இலங்கையின் தெற்கில் முதல் சம்பவம்: காலி துறைமுகம் மீது புலிகள் திடீர் தாக்குதல்; 17 பேர் சாவு

Read Time:3 Minute, 40 Second

ANI.LTTE.gifஇலங்கைத் தீவின் தென் கோடியில் உள்ள காலி துறைமுகம் மீது, விடுதலைப் புலிகள் புதன்கிழமை அதிகாலை திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் இருதரப்பிலும் சேர்த்து 17 பேர் இறந்தனர். படகுகளில் வந்த 15 விடுதலைப் புலிகளும் 2 கடற்படை வீரர்களும் அங்கேயே இறந்தனர். 15 கடற்படை வீரர்கள் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவத்தை அறிந்தவுடன், காலி நகரில் உள்ள கடை வீதியில் தமிழர்களின் கடைகளை சமூக விரோத கும்பல் சூறையாடியது. இதையடுத்து நகரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

விடுதலைப் புலிகள் 5 படகுகள் நிறைய வெடிமருந்துகளை ஏற்றிக்கொண்டு, மீன்பிடிப் படகுகளைப் போல ஒப்பனை செய்து, இலங்கைக் கடற்படை போர்க்கப்பல்கள் நிற்கும் இடம் நோக்கி வேகமாக வந்தன. தொலைவிலேயே அவற்றை அடையாளம் கண்டுகொண்ட கடற்படையினர் பீரங்கிகளால் அவற்றை நோக்கிச் சுட்டனர்.

அதில் புலிகளின் 3 படகுகள் பற்றி எரிந்தும், உடைந்து சிதறியும் கடலில் மூழ்கின. மற்ற 2 படகுகள் வேகமாக வந்து, வெடித்துச் சிதறின. படகுகளில் வந்த 15 விடுதலைப் புலிகளும் 2 கடற்படை வீரர்களும் அங்கேயே இறந்தனர். 15 கடற்படை வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.

இக் காட்சியைத் துறைமுகத்துக்கு அருகில் உள்ள சாலையில் திரண்ட சிங்களர்கள் கண்டனர். உடனே நகருக்குள் ஓடி கலவரத்தில் ஈடுபட்டனர். காலி நகரில் தமிழர்களும் வசிக்கின்றனர். தமிழர்களின் நகைக்கடைகள் உள்ள வீதியில் 2 கடைகளை உடைத்து அவற்றில் இருந்தவற்றை சமூகவிரோதிகள் சூறையாடினர். போலீஸôர் வானில் சுட்டு அவர்களை கலைந்து ஓடவைத்தனர். பிறகு நகரில் ஊரடங்கு உத்தரவு அமலுக்குக் கொண்டுவரப்பட்டது.

இலங்கையில் கொழும்பு, கண்டி ஆகியவற்றுக்கு அடுத்த 3-வது பெரிய நகரம் காலி. துறைமுக நகரமான இது இலங்கையின் தென் கோடியில் உள்ளது. உலகப்புகழ் பெற்ற சுற்றுலாத்தலமான இது, பாரம்பரிய நகரமாக யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்டது.

மட்டக்களப்பில் விமானப்படை தாக்குதல்: விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்குப் பதிலடி தரும் விதத்தில், இலங்கையின் கிழக்கில் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில் தலைச்சேனை என்ற இடத்தில் விமானப்படையின் 2 விமானங்கள் சரமாரியாக குண்டுகளை வீசின. அதில் ஒரு பெண் உயிரிழந்தார், 2 பேர் காயம் அடைந்தனர்.

பேச்சு நடக்குமா? சுவிட்சர்லாந்து நகரில் அக்டோபர் 28, 29 ஆகிய இரு தினங்களில் சமரச பேச்சு மீண்டும் தொடங்கப்பட உள்ள நிலையில் இத்தாக்குதல் நடந்துள்ளது. எனவே திட்டமிட்டபடி பேச்சு நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post சூடான் டார்பூரில் மீண்டும் கிளர்ச்சிக்கு அழைப்பு
Next post நோபல்பரிசு பெற்முகமது ïனூஸ் அரசியல்கட்சி தொடங்குகிறார்