கதை சொல்லுங்க மம்மி!! (மருத்துவம்)

Read Time:2 Minute, 24 Second

காலையில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப படாதபாடுபடுவதற்குக் கொஞ்சமும் சளைத்ததல்ல… இரவில் அவர்களை தூங்க வைப்பதும். இதுபோல வாண்டு களோடு மல்லுக்கட்டிக் கொண்டிருக்கும் பெற்றோருக்காகவே வெளியாகி விற்பனையில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது ஓர் ஆங்கிலப் புத்தகம்! கார்ல் ஜோஹன் ஃபார்ஸன் எர்லின் என்ற நீளமான பெயருக்குச் சொந்தக்காரர்தான் இந்த புத்தகத்தை எழுதியிருக்கிறார்.

ஸ்வீடனைச் சேர்ந்த இவரது பெயரைப் போலவே, A new way of getting children to sleep: The rabbits who want to fall asleep என புத்தகத்தின் பெயரும் நீளமானதே! ரோஜர் என்ற முயல்குட்டியைத் தூங்க வைக்க முடியாமல் போராடும் அம்மா முயலுக்கு, ஓர் ஆந்தை சொல்லித் தரும் ஐடியாக்கள்தான் கதை! ‘ரேடியோ கேட்டும், கதைகள் கேட்டும் வளர்ந்த பையன்தான் நான்.

ஆமாம்… நான் கொஞ்சம் பழைய தலைமுறை’ என்று சங்கோஜத்துடன் சொல்லும் கார்ல் ஜோஹன், ‘குழந்தைகளுக்கு கதை சொல்லித் தூங்க வையுங்கள்’ என்பதுதான் இந்தப் புத்தகத்தில் சொல்லும் முக்கிய ஆலோசனை. உளவியல் மருத்துவரான ரங்கராஜனிடம் இது பற்றிக் கேட்டோம்… ‘‘கதைகள் கேட்கும்போது குழந்தைகளின் கவனம் ஒரே இடத்தில் குவிந்து மனநிலை அமைதியாகிறது.

இதனால் தூக்கம் எளிதாக வருகிறது. பெற்றோருடனும் குழந்தைக்கு இருக்கும் உறவும் இதன் மூலம் இன்னும் சிறப்பாக அமையும். நான் தனிநபர் இல்லை என்ற நம்பிக்கையும் குழந்தைக்கு ஏற்படும். கார்ல் ஜோஹன் சொல்வதைப் போல, நாமும் இரும்புக்கை மாயாவி முதல் விக்ரமாதித்தன் வரை பல கதைகள் கேட்டு வளர்ந்தவர்கள்தானே’’ என்கிறார் ரங்கராஜன்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post டச் பண்ணாமலே மூட் வரவைக்கணுமா!! (அவ்வப்போது கிளாமர்)
Next post இது வளர்ப்பு விஷயம்!! (மருத்துவம்)