போலியோ சொட்டு மருந்து தினம் தள்ளிப்போவது ஏன்? (மருத்துவம்)

Read Time:3 Minute, 15 Second

ஒவ்வோர் ஆண்டும், ஜனவரி மாதத்தில் போலியோ சொட்டு மருத்துவ முகாம் நடைபெறுவது வழக்கம். அதனைத் தொடர்ந்து பிப்ரவரியில் இரண்டாம் கட்ட முகாம் நடத்தப்படும். ஆனால், இந்த ஆண்டு போலியோ சொட்டு மருத்துவ முகாம் இதுவரை நடத்தப்படவில்லை. இதற்கு என்ன காரணம், தேதி மாற்றப்பட்டதாக வரும் தகவல்கள் உண்மையா என்று தமிழக அரசு சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணனிடம் கேட்டோம்…

‘‘ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி மாதம் 15-ம் தேதிக்குள் முதல்கட்ட போலியோ சொட்டு மருத்துவ முகாம் நடத்தப்பட்டுவிடும். அதனைத் தொடர்ந்து பிப்ரவரியில் இரண்டாம் கட்டமாக நடத்தப்படும். கடந்த ஆண்டுகூட ஜனவரி 17-ம் தேதி முதல் கட்ட முகாமும், பிப்ரவரி 23-ம் தேதி இரண்டாம் கட்ட முகாமும் நடைபெற்றது.

ஆனால், இந்த ஆண்டு ஜனவரியில் நடைபெற்றிருக்க வேண்டிய போலியோ சொட்டு மருந்து தினம், தவிர்க்க இயலாத காரணங்களால் மார்ச் மாதத்துக்கு மாற்றப்பட்டிருக்கிறது. மத்திய மற்றும் மாநில அரசுகளின் நல்வாழ்வுத் திட்டங்கள், மருத்துவ முகாம்கள் போன்றவை நிர்வாக ரீதியிலான, அரசுரீதியிலான காரணங்களால் தேதி மாற்றி வைக்கப்படுவது வழக்கம்தான். அந்த வகையிலேயே போலியோ சொட்டு மருத்துவ முகாம் வரும் மார்ச் மாதத்துக்கு மாற்றப்பட்டிருக்கிறது.

போலியோ சொட்டு மருந்து தரப்படுகிற நாட்களில் மணல் வாரி அம்மை, வயிற்றுப்போக்கு ஆகியவற்றை முழுவதுமாக அழிக்கும் விதத்தில் தமிழகம் உட்பட புதுச்சேரி, லட்சத்தீவு, கோவா, கர்நாடகம் ஆகிய பகுதிகளில் மருத்துவ முகாம் நடைபெற்றது.

இதில் பச்சிளம் குழந்தைகள் தொடங்கி, 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் வரை அனைவருக்கும் Measles Rubella என்ற சொட்டு மருந்து போடப்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் உள்ள பொது சுகாதாரத்துறை, பஞ்சாயத்து யூனியன், மாநகராட்சி ஆகியவை மூலமாக இந்த மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.

இதனால்தான் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நடைபெற வேண்டிய போலியோ சொட்டு மருத்துவ முகாம்கள் தேதி மாற்றப்பட்டது. அதாவது போலியோ சொட்டு மருந்து தினம் முதல் மருத்துவ முகாம் மார்ச் 5 அன்றும், இரண்டாம் கட்ட முகாம் ஏப்ரல் 2-ம் தேதி அன்றும் நடத்தப்படும்’’ என்கிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆண்மையின் அடையாளம் ரஷ்யா!! (அவ்வப்போது கிளாமர்)
Next post குழந்தைகளின் நடத்தை மாற்றங்கள்!! (மருத்துவம்)