By 5 August 2021 0 Comments

பாதவெடிப்புக்கு வீட்டு சிகிச்சை!! (மருத்துவம்)

தண்ணீரில் சிறிதளவு உப்பு கலந்து மிதமாக சூட்டில் எடுத்துக் கொள்ளுங்கள். இந்த வெதுவெதுப்பான உப்புத்தண்ணீரில் சுமார் 10 நிமிடங்கள் கால்களை ஊற வையுங்கள். 10 நிமிடங்கள் கழித்து பீர்க்கங்காய் நார் கொண்டு தேய்த்தால் போதும். கடைகளில் கிடைக்கும் பியுமிஸ் ஸ்டோன் (Pumice Stone) கொண்டும் தேய்க்கலாம். உப்பு ஒரு கிருமிநாசினி என்பதால் வெடிப்புகளின் உள்ளே இருக்கும் இடங்களை எல்லாம் சுத்தப்படுத்திவிடும். அதேபோல் ஊறிய இடங்களைத் தேய்ப்பதால் பாதங்களில் இருக்கும் இறந்த செல்கள் உதிர்ந்துவிடும். பாத வெடிப்பு பிரச்னை கொண்டவர்கள் இந்த முறையை நேரம் கிடைக்கும்போதெல்லாம் செய்யலாம்.

* தினமும் இரவு தூங்கச் செல்லும்முன் கால்களை நன்றாகக் கழுவிக் கொண்டு, விளக்கெண்ணெய் தடவிக் கொள்ளலாம்.

* சோற்றுக் கற்றாழையில் உள்ளிருக்கும் ஜெல்லை தினமும் தடவிக் கொண்டு வந்தாலும் வெடிப்புகள் மறையும். பாதமும் மென்மையாகும்.

* ஆலிவ் எண்ணெய் கொண்டும் 15 நாட்களுக்கு ஒருமுறை மசாஜ் செய்துகொள்ளலாம்.



Post a Comment

Protected by WP Anti Spam