ஹபரணைத் தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டனம் !

Read Time:1 Minute, 58 Second

usa1.jpgநிராயுதபாணிகளான இலங்கைக் கடற்படையினர் மீது புலிப்பயங்கரவாதிகள் மேற்கொண்ட மிலேச்;சத்தனமான தற்கொலைத் தாக்குதலை அமெரிக்கா வன்மையாகக் கண்டித்துள்ளது. புலிகள் நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் கொழும்பு ஹபரண வீதியிலுள்ள தம்புள்ளை, திகம்பதன எனுமிடத்தில் வைத்து கடற்படையினரின் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்தினர். இதில் 103கடற்படை வீரர்கள் பலியானதுடன் 116 பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக ஐக்கிய அமெரிக்கா விடுத்துள்ள அறி;க்கையொன்றிலேயே இவ்வாறு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

இலங்கை கடற்படையினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில்; உயிரிழந்த 90 படையினர் மற்றும் பொது மக்கள் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அநுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இத்தாக்குதலுக்கு எவரும் உரிமை கோரதபோதிலும், தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட பாணி எல்.ரீ.ரீ.ஈ. பயங்கரவாதிகளுடையதே. எல்.ரீ.ரீ.ஈ. யினர் வன்முறைகளைக் கைவிடவேண்டும் என்பதே எமதும் சர்வதேச சமூகத்தினதும் நிலைப்பாடாகும்.

வன்முறைகளை நிறுத்தி பேச்சுவார்த்தை மேசைக்கு வருவதன் மூலமே இலங்கை இனப்பிரச்சினைக்கு நிலையான அரசியல் தீர்வொன்றினைக் காணமுடியும் எனவும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ராணுவ விமானங்கள் சரமாரி குண்டு வீச்சு: விடுதலைப்புலிகளை பழிவாங்க ராணுவம் அதிரடி தாக்குதல்
Next post மதுரை இடைத் தேர்தலில் திமுக அமோக வெற்றி திமுக50994: அதிமுக19909: தேமுதிக17394