By 13 April 2021 0 Comments

குழந்தை வளர்ப்பில் பெற்றோர் செய்யும் தவறுகள்!! (மருத்துவம்)

எப்போதும் பெற்றோரின் பிரச்னைகள் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறோம். குழந்தைகளை எப்படி கையாள்வது என்ற ஆலோசனைகளுக்கும் இங்கு பஞ்சமில்லை. ஆனால், குழந்தைகள் பெற்றோரிடம் எதிர்பார்ப்பது என்னவென்பது பற்றிய விவாதங்கள் இங்கு இல்லை.

உண்மையில் குழந்தைகள் தங்கள் பெற்றோரிடம் பல்வேறு நம்பிக்கைகளையும், கனவுகளையும் கொண்டிருக்கிறார்கள். உளவியல் நிபுணர்கள் குழந்தைகளின் எதிர்பார்ப்பு பற்றி குறிப்பிடும் இந்த விஷயங்களை இனிமேலாவது பெற்றோர் கவனத்தில் கொண்டால், நீங்களும் ஒரு மிகச்சிறந்த பெற்றோர்தான்!

பொதுவாக எல்லா பெற்றோர்களும் தத்தம் குழந்தைகளுக்கு வளமான வாழ்க்கை அமைய வேண்டும் என்றுதான் நினைக்கின்றனர். அவர்களில் ஒரு தரப்பினர், தங்களால் விதவிதமான விளையாட்டுப் பொருட்கள், பொம்மைகள் வாங்கித் தர முடியும் என்பதால் அதை வாடிக்கையாகவும் கொண்டு உள்ளனர்.

மேலும், இவர்கள் தங்களுடைய குழந்தைகள், அவரவர் விருப்பமானவற்றைத் தேர்ந்து எடுத்துக் கொள்வதற்கான வாய்ப்புகளையும் உருவாக்கி தந்து, முக்கியமான தருணங்களில், அவர்களாகவே, தங்களுக்கு எது தேவை எது தேவையில்லை? என்பதை முடிவு செய்து கொள்ள வேண்டும் என்பதையும் கற்றுத் தருகிறார்கள்.

மற்றொரு தரப்பு பெற்றோரோ, தங்களுடைய மகள்/மகன் ஒழுக்க நெறியில் சிறந்தவராகவும், வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டு இருக்க வேண்டுமென கருதுகின்றனர்.

இதற்காக, இவ்வகை பெற்றோர் தங்களுடைய வாரிசுகளிடம், கண்டிப்பு மிக்கவராக நடந்து கொள்கின்றனர். இரண்டு தரப்பு பெற்றோரும்/குடும்பத்தினரும் தத்தம் குழந்தைகளை வளர்த்தெடுப்பதன் பின்னணியில், தனித்தனி பாணிகளைக் கையாண்டாலும் ஒருவிதத்தில் இணைந்துப் போகத்தான் செய்கின்றனர்.

அவர்களை அறியாமல் செய்திடும் ‘தவறுகள்’ தான் அந்த இணைப்புத் தளம். அந்த தவறுகள் என்னென்ன என்பதையும், அவற்றால், எந்தெந்த மாதிரியான வேண்டாத விளைவுகள் ஏற்படும் என்பதையும் சற்று காண்போம்நேரம் செலவிடுவதை விரும்பாத
மனப்பான்மைஎந்தவொரு பெற்றோரும் குழந்தைகளுடன் விளையாடியும், கதைகள் சொல்லியும் பொழுதைப் போக்கவே விரும்புகின்றனர். ஆனால், துரதிஷ்டவசமாக, பெற்றோர் இருவருக்கும் வீட்டில் குறைவான ஓய்வு நேரமே கிடைக்கிறது.

இத்தகைய சூழலில், குழந்தை விளையாடுகிற நேரங்களில் பெற்றோர் தங்களது பணிகளைச் செய்து கொள்வது வாடிக்கை ஆகிவிட்டால் ஏற்கனவே, வளரத் தொடங்கிய குழந்தை தனது வாழ்க்கையைத் தானே தீர்மானிக்க ஆரம்பிக்கிறது. கடந்துபோன மணித்துளிகளை மீட்டெடுக்க எந்தவொரு வழியும் கிடையாது.

எனவே, மென்மையான அரவணைப்பு, தலையை வருடிக் கொடுத்தல் என உடலளவில் குழந்தையோடு நெருக்கமாக இருக்க முயற்சி செய்யாமல், மனதளவிலும் நெருங்கி இருங்கள். அப்போதுதான் நீங்கள் சேர்ந்து இருக்கும் பொழுதுகளை ரசித்து அனுபவிக்க முடியும்.

அரவணைக்காமல் இருத்தல் ஒருவரையொருவர் அன்னியோன்யமாக ஆரக் கட்டித்தழுவி அரவணைத்துக் கொள்வதால், மனது மற்றும் உடல் ஆரோக்கியத்துக்குப் பலவிதமான நன்மைகள் கிட்டுகின்றன என அறிவியலாளர்கள், அரவணைப்பின் முக்கியத்துவத்தை நிரூபித்து உள்ளனர். கட்டித்தழுவிக்கொள்வதால் வெளிப்படையாக ஏராளமான பயன்கள் உண்டாகின்றன. ஒருவேளை, நீங்கள் உங்கள் குழந்தையை அரவணைப்பது இனிய அனுபவம் என ஏற்றுக்கொள்ளலாம்.

மழலை போன்ற நெருக்கமான உறவுகளைக் கட்டித்தழுவி கொஞ்சுதல் நல்ல அனுபவம் என்றாலும், ஒருசில பெற்றோர் சில நேரங்களில் இதைச் செய்ய விரும்புவது இல்லை. இதற்குப் பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும், பழமைவாதம் அல்லது வழக்கத்தில் இருந்து மறைந்தவை காரணங்களாக முன் வைக்கப்படுகின்றன.

உதாரணத்துக்குக் காதைக் கிட்டே கொண்டு வாருங்கள்… உங்கள் குழந்தைகளை அடிக்கடி அரவணைக்கும் பழக்கம் உடையவராக நீங்கள் இருந்தால், செல்லம் அதிகமாகி ஒரு கட்டத்தில், அதை அவர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளகூடும்… உங்கள் சந்தேகம் இதுதானே. இந்த எண்ணமும் தவறானதுதான்.

தங்க நிமிடங்களைத் தவற விடுதல் ‘நீங்கள் சிறந்த பெற்றோர்’ என்ற பெயர் எடுப்பதற்கு, உங்களுடைய வாரிசுகளின் பால்ய காலங்களைப் புகைப்படமாகவோ, வீடியோவாகவோ எடுத்து வைப்பது உதவும் என்று சொல்லப்படுகிறது. ஒருவேளை, இவ்வாறு நீங்கள் செய்யாமல் விடுவதால் அது உங்களுடைய மழலைகளின் மன வலிமை, நல்ல பழக்க வழக்கங்கள் அல்லது உடல் நலத்தை எந்த விதத்திலும் பாதிப்புக்கு உள்ளாக்காது. அதேவேளையில், உங்களுடைய ஆவணமாக்கும் இந்த முயற்சி எதிர்காலத்தில் பெரிதும் விரும்பப்படும்.

மேலும், உங்கள் வாழ்க்கையின் இனிய தருணங்களை 18 வயதைக் கடந்த மகன்/மகள் ஆகியோருடன் பகிர்ந்து கொள்ளவும் முடியும். ஆனால், பெரும்பாலான பெற்றோர் கேமரா தங்களிடம் இருந்து அவ்வாறு செய்ய முன் வருவது கிடையாது. செல்போன் அல்லது சிடியில் பதிவு செய்யப்பட்ட வாண வேடிக்கை நிகழ்ச்சிகளை நீங்கள் ஒருபோதும் பார்த்திருக்க மாட்டீர்கள்; ஆனால், தவழ்ந்து கொண்டிருந்த உங்கள் குழந்தை, தட்டுத்தடுமாறி எழுந்து, விரல் பற்றி, சுவர் பற்றி, முதல் காலடி எடுத்து வைத்ததை, நிச்சயமாகப் பல தடவைக் காண ஆசைபடுவீர்கள்.

தொழிநுட்ப வளர்ச்சியால் பல அதிநவீன சாதனங்கள் பயன்பாட்டில் இருந்தும், ஆல்பங்கள்தான் அரிய புகைப்படங்களைப் பத்திரப்படுத்தி வைக்க சிறந்த வழியாக உள்ளன. வரலாறு முக்கியம்ஒரு சில பெற்றோர் தங்கள் குழந்தைகள் கிள்ளை மொழி பேசுவதையும், கவிதையாய் வரைவதையும், கிறுக்குவதையும் பதிவு செய்ய தவறுகின்றனர். ஏனென்றால், இனிமையான நினைவுகளின் தளங்களாக அந்தப் பொக்கிஷயங்கள் திகழும் என்பதை ஏனோ அவர்கள் அறிவது இல்லை. இவை இல்லாமல் உங்களால் வாழ்ந்து விடக் கூடும். ஆனால், இவற்றைப் பத்திரப்படுத்தி வைப்பது, ஒரு கட்டத்தில் மிகவும் நல்லதாக திகழும்.

படைப்பாற்றல் திறனைத் தூண்டாமைநீங்கள் மகள்-மகன் இருவருடன் படைப்பாற்றலை உருவாக்கும் கேம்ஸ்களை விளையாடுவதால், ‘அவர்கள் தலைசிறந்த கலைஞனாகவோ, இசை மேதையாகவோ வருவார்கள்’ என நாங்கள் சொல்லவில்லை. அதே வேளையில், அவ்வதிசயம் நடைபெறுவதற்கு வாய்ப்பு உள்ளது. இதற்கு பெற்றோராக, தாங்கள் ஓடுதல், கால்பந்தாட்டம், சிலம்பம், நீச்சல், ஆடல்-பாடல் என பல்வேறு செயல்களில் அவர்களை ஈடுபடுத்த வேண்டும்; இவ்வாறு செய்வதால், அவர்களுக்கு எதில் ஆர்வம் உள்ளது? எந்தெந்த விளையாட்டுக்களில் அவர்கள் தன்னிகரற்று உள்ளார்கள் என்பதை நீங்கள் கண்டறிய முடியும். மேலும், எதிர்காலங்களில் குழந்தைகளுடைய ஆற்றலை வளர்த்தெடுக்கும் விதமாகவும் உங்களால் செயல்பட முடியும்.

இரண்டாவதாக, எந்தவொரு தனித்திறனைத் தூண்டும் விளையாட்டாக இருந்தாலும், உதாரணத்துக்கு, அவர்களுடன் சேர்ந்து உரக்கப் படித்தல், பொம்மைகள் வைத்து விளையாடுதல் போன்ற எதுவாக இருந்தாலும், குழந்தைகளுடைய அறிவாற்றல், கற்பனைத்திறன் மற்றும் மொழியறிவை வளரச் செய்யும். இறுதியாக, குழந்தைகளின் ஆற்றலுடன் நீங்கள் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ள முடியும். மேலும், நீங்கள் இருவரும் சேர்ந்து சிலவற்றை செய்ய இது போதுமானதாக இருக்கும்.

குழந்தை வளர்ப்பில் அனுபவம் உள்ள பெற்றோர், தத்தம் வாரிசுகளின் திறமைகளை கவனிக்காமல் இருந்ததற்கு வருத்தம் கொள்வார்கள். இருப்பினும், ஒரு சில திறமைகள் மிகச்சிறு வயதிலேயே கண்காணிக்கப்படும்போது, குழந்தைகள் புதுப்புது விளையாட்டுக்களில் ஈடுபடுவதை முயற்சி செய்வார்கள்; மேலும், குறுகிய காலத்துக்குள் வாசிக்கவும் செய்வார்கள்.Post a Comment

Protected by WP Anti Spam