இலங்கையர்கள் இழந்த உறவினர்களிற்காக காத்திருக்கின்றனர் – அராப் நியுஸ்!! (கட்டுரை)

Read Time:10 Minute, 10 Second

இலங்கையின் வடபகுதியில் உள்ள மன்னாரின் பள்ளிமுனை கிராமத்திலிருந்து மனுவல் உதயச்சந்திரவின் மகன் Anton Seerado காணாமல்போய் 13 வருடங்களாகின்றன.
ஆனால் இன்றும் நான்கு பிள்ளைகளின் தாயான அவர் தனது மகனின் வருகைக்காக காத்திருக்கின்றார்.

இது இன்னமும் முடிவிற்கு வரவில்லை என அவர் அராப் செய்திக்கு தெரிவித்தார்.
இலங்கையின் 26 வருடகால யுத்தத்தில் இழைக்கப்பட்ட குற்றங்களை விசாரணை செய்வதற்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அலுவலகம் ஆணையைப் பெற்று ஒரு வார காலத்தின் பின்னர் அவர் இதனை தெரிவித்தார்.

அரசாங்கத்திற்கும் பிரிவினைவாத தமிழீழ விடுதலைபுலிகளிற்கும் இடையிலான ஈவிரக்கமற்ற மோதல்கள் காரணமாக 80,000முதல்100,000 வரையிலான பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என ஐ.நா. மதிப்பிட்டுள்ளது.

இலங்கையின் பெரும்பான்மை சிங்களவர்களால் பாகுபாடு காட்டப்பட்ட தமிழ் சமூகத்திற்காக தனிநாடொன்றை உருவாக்குவதே தமிழீழ விடுதலைப்புலிகளின் நோக்கமாக காணப்பட்டது.
யுத்தம் 2009 இல் முடிவிற்கு வந்தது.ஆனால் அதற்கு முன்பாக ஆயிரக்கணக்கானவர்கள் தங்கள் உயிர்களை இழந்தனர்,எண்ணிக்கை தெரியாத அளவானவர்கள் காணாமல்போகச் செய்யப்பட்டனர்.

ஒருநாள் இரவு பொலிஸார் எனது வீட்டிற்கு வந்து எனது மகனைக் கொண்டு சென்றனர் அவருக்கு அப்போது 24 வயது என தமிழ் சமூகத்தைச் சேர்ந்த உதயச்சந்திர தெரிவித்தார்.
ஒரு தசாப்த காலத்திற்கு முன்னர் தனது மகனை இறுதியாக சந்தித்த தருணத்தை அவர் நினைவுகூர்ந்தார்.

அவர் காணாமல்போனது என்றென்றும் நீடிக்கும் துயரம் எனக் குறிப்பிட்ட அவர் நாங்கள் எங்களால் முடிந்தவரை அவரை கண்டுபிடிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு விட்டோம்,அனைத்து முயற்சிகளும் வீணாகிவிட்டன எனவும் தெரிவித்தார்.

இது உதயசந்திர மாத்திரம் அனுபவித்த அனுபவமில்லை.
65 வயது சுபலட்சுமியும் இனப்போரின் போது தனது மகனை இழந்தார்.
நான் எனது மகனைத் தேடி நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் சென்றுவிட்டேன்,அவருக்கு என்ன நடந்தது என்பதைக் கண்டறிவதற்காக 50க்கும் மேற்பட்ட அரச அலுவலகங்களுக்குச் சென்றுள்ளேன் என அவர் அராப் நியுஸுக்குத் தெரிவித்தார்.
தற்போது நான் நம்பிக்கை இழந்துவிட்டேன் என அவர் குறிப்பிட்டார்.

எனினும் இந்த விவகாரத்தை மீண்டும் விசாரணை செய்வதற்கான புதிய விசாரணைகளிற்காக ஆதாரங்களைச் சேகரிப்பதற்கான ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர்அலுவலகத்தின் முயற்சிகள் இலங்கையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தவர்களுக்கு புதிய நம்பிக்கையை அளித்துள்ளன.

தீர்க்ககரமான சர்வதேச நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் இலங்கை மீண்டும் துரிதமாக வன்முறைகளுக்குள் சிக்கலாம் என ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் எச்சரித்ததைத் தொடர்ந்தே கடந்த செவ்வாய்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பிரிட்டன் தலைமையிலானநாடுகளின் புதிய தீர்மானம் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளும் நோக்கில் இலங்கையுத்தம் குறித்து விசாரணை செய்வதற்கு மனித உரிமை ஆணையாளருக்கு புதிய பணியாளர்களையும் அதிகாரத்தையும் 2.8மில்லியன் நிதியையும் புதிய தீர்மானம் வழங்கியுள்ளது.

முன்னாள் அரசியல்வாதிகளும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்தத் தீர்மானம் இலங்கையின் சிறுபான்மையினத்தவர்களுக்கு பெரும் வெற்றி என வர்ணித்துள்ளனர்.
பல வருடங்களாக அவர்கள் துன்புறுத்தப்பட்டுள்ளனர்

துயரங்களை அனுபவித்துள்ளனர் என தமிழர்கள் அதிகமாகவுள்ள கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவம் செய்யும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன் அராப் நியுசிற்கு தெரிவித்துள்ளார்.

இரண்டு வாரங்களிற்கு முன்னர் அவர் சிறுபான்மை சமூகத்திற்கு நீதி கோரி கிழக்கில் உள்ள பொத்துவிலில் இருந்து பருத்தித்துறைக்கு சென்ற பேரணிக்கு ஆர்ப்பாட்டக்காரர்களிற்கு தலைமைதாங்கினார்.

குறிப்பாக கொரோனா வைரசினால் உயிரிழந்த உறவினர்களை அடக்கம் செய்யுமாறு கட்டாயப்படுத்தப்பட்ட முஸ்லீம்களிற்காக நீதி கோரி இந்த ஆர்ப்பாட்ட பேரணி முன்னெடுக்கப்பட்டது என அவர் தெரிவித்தார்.

உடல்களை பலவந்தமாக தகனம் செய்தமை குறித்த சீற்றமும் புர்கா தடை குறித்த யோசனையும் சர்வதேச சமூகம்இலங்கைக்கு எதிராக செல்வதற்கு தூண்டியது என சாணக்கியன் தெரிவித்தார்.
இலங்கை தனது வழிவகைகளை மாற்றிக்கொள்வதற்கும் சிறுபான்மை சமூகங்களை துன்புறுத்துவதை நிறுத்திக்கொள்வதற்கும் இது வழிவகுக்கவேண்டும் என அவர்தெரிவித்தார்.

ஐ.நாவின் முயற்சிகளை மனித உரிமைஅமைப்புகளும் செயற்பாட்டாளர்களும் வரவேற்றுள்ளனர்.
யுத்தத்தின் போதுஇடம்பெற்ற குற்றங்கள் குறித்த ஆதாரங்களை சேகரிப்பது என்ற ஐநாவின் முடிவு எதிர்காலத்தில் குற்றங்கள் நிகழாது என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என மன்னாரின் சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் மனித உரிமை செயற்பாட்டாளர் தெரிவித்தார்.
இந்தியாவும் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்திருக்கவேண்டும் அங்கு 8 கோடி தமிழர்க்ள வாழ்கின்றனர் என அவர் தெரிவித்தார்.

அங்கு பெருமளவு தமிழர்கள் வாழ்வதை கருத்தில் கொள்ளும்போது இந்தியா வாக்களிப்பை தவிர்த்தது ஏமாற்றமளிக்கின்றது என அவர் குறிப்பிட்டார்.

இலங்கை தமிழர்கள் இந்தியாவை துன்பத்தின் போது தங்களின் சகாவாக கருதிவந்துள்ளனர் என தெரிவித்த அவர் வாக்கெடுப்பை தவிர்த்ததன் மூலம் இந்தியா தங்களை மோசமாக கைவிட்டுள்ளது என குறிப்பிட்டார்.

இதேவேளை இந்தத் தீர்மானம் காரணமாக சர்வதேச அளவில் இலங்கையின் கௌரவம் பாதிக்கப்பட்டுள்ளது என சிரேஷ்ட பத்திரிகையாளர் அமீன் இசாடின் தெரிவித்தார்.
தீர்மானம் இலங்கையை கட்டுப்படுத்தாவிட்டாலும் தீர்மானத்தை பின்பற்றாவிட்டால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை இலங்கை உணர்ந்துள்ளது என அவர் தெரிவித்தார்.

சில மேற்குலக நாடுகளும் அவர்களின் சகாக்களும் இலக்குவைக்கப்பட்ட தடைகளை விதிக்கலாம்,என தெரிவித்த அவர் இலங்கை இந்த சவால்களை வெல்வதற்கு சீனாவையும் ரஸ்யாவையும் பெரிதும் எதிர்பார்த்துள்ளது எனவும் தெரிவித்தார்.

பூகோள அரசியலும் காணப்படுவதால் இலங்கைக்கு காய்நகர்த்தலுக்கான வாய்ப்பு கிடைக்கலாம் எனவும் தெரிவித்தார்.
ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டியது இலங்கையின் பொறுப்பு எனத் தெரிவித்த ஐநாவிற்கான முன்னாள் இராஜதந்திரி தயான் ஜெயதிலக அல்லது இலங்கை விளைவுகளை எதிர்கொள்ள வேண்டி வரும் எனவும் தெரிவித்தார்.

தீர்மானம் குறித்து இலங்கை கடுமையான நிலைப்பாட்டை எடுத்தால் ஐ.நா.வின் சில நாடுகளின் நடவடிக்கையினால் உருவாககூடிய பாதிப்பை அது எதிர்கொள்ளவேண்டும் எனவும் தயான் ஜெயதிலக தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண்களை லாக் செய்யும் லாக்டவுன்!! (மகளிர் பக்கம்)
Next post பலரும் நமக்கு சொல்ல தவறிய மிரளவைக்கும் வெறித்தனமான விஷயங்கள்!! (வீடியோ)