தனிமையை உணரும் ஆண்களுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம்! (கட்டுரை)

Read Time:2 Minute, 34 Second

தனிமையில் இருப்பதாக உணரும் நடுத்தர வயது ஆண்களுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகம் என ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.

கிழக்கு பின்லாந்து பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் மேற்கொண்ட இந்த ஆய்வின் முடிவுகள் சைக்காட்டரி ரிசர்ச் இதழில் வெளியிடப்பட்டுள்ளன.

தனிமையில் இருக்கும்போது அவர்கள் புகைபிடித்தலுக்கு தூண்டப்படுகிறார்கள். இதனால் உடல் எடை அதிகரிப்பு, புற்றுநோய் ஆகியவை ஏற்பட வாய்ப்புள்ளது என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

1980 களில் கிழக்கு பின்லாந்தைச் சேர்ந்த 2,570 நடுத்தர வயது ஆண்கள் இந்த ஆய்வில் பங்கேற்றனர். பதிவு செய்யப்பட்ட தரவுகளின் அடிப்படையில் அவர்களின் உடல்நலம் மற்றும் இறப்பு விகிதம் 2021 வரை கண்காணிக்கப்பட்டுள்ளன.

இதில், ​​649 ஆண்கள் அதாவது பங்கேற்பாளர்களில் 25 சதவீதம் பேர் புற்றுநோய்க்கு ஆளாகினர். மேலும் 283 ஆண்கள் (11 சதவீதம்) புற்றுநோயால் இறந்தனர்.

இதை புற்றுநோய் அதிகரிப்புக்கு தனிமை ஒரு முக்கிய காரணியாக உணரப்பட்டது. தனிமை உணர்வு புற்றுநோய் அபாயத்துடன் தொடர்புடையது என்று இந்த ஆய்வின் மூலமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

வயது, சமூக-பொருளாதார நிலை, வாழ்க்கை முறை, தூக்கத்தின் தரம், மனச்சோர்வு அறிகுறிகள், உடல் நிறை குறியீட்டெண், இதய நோய் உள்ளிட்ட பொதுவான காரணிகளும் புற்றுநோய்க்கு காரணமாகின்றன.

தனிமையினால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தனிமை மோசமான உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும் வழிமுறைகளை இன்னும் விரிவாக ஆய்வு செய்வது முக்கியம். இதன் மூலம் தனிமையால் ஏற்படும் தீங்கையும் குறைக்க உதவும் என்று ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உங்கள் குழந்தையும் ஜீனியஸ்தான்!! (மருத்துவம்)
Next post இந்தத் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும்? (வீடியோ)