட்டமினோசிஸ்’ என்னும் பிரச்னையை ஏற்படுத்திவிடும். இதனால் கல்லீரலில் தேவைக்கு அதிகமான வைட்டமின்கள் சேர்ந்து, சருமம் கரடுமுரடாக மாறுவது, முடி கொட்டுவது போன்றவை ஏற்படும். 20 வயதில் இருந்து 40 வயது வரை உள்ளவர்கள் தினமும் ஒரு மாத்திரை எடுத்துக்கொண்டாலே போதும். 45 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு வைட்டமின்களை விட கால்சியம், மக்னீஷியம், துத்தநாகம் போன்ற தாதுச்சத்துகளே அவசியம். இவர்கள் ஒரு நாள் விட்டு மீன் எண்ணெய் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நீர்வை பொன்னையன் குறித்து ந. இரவீந்திரனின் மனப்பதிவு !! (கட்டுரை)
Next post Ladies.. that three days? (மருத்துவம்)